தேவனால் அருளப்பட்ட ஒரே ஆராதனை ஸ்தலம் Shreveport, Louisiana USA 65-1128M 1காலை வாழ்த்துக்கள். இந்தக் காலை வேளையிலே இங்கிருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் பழைய விசுவாசப் பாடல்களின் மூலம் நாம் அனுபவிக்கும் இந்த மகத்துவமான ஐக்கியத்தினால் சந்தோஷப்படுகிறோம். நாம் அதை விரும்புகிறோம். நீங்கள் விரும்பவில்லையா? இந்த ஆமென் பல்லவி. அவர் ஆமென் என்றே இருக்கிறார், பாருங்கள். எந்தக் காரியத்திலும் அவர் சொல்வதே கடைசி வார்த்தையாகும். இந்தப் பாடல்கள் பாடப்பட்டபோது நான் அங்கே என்னுடைய பழைய நண்பரான சகோதரர் ப்ரௌனுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் “சகோதரர் பிரான்ஹாம் அவர்களே, நீங்கள் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்களென்பதை நான் நேற்று வரை கண்டு கொள்ளவேயில்லை” என்று கூறினார். “நீங்கள் எதைக் குறித்து, பேசிக் கொண்டிருக்கிறீர்களோ, அதற்குள்ளாக மக்கள் பிரவேசிக்கக் கூடுமானால் வழியிலுள்ள ஒவ்வொரு தடையும் அப்பாலே நீங்கிவிடும்” என்றார். அது முற்றிலும் சரியே. அது சரிதான். அது அப்படியே சரிதான். நீங்கள் மட்டும் அதைப் புரிந்து கொண்டு, பிடித்துக் கொள்ளக் கூடுமானால், பாருங்கள்? 2எனது சிறிய நண்பனான எர்னி ஃபாண்ட்லருடன் பேசிக் கொண்டிருந்தேன் தொலைபேசி மூலம் இணைக்கப்பட்டு தூரத்திலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் உங்களில் சிலர் எர்னியையும் அவர் எவ்விதம் மனமாற்றம் அடைந்தார் என்றும் அவர் எவ்விதம் கர்த்தரண்டை நடத்தப்பட்டார் என்பதையும் நினைவில் கொண்டிருப்பீர்கள் என்று யூகிக்கிறேன். அவருக்கு ஆங்கிலம் அவ்வளவு சரிவர பேச வருவதில்லை; இல்லாவிட்டால் அவரை இங்கு வர வைத்து ஓரிரு வார்த்தைகள் சொல்ல வைக்க விரும்புகிறேன். அவர் பேசும் போது வார்த்தைகளையும் எழுத்துக்களையும் கலந்துவிடுகிறார். அவர் வசிக்கும் ஷெவானோ என்ற இடத்தில் நடந்ததை நான் ஞாபகம் வைத்திருக்கிறேனா என்று கேட்டார். அங்கே ஒரு மனிதர் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே மரித்தார். லுத்தரன் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவரான அந்த மனிதர் மரித்து, தன் இருக்கையிலேயே சாய்ந்தார்... நாங்கள் எல்லோரையும் அமைதியாயிருக்கச் செய்தோம். கர்த்தருடைய வார்த்தையை அவர் மீது பேச, அவர் மீண்டும் உயிர் பெற்றார். அவர் அந்த மற்ற வழியிலே வந்தார். அவர்களால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. நாம் மறுபடியும் அங்கே செல்ல வேண்டுமென்று விரும்புகிறார்கள். 3பிரான்ஸ் நாட்டில், இன்று காலையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பிரெஞ்சுக்காரர்கள் நாம் செய்தியை பிரான்ஸ் தேசத்திற்கு கொண்டு செல்லவும் அவர்கள் அதை பிரெஞ்சு மொழியில் பெற்றுக் கொள்ளவும் தக்கதாக அநேக நாட்களாக உபவாசித்துக் கொண்டிருப்பதாக அறிகிறேன்! பிரான்ஸ் தேசத்தின் ப்ரொடெஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்த அனைவரும். ஆகவே நாம்... அது இப்போது தான் மலர ஆரம்பிக்கின்றது, ஆரம்பத்திலுள்ளது, இப்போது கோதுமை மணியானது அங்கே தரித்திருக்கத் தக்கதாக உமியானது அகன்று செல்கிறது. பாருங்கள்? எனவே பயபக்தியுடன் இருங்கள், ஜெபம் செய்யுங்கள். பாருங்கள்? நினைவில் கொள்ளுங்கள், “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப் பெலன் அடைகிறார்கள்”. இப்பொழுது... நானும் நன்றாக வயோதிபம் அடைந்துவிட்டேன். “இன்னுமொரு மறுமலர்ச்சி உண்டாகுமா, அவ்வாறான மற்றொரு காலத்தை நான் காண்பேனா?” என்று நினைத்தேன். இதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், வெள்ளைக் குதிரையின் மீது சவாரி செய்பவர் ஒருவர் மேற்கிலிருந்து வருவார். நாம் இந்த வழியாக மறுபடியும் சவாரி செய்வோம். அது சரிதான். நினைவில் கொள்ளுங்கள். அது ஒரு வாக்குத்தத்தம் என்பதைப் பாருங்கள். 4இப்போது, ​​நான் சகோதரன் லியோவுக்கு கூற விரும்புகிறேன்... சகோதரன் உட் அவர்களைப் பற்றி நேற்றிரவு பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய சகோதரனும் இங்கிருந்தார். சகோதரன் லியோ அவர்களே, நீங்களும் உங்களைச் சேர்ந்த சிறு கூட்டமும் இன்று காலையிலே தொலைபேசி மூலம் இணைக்கப்பட்டிருந்தால்; சகோதரி மெர்ஸியர் அவர்களே, உங்கள் தந்தை இங்கேயிருக்கிறார். கடந்த இரவு நான் அவரைப் பார்த்தேன். அவர் கட்டிடத்தில் இங்கே தான் எங்கேயோயிருக்கிறார். அவர் பார்ப்பதற்கு நன்றாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகிறார். கூடாரத்தில் அவர் சுகமாக்கப்பட்ட அந்தக் காலை வேளையில் புற்று நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்டு, மெய்யாகவே மரித்துக் கொண்டிருந்த இருவர் இங்கிருந்தனர். அவர்கள் இருவரும் குணமாக்கப்பட்டார்கள். மாரடைப்பில் அவதியுற்றுக் கொண்டிருந்த வயோதிபரான அவர்கள் தகப்பனரும் தேவனுடைய மகிமைக்கென்று விடுவிக்கப்பட்டார். அவர் கூட்டத்தில் இங்கேதான் எங்கேயோ இருக்கிறார். என்னால் அவரைக் கூட்டத்தில் இப்போது பார்க்க முடியவில்லை, ஆனால் நேற்றிரவு அவர் இங்கேயிருந்தார். 5நாடெங்குமுள்ள உங்களனைவருக்கும் வாழ்த்துக்கள். இங்கும் ஷ்ரீவ் போர்டில், ஜீவன் கூடாரமென்னும் இந்த அருமையான ஸ்தலத்தில் ஓய்வுநாள் பள்ளிக்காக அதிக நெருக்கடியில் உங்களனைவருக்கும் வாழ்த்துக்கள். இதை யாருக்கும் விரோதமாக கூறவில்லை. ஆனால் நான் ஷரீவ் போர்டில் ஜீவிக்க நேர்ந்தால், சபை கூடுதலுக்கு இங்கே தான், ஜீவன் கூடாரத்திற்குதான் வருவேன். இது ஒரு ஸ்தாபனமல்ல. இந்த ஜீவன் கூடாரம், இன்று ஒரு அனைத்து ஸ்தாபன கூடாரமாயிருக்கிறது. என்னையும் நான் பிரசங்கிக்கும் இந்தச் செய்தியையும் அவர்கள் ஏற்றுக் கொண்டதால், அவர்கள் ஸ்தாபனத்தை விட்டு வெளியே வருகிறார்கள். எனது சகோதரனும் நண்பருமான சகோ. ஜாக் மூர், என்னோடு சம்பந்தப்பட்டிருந்ததால் ஸ்தாபனத்திலிருந்து பிரிக்கப்பட்டார். ஆகவே அவர் பாராட்டுக்குரியவர் என்று கருதுகிறேன். அது சரிதான். தேவன் அவரை ஆசீர்வதிப்பாராக. ஜெபத்தில் அவருடைய கரத்தைத் தாங்குங்கள், அவரோடு விசுவாசியுங்கள். 6சகோதரி மூர் அவர்களை நான் எங்கும் காண முடியவில்லை. அவர்... ஆம், பின்னாலேயிருக்கிறார். ஈஸ்டர் உடையைப் போன்ற ஒரு புதிய ஆடையை அணிந்தவராய் இன்று காலை அவர் அங்கு அமர்ந்திருந்தபோது, ஒரு சிறு பெண்ணைப் போல காணப்பட்டார். சகோதார் ஜாக் கூட அவரை அறிந்து கொள்ள முடியவில்லை. இதோ, என்னுடைய சகோதரி இங்கே என்றார். அன்னா ஜீன், டான் மற்றும் எல்லாரையும் காண முடியாமல் வருந்துகிறோம். இங்கு சம்பந்தப்பட்டவர்களில் ஒருவராகிய சகோதரர் நோலன் அவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 7நேற்று சகோதரர் எர்னியை “ஆமென்” என்ற பாட்டை அவர் பாடுவாரா என்று கேட்டேன். நான் அதை ஒரு இசைத் தட்டில் வைத்திருக்கிறேன். “ஆமென்” என்ற அந்த பாட்டைத் திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டு அதைத் தேய்த்தேவிட்டேன். அந்தப் பாட்டிற்கேற்ற குரல் அவருக்குள்ளது என்றும் கருதுகிறேன். மற்றெல்லாரையும் விட நன்றாக பாடுகிறார். அருமை ஜூடியையும் கவனித்தேன். அவர்கள் இருவரும் சகோதரனும் சகோதரியும் போலக் காணப்பட்டார்கள். இல்லையா? அவர்கள் கணவனும் மனைவியுமாய் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் பாருங்கள். உண்மையிலேயே ஒரு இனிமையான ஜோடி. அது உங்களுக்குத் தெரியும், அதுதான்... சமீபத்தில் பொன்னாலான படிக்கட்டுகளின் மீது ஏறிச் சென்ற சகோதரர் பாமர் அவர்களின் மகளும் மருமகனுமே இவர்கள். அது... நல்ல குழந்தை வளர்ப்புக்கு இவரை தம் பங்காக அவர் அளித்திருக்கிறார். மற்றவர்களையும் அளித்திருக்கிறார். மணமான ஊழியக்காரர்கள் கூட உண்டு. தங்கள் களங்களில் ஊழியம் செய்யும் சுவிசேஷகர்களாக இவர்கள் இருக்கின்றனர். மற்றவர்களும் உண்டு. ஆக இது ஒரு மகத்தான காரியமாயிருக்கிறது. 8நான் சகோதரி பாமர் அவர்களைப் பார்க்கவில்லை. உண்மையில், நான் அவர்களைக் கண்டால் அவர்களை அறிந்து கொள்வேனோ, மாட்டேனோ, அறியேன். அவர்கள் ஒரு வேளை எங்கேயோ (நிச்சயமாக) கூட்டத்திலிருக்கிறார்கள். கடைசியில், பின்னாலே; தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரி பாமர் அவர்களே. ஒவ்வொரு முறை நான் அதைக் குறித்து யோசிக்கும் போதும் என் இருதயம் குலுங்குகிறது. சகோதரர் பாமர் அவர்கள் படிக்கட்டுகளில் ஏறிய ஒரு சில நிமிடங்கள் கழித்து, அவர் போய்விட்டார் என்று எனக்கு செய்தி வந்தது, என்னால் அதை நம்பவே முடியவில்லை. பில்லி என்னை அழைத்துக் கூறினான். யாரோ அறிவித்திருக்கிறார்கள்... அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. நாங்கள் அவ்வளவு பிரியமான நண்பர்களாயிருந்தோம். அவர் போய்விட்டார் என்பதைக் கேட்பதற்கு, அது அதிகமாய் குலுங்க வைக்கிறதாயிருந்தது. ஆனால் நாம் அனைவரும் போக வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் யாராயிருந்தாலும் நாம் ஒவ்வொருவராக போக வேண்டும். ஆனால் ஒரு காரியம் மட்டும் உண்டு. “காரியத்தின் கடைத் தொகையைக் கேட்போமாக; தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள், எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே” (பிரசங்கி 12:13). 9இப்போது, ஓய்வு நாள் பள்ளிப் பாடத்திற்காக எனக்கு அதிக நேரம் கிடையாது. மேலும் என் தொண்டையும் கரகரப்பாயுள்ளது. சகோதரர் பியரி க்ரீன் ஒரு சிறப்பான காரியத்தைச் செய்திருக்கிறார். “என்னுடைய சிறிய முடித்துண்டு இல்லாமற் போனதை உணருகிறேன்” என நேற்றிரவு நான் கூறியதை கேட்டார். தொலைபேசி மூலம் அங்கிருப்பவர்களுடன் பேசி யார் மூலமாவது அதை விமானத்தில் இங்கே எனக்காக கொண்டு வர முயற்சித்தார். “அதிக தாமதமாகிவிட்டது. எனக்கு ஏற்கனவே தொண்டை கட்டிவிட்டது” என்றேன். அநேக வருடங்களாக இதைத் தடுப்பதற்கு எதையாகிலும் செய்து கொள்ள வேண்டுமென முயற்சித்தேன். ஆனால் இதை நான் பெற்றபோது இது என் தொண்டை கரகரப்பை சுகப்படுத்தியது. ஆனால் இம்முறை நான் அதை மறந்துவிட்டேன். ஆகவே எனது தொண்டை சற்று கரகரப்பாயுள்ளது. ஆகவே நான் பேசும்போது, சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். 10இப்போது ஓய்வு நாள் பள்ளியை எத்தனை பேர் விரும்புகிறீர்கள்? ஓ, என்னே, அது சரிதான். ஓய்வுநாள் பள்ளிக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்புவது நல்லது. இல்லை. நான் அதை திருத்தட்டும், ஓய்வுநாள் பள்ளிக்கு உங்கள் பிள்ளைகளைக் கொண்டு வருவது நல்லது. அது சரிதான். உங்கள் பிள்ளைகளைக் கொண்டு வருவது; நீங்களும் கூட வாருங்கள். ஓய்வுநாள் பள்ளியானது முதலில் எவ்விதம் ஆரம்பமானது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? எங்கே அது ஆரம்பமானது? இங்கிலாந்து தேசத்தில் அது முதலில் எவ்விதம் அழைக்கப்பட்டது? “கந்தையுடுத்த பள்ளிக்கூடம்” என அழைக்கப்பட்டது. ஆம், அது சரிதான், கந்தையுடுத்த பள்ளிக்கூடம் என்று அழைக்கப்பட்டது. அதை ஸ்தாபித்த மனிதரின் பெயரை இப்போது மறந்துவிடுகிறேன் அவர் பெயர் என்னவாயிருந்தது? (“இராபர்ட் ரெய்க்ஸ்” என்று யாரோ கூறுகிறார்கள் - பதிப்பாசிரியர்). ஆம், அதேதான். கந்தையுடுத்திக் கொண்டு, புகலிடம் ஏதும் இல்லாமல், மிகவும் மோசமாக ஜீவித்துக் கொண்டிருந்த சிறு பிள்ளைகளை தெருக்களிலிருந்து கொண்டு வந்து அவர்களுக்கு வேதாகமத்திலிருந்து பாடங்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். ஓய்வுநாள் பள்ளியாகிய அது இன்று ஏறக்குறைய சபையின் மிக மகத்தான ஒழுங்கு முறைகளில் ஒன்றாகத் தக்கதாக வளர்ந்திருக்கிறது. அதற்குப் போவது நல்லது. வருவதற்கு நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் பிள்ளைகளைக் கொண்டு வாருங்கள். கூடாரத்தில் இங்கே போதகர்கள், சாதனங்கள் பொருத்தப்பட்ட அறைகள் முதலியன உண்டு என்று நினைக்கிறேன், புதிகாக மனமாற்றமடைந்து கிறிஸ்துவுக்குள் புதிதாக இப்போது தான் வந்து கொண்டிருக்கும் நீங்கள், செய்தியையே தொடர்ந்து பின் சென்று கொண்டிருங்கள். இங்கு இந்த ஜீவன் கூடாரத்திலுள்ளவர்களும் உங்களுக்கு நன்மையானதை செய்வார்கள். 11இப்போது இன்றிரவு நாம் பழைய மாதிரியான ஒரு ஜெப வரிசையை வைக்கப் போகிறோம். சகோதரர் ஜாக், சகோ. ப்ரௌன் அவர்களே, நாம் முன்பு பிணியாளிகளுக்கு ஜெபிப்பது போல ஜெபிக்கப் போகிறோம். சகோதரர் ப்ரௌன் அவர்கள், அவர் தாமே ஒரு ஊழியக்காரராய் இருக்கிறார், ஜெப அட்டைகள் கொடுக்க முயற்சித்ததை நான் கண்டதை நினைவு கூருகிறேன். அந்த நாட்களில், ஒரு ஸ்தாபனத்தார், “நான் உன்னுடைய சகோதான், நீர் எனக்கு ஒரு ஜெப அட்டையைக் கொடுத்தே தீர வேண்டும் என்றெல்லாம் அவரைப் பலவந்தம் பண்ணினார்கள்.” அது அவருக்கு கடினமான ஒரு வேளையாயிருந்தது. ஆனால் அவரோ உண்மையாய் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வளவு உண்மையாய் நடந்து கொண்டார். சகோ. ப்ரௌன் ஒரு அருமையான மனிதர். ஆகவே நாம் அவரை நேசிக்கிறோம். 12நாம் யாவரும்... நாங்கள் மூவரும் வயோதிபத்தை நோக்கி, முடிவை நோக்கி ஊர்ந்து சென்று கொண்டிருப்பதைக் காண்கிறேன் அவர்கள் சத்தியம் என்று அறிந்திருக்கும். அந்த மகத்தான காரியத்தை எங்களுக்குள் நாங்கள் வைத்திராதிருந்தால் அது மிகவும் துக்கமானதொரு காரியமாயிருக்கும். இந்த நாட்களில் ஒரு நாளில் நாங்கள் வாலிபத்தைப் பெற்றுக் கொள்ள ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்... அவர் இருக்கிற வண்ணமாகவே நாமும் நிலைத்திருக்கத் தக்கதாக, நம்முடைய சரீரங்கள். மறுரூபமாகும். “ஏனென்றால் இந்த பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும், ஒரு வீடு அங்கே ஏற்கெனவே காத்துக் கொண்டிருக்கிறது.” 13அருமையான நண்பரே, இதில் நாம் நன்றியோடு இருக்க வேண்டிய காரியம் என்னவென்றால், அருமை கர்த்தர் இயேசு... நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறுகிறேன் என விசுவாசிக்கிறவர்களே; அருமைக் கர்த்தராகிய இயேசு, ஒரு நாள் காலை எட்டு மணி அளவில், என்னை அந்த தேசத்தைக் காண வைத்தார். அது ஒரு தரிசனமாயிருக்கவில்லை; நான் அதைச் சொல்ல விரும்பவில்லை. அது என்னவாயிருந்தாலும், நான் இங்கே உங்களுடன் பேசிக் கொண்டிருப்பதைப் போல அவ்வளவு உண்மையாயிருந்தது. நான் அந்த மனிதர்களுடைய முகங்களைப் பார்த்தேன். அவர்களை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை, அவர்கள் திரும்பவும் வாலிபம் அடைந்திருந்தார்கள். அவர்கள் அவ்வளவு நிஜமாயிருந்தார்கள். நான் அவர்கள் கரங்களை எல்லாம் பிடித்திருந்தேன். அவ்வளவு உண்மையாக... 14அது எனக்கு உதவியாயிருந்தது. ஏனென்றால் முன்பு எனக்கு ஒரு அபிப்பிராயம் இருந்தது. ஒரு ஆள் மரிக்கும் போது, அவர்களுடைய ஆத்துமா போய்விடுகிறது என்று. “பூமிக்குரிய கூடாரமாகிய இந்த நம்முடைய வீடு... நாம் இன்னொன்றை ஏற்கனவே பெற்றிருக்கிறோம்” என்று அவர் அதை எனக்கு மேற்கோள் காட்டிக் கூறியபோது, பார்த்தீர்களா? நாம் ஒவ்வொன்றையும் பரிபூரணப்படுத்துவதற்கு மூன்றை பெற்றிருக்க வேண்டும் பாருங்கள்? இங்கே ஒரு சரீரம் இருக்கிறது. பிறகு அங்கே அந்த சரீரம் - வானத்துக்குரிய சரீரம், (celestial body) அதன் பிறகு உயிர்த்தெழுதலில் மகிமையின் சரீரம், (glorified body) பாருங்கள், அது (மூன்று) அதை சரீரத்தை பூரணப்படுத்துகிறது. பார்த்தீர்களா? ஆகவே இது ஒரு... இது ஒரு புராணக் கதை அல்ல, இது ஒரு எண்ணமுமல்ல, இது ஒரு ஆவியல்ல. உங்களைப் போல இது ஒரு மனிதனும் ஸ்திரீயும், சரியாக அப்படியே தான். 15மேலும், அனேக ஆண்டுகளுக்கு முன்பு நான் இழக்கப்பட்டவர்களின் பிரதேசங்களையும் கண்டேன். அங்கேயிருந்தேன். நண்பனே, நான் உனக்குக் கூறுகிறேன். ஒரு முதிர் வயதுள்ள மனிதனாக நான் உன்னை இதை நம்பச் செய்யட்டும். தேசம் முழுவதும் இந்தக் காலை வேளையில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களே, அந்த இடத்தைப் பார்க்க விரும்பவே விரும்பாதீர்கள். நான் அதை விவரிக்கத் தக்கதான வழியேயில்லை. நான் ஒரு ஓவியனாயிருப்பேனானால், ஒரு தூரிகை (Brush)யைக் கொண்டு என்னால் அதைப் படமாக வரைய இயலாது. ஒரு தேவ ஊழியக்காரனாக என்னால் அதை உங்களுக்கு விவரித்துக் கூற முடியாது. நரகம் ஒரு எரிகிற ஸ்தலம் என்று பேசுகிறோமே, அங்குள்ள பயங்கரங்களை நினைக்கும் போது அது இன்னும் பத்து லட்சம் மடங்கு மோசமாயுள்ளது. 16ஆனால் மோட்சம்... அல்லது இந்த இடம், எங்கானாலும் சரி, அதை என்னவென்று அழைப்பதென்று எனக்குத் தெரியவில்லை. பலிபீடத்தின் கீழ் உள்ள ஆத்துமாக்கள் என்று அந்த இடத்தைக் குறித்துக் குறிப்பிட்டார். அப்போது, நான் ஒரு போதும்... அது எவ்வளவு மகிமையான காரியம் என்று விவரித்துச் சொல்ல வழியே இல்லை. அங்கே... இப்பொழுது, நீங்கள் என் வார்த்தையை எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும், நான் ஒரு மனிதன் மட்டுமே, பாருங்கள்? ஆனால் இந்தத் தரிசனங்கள் நான் கூறிய பிரகாரமே எப்பொழுதும் நிறைவேறி வந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் மெய்யாகவே இருந்திருக்கின்றன. அதுவும் கூட மெய்யாகவே உள்ளது. நீங்கள் எதைச் செய்தாலும், நீங்கள் மற்ற எல்லாவற்றையும் தவறவிட்டாலும் (சுகம், பலம், உங்கள் கண் பார்வை எதுவாயிருந்தாலும் சரி), அதை தவற விட்டுவிடாதீர்கள். அதோடு ஒப்பிடப்படக் கூடியது ஒன்றும் இல்லை. எனக்குத் தெரிந்து, அதை விவரிக்கத் தக்கதான வார்த்தை ஆங்கில மொழியில் இல்லை. அது “பூரணமானது” எனக் கூறுவீர்களானால், அது அதையும் கடந்திருந்தது; “மிக நேர்த்தியானது” என்பீர்களானால் அது அதையும் கடந்திருந்தது. “உயர்ந்தது” எனக் கூறுவீர்களானால்... எனக்குத் தெரிந்தபடி அதை விவரிக்கத் தக்கதான வார்த்தை இல்லை, ஏனென்றால் அது அவ்வளவு... மேலும் அதுதான் முடிவு அல்ல என்பதை எண்ணும் போது, “இங்கே வர நான் அச்சப்படுவேனோ?” என்று நான் எண்ணினேன். “நீங்கள் சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டேன். “இங்கே இல்லை, நாங்கள் இங்கு புசிப்பதில்லை. ஆனால் நாங்கள் பூமிக்குத் திரும்பும்போது நாங்கள் புசிக்கும்படியாக உள்ள ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்வோம்.” 17நல்லது, நான் அவர்களைத் தொட்டு உணர முடிந்தது. அவர்கள் அவ்வாறுதான் இருந்தார்கள். பாருங்கள்? ஓ, ஆம். அவர்களுக்கு சரீரம் இருக்கிறது. அது கட்டுக் கதையல்ல. அது ஒரு சரீரம், நாங்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம். அவர்கள் எல்லோரும் என்னை அறிந்திருந்தார்கள். பல லட்சக்கணக்கான அந்த மக்கள் என்னைக் கட்டித் தழுவினர். “நல்லது, என்னை இங்கு கொண்டு வந்தவரை நான் காண விரும்புகிறேன்” என்று நான் கூறினேன். “நீங்கள் இப்போது அவரைக் காண முடியாது. நீங்கள் காத்திருக்க வேண்டும்” என்று கூறப்பட்டது. நான், “என்னை ஏன் இங்கு... மேலே வைத்தீர்கள்?” என்று கேட்டேன். “நீங்கள் வாழ்க்கையில் ஒரு தலைவராக இருந்தீர்கள்” என்று சொல்லப்பட்டது. “அவர்கள் எல்லோரும் பிரான்ஹாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறீர்களா?” என்று நான் கேட்டேன். அவர், “இல்லை, அவர்கள் எல்லோரும் நீர் கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்தவர்கள்” என்று கூறினார். பாருங்கள்? 18நான் சுற்றிலும் பார்த்தேன். அதன் பிறகு கடினமான இரவுகளும் சோதனைகளும் அகன்று போயின. என்னால் அவர்கள் முகங்களைக் காண முடிந்தது. மிகவும் அழகான இளவயதுள்ள ஒரு பெண்மணி அங்கு வந்தார். அவர் தன் கரங்களால் என்னைக் கட்டிப் பிடித்து, “விலைமதிக்க முடியாத சகோதரனே” என்று கூறினார். அவர் அங்கிருந்து கடந்து சென்ற பின்பு... அவர் ஒரு பெண்மணியாய் இருந்தாள். ஆகையால்... ஆனால் அங்கு பாவம் ஒருபோதும் இருக்காது. பாருங்கள். நம்முடைய உடலிலுள்ள சுரப்பிகள் அங்கு மாற்றப்பட்டுவிடுகின்றன. அவர்கள் அங்கே பிள்ளைகளைப் பெற்று வளர்க்கமாட்டார்கள். பாருங்கள்? பாருங்கள், எல்லாம் ஒரே மாதிரியாக. அவ்வாறான மாறுதலை உண்டாக்குவது எது? உணர்ச்சி. ஆகையால் தான் தரையில் நடனமாடுவதில் நான் நம்புவதில்லை. எந்த மனிதனும்... நான் தேவனுக்கு முன்பாகவும், வேதத்திற்கு முன்பாகவும் கூறுகிறேன். நான் சிறு பையனாக இருந்தபோதும், வாலிபனாக இருந்தபோதும் ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். நான் என்னுடன் வெளியே அழைத்துச் சென்ற எந்தப் பெண்மணியுடனும் தைரியமாக அவளை அழைத்துக் கொண்டு என்னால் நியாயத்தீர்ப்புக்குச் செல்ல முடியும். பாருங்கள், ஆனால் எந்த மனிதனும், நீங்கள் யாராயிருந்தாலும் எனக்கு அக்கறையில்லை. (பெண்ணின் அமைப்பிலுள்ள) ஒரு பெண்மணி அவ்வாறு தன்னைக் கட்டி நெருக்கமாக அணைக்க விட்டுவிட முடியாது. நீங்கள் உண்மையாக நல்ல ஆரோக்கியமுள்ள ஒரு மனிதனாயிருந்தால் உங்களுக்குள் உணர்ச்சிகள் இருக்கும். ஆனால் அங்கு அது இருக்கவில்லை. அங்கு சுரப்பிகள் இல்லை. அவர்கள் எல்லோருக்கும் ஒரேவிதமான சுரப்பிகள் இருக்கின்றன. பாருங்கள். மிகவும் தூய்மையான கலப்படமில்லாத சகோதர சகோதரிகளுக்குள்ள அன்பே அவ்விடத்திலிருக்கும். உங்கள் சொந்த சிறு மகளை கட்டியணைக்கும் பொழுது உள்ள அன்பிற்கும்... அதற்கும் மேலான... ஒரு அன்பாக அது இருக்கும். பாருங்கள்? உங்கள் சொந்த குமாரத்தியாக இருந்தாலும் அவள் அவ்வாறு... ஒரு பெண்ணாகவும் நீங்கள் ஒரு ஆணாகவும் இருக்கிறீர்கள். பாருங்கள். அது எதையாவது உருவாக்கக் கூடும். ஆனால் அங்கு முடியாது, பாவமானது ஒழிந்துவிட்டது. அது எல்லாம் முடிந்துவிட்டது. பாருங்கள்? உண்மையான... மிகவும் உண்மையான, பரிசுத்தமான அன்பு. 19நான் அந்த பெண்மணியைப் பார்த்தேன். அங்கு... லட்சக்கணக்கானவர்கள் இருப்பதுபோல் தோன்றியது. அவர்கள் எல்லோரும் நீண்ட கூந்தலும், கீழே வரை உள்ள (நீளமான) வெண்மையான வஸ்திரமும் அணிந்திருந்தனர். இந்த... என்னோடு பேசிக் கொண்டிருந்த பெண்மணி, “என்னை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா” என்று கேட்டார். நான் “இல்லை” என்று கூறினேன். “அப்பெண்மணியை நீங்கள் கிறிஸ்துவுக்குள் நடத்தின போது அவர்கள் தொண்ணூறு வயதாக இருந்தார்கள்” என்று கூறப்பட்டது. வியக்கத் தக்க கிருபை, எவ்வளவு இனிமையான ஒலி பாருங்கள். நம்மால் எந்த வழியிலும் அதை விவரிக்க முடியாது. என்னை விசுவாசித்தால் என் வார்த்தைகளை நம்புங்கள். நிச்சயமாக... உங்களுக்கும் உலகத்துக்கும் உள்ள எல்லாத் தொடர்புகளையும் எரித்துவிடுங்கள். 20சபையானது செய்தியைக் கேட்க ஆரம்பித்துவிட்டது என்றும் செய்தியைப் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டது, என்றும் நான் நம்புகிறேன். ஆனால் நண்பனே, கவனியுங்கள், நாம் குமாரனின் சந்நிதானத்தில் தரித்திருக்க வேண்டும். நாம் இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும். நம்முடைய நம்முடைய விசுவாசம் இன்னும் முதிர்ச்சியடையவில்லை. நம்முடைய அறிவைக் கொண்டு நாம், தேவன் நமக்களித்திருக்கும் செய்தியைக் கேட்டும், அவர் நமக்குக் காண்பிக்கும் அற்புதங்களைக் கண்டும், அவற்றை வேதத்தின் மூலம் நிரூபித்தும் இருக்கிறோம். ஆனால், ஓ, சபையானது ஆத்துமாவில் மென்மையடைந்து, ஆவியில் இனிமையடைந்து, அவரில் மூழ்கித் திளைக்கும் வரை எவ்வளவாக அவர் சந்நிதானத்தில் இருக்க வேண்டியிருக்கிறது! சில சமயங்களில் செய்தியை அளிக்கும்போது கடினமாக கூற வேண்டியுள்ளது. ஆனால் அதை அவ்வாறு நொறுக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் கெட்டியாகப் பற்றிக் கொள்ளத் தக்கதாக ஒரு ஆணியை அடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் சபை ஒரு விசை அதைப் பெற்றுக் கொண்ட பின்பு, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அழைக்கப்பட்டு பிரித்தெடுக்கப்படுவார்கள், (கடவுளுடைய சந்நிதானத்திற்கு முன் வைக்கப்படுவார்கள்) எடுத்துக் கொள்ளப்படுதல் நடக்கும்பொழுது அங்குள்ள மக்களைப் போன்று அது அவ்வாறு தான் இருக்கும் என்று நினைக்கிறேன். 21இன்று காலையில் நான் எடுத்துக் கொள்ளப்படுதலைப் பற்றி பேசுவதாக இருந்தேன். ஆனால் அதைக் கூறுவதற்கு எனக்கு போதிய அளவு சப்தம் வெளிப்படுத்த முடியவில்லை. ஆகையால் தயவு செய்து என்னைச் சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் இப்போது “தேவனால் அருளப்பட்ட ஒரே ஆராதனை ஸ்தலம்” என்பதைப் பற்றி பேச விரும்புகிறேன். இப்பொழுது, இது மகத்தான பெரியதொரு பொருளாகும். ஆகையால் நாம் இப்போது ஜெபிப்போம். இன்று காலையில் தேசமெங்கும் கேட்கிறவர்களே, நீங்கள் எங்கேயிருந்தாலும் உங்கள் தலைகளை சற்று நேரம் வணங்குங்கள். இப்பொழுது உண்மையாகவே உத்தமமானவர்களாக இருங்கள், ஏனெனில் நாம் இப்பொழுது எழுத்து வடிவத்திலுள்ள தேவனாகிய தேவனுடைய வார்த்தையிடம் நெருங்குகிறோம். 22இப்புத்தகத்தின் மகத்தான காரண கர்த்தாவே “விதைக்கிறவன் விதைத்தது ஒரு வித்து” என்று நாங்கள் போதிக்கப்பட்டிருக்கிறோம். இதன் ஆசிரியரும் இதையே கூறினார். விதையானது சரியான நிலத்தில் விதைக்கப்பட்டிருந்தால் அது வளரும் என்று நாங்கள் உணருகிறோம். ஆகையால் பிதாவே, நாங்கள் தேவனுடைய மக்களாகத் தக்கதாக இன்று காலையில் எங்கள் உள்ளங்களில் இருக்கும் களைகளையும், நெரிஞ்சில் முட்களையும், அவிசுவாசத்தையும், எல்லாவித சந்தேகமான எண்ணங்களையும் எடுத்துப் போடுவீரா? அப்படிச் செய்வதன் மூலம் தேவனுடைய வார்த்தையானது, எங்கள் உள்ளங்களில் ஆவியாகிய தண்ணீர் ஊற்றப்பட்டு சுதந்திரமாக வளர அருள் புரியும். அதுதான் எங்கள் இருதயத்தின் விருப்பம். இதை அடையாளம் கண்டு கொண்ட நாங்கள் மட்டுமல்ல, தங்கள் உள்ளங்களில் அன்பினாலும் இளகிய மனதினாலும் ஏவப்பட்டு, போய், தவறிப்போன தங்கள் சகோதரனையும் சகோதரியையும் மீட்டுக்கொள்ள முயற்சி செய்யும் மற்றவர்களும் இந்நாடெங்கும் இருப்பார்களாக. இதை இன்றே அருள் புரியும், தேவனே. நாங்கள் உம்மையே முழுமையாக நோக்கியிருக்கிறோம். நீரே எங்கள் வழிகாட்டியும் எங்கள் ஆண்டவருமாயிருக்கிறீர். ஆகையால் நீர் இன்று எங்களை உம்முடைய வார்த்தையில் வழி நடத்தவும், உம்முடைய ஆசீர்வாதங்களைத் தரவும் வேண்டுமென்று ஜெபிக்கிறோம். உம்முடைய கிருபையின் மூலம் உம்முடைய நாமத்தில் விண்ணப்பிக்கிறோம். ஆமென். 23நாம் பேசப்போகும் பொருளுக்கு வேதத்திலிருந்து ஆதாரமாக, பழைய ஏற்பாட்டிலுள்ள உபாகமத்திலிருந்து படிக்க விரும்புகிறேன். சகோதரர் வேயில் உடன் காலை ஆகாரம் அருந்தி விட்டுத் திரும்பிய பிறகு நான் விரைவாக எழுதிய சில குறிப்புகளை வைத்திருக்கிறேன். அன்று இரவு அந்த உணவு விடுதியில் எங்கள் இரவு உணவுக்காக பணம் கொடுத்த அந்த மனிதரை என்னால் சந்தித்து நன்றி கூறவே முடியவில்லை. நானும் என் மனைவியும் என் சிறிய மகளும் அங்கு போயிருந்தோம். நான் பணத்தைக் கட்டுவதற்காகச் சென்றபோது யாரோ ஒருவர் ஏற்கனவே பணத்தைக் கட்டிவிட்டிருந்தார். அது யாராக இருந்தாலும் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன், “அந்த பெஞ்சின் (Bench) கடைசியில் அமர்ந்திருந்தவர்” என்று கூறினார்கள். ஆனால் அங்கு எங்களுக்குத் தெரிந்த ஒரு முழு கூட்டமேயிருந்தது. இப்பொழுது நான் இங்குள்ள ஒருவிதமான கிக்கபூ போன்ற அந்த உணவு விடுதிக்குச் சென்றிருந்தோம். அதைச் செய்தது யாராயிருந்தாலும் உங்களுக்கு நன்றி. உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. 24இப்பொழுது உபாகமம் 16ம் அதிகாரத்தில், பஸ்காவை அனுசரிப்பதைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது. நாம் முதலில் உள்ள சில வசனங்களை, நான்கு அல்லது ஐந்து, ஆறு வசனங்களை வாசிப்போம். ஆபீப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக் கடவாய்; ஆபீப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினாரே. கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக. நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும். நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்கா பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள் வரைக்கும் புசிக்க கடவாய்; நீ தீவிரமாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்ய வேண்டும். ஏழு நாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது: நீ முதல் நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாமசத்தில் ஏதாகிலும் இரா முழுதும் விடியற்காலம் வரைக்கும் வைக்க வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்துலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து. உபா.16:1-6. இப்பொழுது வாசிக்கப்பட்ட தம்முடைய வார்த்தையோடு கர்த்தர் தமது ஆசீர்வாதத்தைக் கூட்டுவாராக. 25இப்பொழுது, இந்த மின்சார ஒலிபெருக்கியில் ஏதாவது கோளாறு இருக்கிறதா? நேற்று இரவு அவ்வாறு இருந்ததை நான் கேட்டேன். எல்லா இடத்திலும் உங்களால் நன்றாக கேட்க முடிகிறதா? உங்களால் கேட்க முடியவில்லை? (சகோதரர் பிரான்ஹாம் அவர்கள் மின்சார ஒலிப்பெருக்கியை ஒழுங்குபடுத்துகிறார் - பதிப்பாசிரியர்). இப்பொழுது பரவாயில்லையா? மின்சார ஒலிப்பெருக்கியை இப்படி சிறிது கீழே வைத்துப் பேசினால் உங்களுக்கு நன்றாக கேட்கிறதா? இன்று காலையில் என்னுடைய குரல் சிறிது கரகரப்பாக இருப்பதால் நான் சற்று நெருக்கமாக நின்று பேசுகிறேன். சகோதரர் பியரி அவர்களால் அங்கு அதைக் கேட்க முடிகிறது என்று நினைக்கிறேன். இப்பொழுது உங்களுக்கு நன்றாகக் கேட்கிறதா? அவர்கள் அதை சரிப்படுத்திவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். 26இப்பொழுது... தேவனைத் தொழுது கொள்ளுகிறவன் அவரை சந்திக்கத் தக்கதாக தேவன் ஒரே ஒரு ஸ்தானத்தையே வைத்திருக்கிறார் என்பதைப் பற்றி இன்று காலையில் நான் பேச விரும்புகிறேன். ஒரே ஒரு ஸ்தானம். யுக யுகங்களாக அநேகர் தேவனுடைய இந்த இரகசியமான இடத்தைத் தேடிக் கண்டு பிடிக்க முயன்றனர், எல்லாக் காலங்களிலும். நீதிமானாகிய யோபுவும் கூட அவர் எங்கே வசிக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினார். “நான் மட்டும் அவர் வீட்டிற்குப் போய் அவர் வாசற்படியில் நின்று கதவைத் தட்டக் கூடுமானால்.” தேவனும் அவரது குடும்பமும் அங்கே ஒன்றாகத் தொழுது கொள்ளப்படுவதால் தேவனின் உறைவிடத்தை அறிய யோபு விரும்பினார். நேற்று போல, நேற்று காலை செய்தியில் கேட்டது போல, ஒரு மனிதன் உண்மையாக ஆராதித்த போதிலும் அவன் தேவனை வீணாக ஆராதிக்கக் கூடிய சாத்தியக்கூறு உண்டு என்று காண்கிறோம், தேவன் இந்தக் காரியங்களையெல்லாம் நமக்காக நிச்சயத்திருக்கிறார். ஆனால் அதன் காரியம் என்னவென்றால் அவை எங்கே உள்ளன என்று காண நாம் தேட வேண்டியுள்ளது. பவுல் அப்போஸ்தலனும் தீமோத்தேயுவைத் தேடச் சொன்னார். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும், அவருக்குள்ளிருந்த நம்பிக்கையைக் குறித்து ஒரு வார்த்தை கூற ஆயத்தமாயிருக்கச் சொன்னார். 27இப்பொழுது, இந்த எல்லாக் காரியங்களும் அங்கே உள்ளே இருக்கின்றன. நாம் அதை காண்கிறோம்... எப்பொழுதாவது ஷ்ரீவ்போர்ட்டுக்கு வந்து, 2 அல்லது 3 வாரங்கள் தங்கி ஒரு இரவுக்கு முப்பது நிமிடங்கள் எடுத்துக் கொண்டு, வார்த்தையிலேயே தரித்திருந்து எப்படி உள்ளே பிரவேசிப்பது என்பதைக் காணத் தக்கதான இந்த இரசியமான வேதப் பகுதிகளைக் குறித்து போதிக்க விரும்புகிறேன். பாருங்கள்? நீங்கள் கவனித்துப் பாருங்கள், நீங்கள் தேவனுடைய வழி நடத்துதலைப் பின் தொடருங்கள், ஒவ்வொரு கதவுக்கும் அங்கே ஒரே ஒரு திறவுகோல் தான் உண்டு. அது சரிதான். வேறே திறவுகோல் கிடையாது. அது எவ்வளவு தான் உண்மையான திறவுகோலைப்போல தோற்றமளித்தாலும், தேவனிடத்தில் மாற்று திறவுகோல் கிடையாது; ஒரே ஒரு திறவுகோல் மட்டும் உண்டு. இப்போது, நீங்கள் அந்த திறவுகோலைப் பெற்றிருக்க வேண்டும், அல்லது கதவு திறக்காது. நீங்கள் எவ்வளவு தான் உண்மையானவராக இருந்தாலும் உங்களால் அந்தக் கதவைத் திறக்கவே முடியாது. 28நேற்று காலை உணவில் எத்தனை பேர் பங்கு கொண்டீர்கள், அன்று காலையில்? நல்லது. அதிகமானவர்கள் என்று நினைக்கிறேன். உங்களில் குறைந்தது தொண்ணூறு சதவீதம் பேர் அல்லது அதற்கும் அதிகமானவர்கள். நான் சொல்லப் போவதற்கு பின்புறக் காட்சியாக, அபிஷேகம் பண்ணப்பட்டவராகிய கர்த்தராகிய இயேசுவைத் தவிர்த்து (அவர் தேவன்) இஸ்ரவேல் பெற்றிருந்ததிலேயே மகத்துவமான இராஜாவாகிய தாவீது, இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டார். (தேவனால் அபிஷேகிக்கப்பட்டார்). மாமிசத்தின்படி, வம்ச வரலாற்றின்படி இயேசு தாவீதின் குமாரனாயிருந்தார். அவர் தாவீதின் சிங்காசனத்தின் மீது அமர வேண்டும்... திரும்ப சுதந்தரித்துக் கொள்ள வேண்டும். இளவரசன் எப்போதும் இராஜாவின் சிம்மாசனத்தை சுதந்தரித்துக் கொள்கிறான். கவனியுங்கள், இப்போது, தாவீது அபிஷேகிக்கப்பட்டிருந்த போதும், அந்த அபிஷேகத்தோடேயே கர்த்தருடைய சித்தத்திற்குப் புறம்பே சென்றார். ஜனங்கள் எல்லோரும், வேதவாக்கியங்கள் காட்டுவதை எடுத்துக் கொள்ளாமல் அல்லது இந்த வெளிப்படுத்தலுக்குரிய திறவுகோலை எடுத்துக் கொள்ளாமல் அவர்களெல்லாரும் அபிஷேகம் பெற்றவர்களாயிருந்தும், அவர்கள் எல்லோருமாக, ஒன்று சேர்ந்து, உண்மையிலேயே சரியாக தென்பட்ட ஒரு காரியத்துக்காக ஆரவாரித்து தேவனைத் துதித்துக் கொண்டிருந்தார்கள்: தேவனுடைய வார்த்தையை திரும்ப தேவனுடைய வீட்டிற்குக் கொண்டு வருவதற்கு. ஆனால் தாவீது இராஜாவாயிருந்தார், தீர்க்கதரிசியாக இருக்கவில்லை. பாருங்கள்? அவர்... ஆலோசனை அளிக்கத் தக்கதாக தீர்க்கதரிசி ஒருவர் தேசத்தில் அப்போது இருந்தார். அவர்கள் சரியான திறவுகோலை ஒருபோதும் உபயோகிக்காததால், தேவன் அந்த முழு நடவடிக்கையையும் புறக்கணித்தார். கதவு திறந்து கொள்ளவில்லை. நாம் இப்போது அதை ஞாபகம் வைத்துக் கொண்டு நமது சிந்தையிலும் அதை இருத்திக் கொள்ள வேண்டும். தேவனுடைய ஒவ்வொரு காரியமும், ஒரு குறிப்பிட்ட வழியில் அது செய்யப்பட வேண்டும். அவ்வாறு தான். இப்போது, அங்கே, தேவன் ஜனங்களை சந்திக்கத் தக்கதாக குறிப்பிட்ட ஒரு சபையை வைத்திருந்தார். அவர் உங்களை அந்த சபையில் ஏற்றுக் கொள்வாரேயல்லாமல் வேறு எந்த சபையிலுமல்ல. 29நான் அநேக முறை தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதினாலும் மக்கள் என்னிடம் சொல்லியிருப்பதினாலும் நான் இதை சொல்லியிருக்கிறேன்... நான் கூறுகிறேன், “நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?” “நான் பாப்டிஸ்ட் சபையைச் சார்ந்தவன்.” “நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?” “நான் மெதோடிஸ்ட் சபையைச் சேர்ந்தவன்.” “நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?” “நான் பெந்தேகோஸ்தே சபையைச் சார்ந்தவன்.” இப்போது, பாருங்கள், அது தேவனுக்கு ஒரு காரியமுமல்ல. நீங்கள் தவறான திறவுகோலை வைத்துக் கொண்டு துளாவிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஒரு சரியான திறவுகோல் உண்டு. மெதோடிஸ்ட் சபையிலோ, அல்லது பாப்டிஸ்ட் சபையிலோ, அல்லது பெந்தெகொஸ்தே சபையிலோ அல்லது மற்ற எந்த ஸ்தாபன சபையிலோ தேவன் உங்களை சந்திப்பதாக வாக்களிக்கவேயில்லை. அவர் ஸ்தாபனங்களை ஒரு பொருட்டாக கருதுவது கூட கிடையாது. அவர்கள் அவருக்கு எதிரிடையாக இருக்கின்றனர். அந்த நீண்ட செய்தியை, வெகு விரைவில் கூடாரத்தில் அதனைப் பிரசங்கிப்பேன். அதன் பிறகு சகோதரர் ஜாக் அதைக் கேட்பார். நீங்கள் அதைக் குறித்து என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம், ஏனென்றால் அது ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்படும். 30இப்போது, மக்கள், தேவன் அவர்களை அவர்களுடைய மத சாஸ்திரத்தின் அடிப்படையில் சந்திக்க கடமைப்பட்டவர் என்பது போல நடக்கிறார்கள். இப்போது, மக்கள் அவ்விதம் நடக்கிறார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் சம்பந்தப்படுவது கூட கிடையாது. திரித்துவக் கொள்கைக்காரர்கள் அல்லது பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தினர் 'ஒருத்துவம்' கொள்கையினருடன் சம்பந்தப்படுவதில்லை. அதுபோல 'ஒருத்துவம்' கொள்கையுடையோர் திரித்துவக் கொள்கையுடையோரோடு சம்பந்தப்படுவதில்லை. மெதோடிஸ்ட் ஸ்தாபனத்தினர் பாப்டிஸ்ட் ஸ்தாபனத்தாரோடு கலப்பதில்லை. ஏனெனில் ஒருவர் வேதப் பிரமாண தத்துவக்காரராகவும் (legalist) மற்றவர் கால்வீன் தத்துவத்தைப் பின்பற்றுகிறவராகவும் (Calvinist) இருக்கின்றனர். ஆகவே அவர்களிடையே (ஐக்கியம்) சகவாசமே கிடையாது. மக்கள் ஒருவருக்கொருவர் விரோதமாயிருக்கத் தக்கதாக அவர்கள் சிந்தையை அவ்வளவு மோசமாக ஆட்டி வைக்கிறார்கள். 31சிறிது காலத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனை அறையில் நான் ஜெபிக்கச் சென்றேன். அங்கே ஒரு பெண்மணி மிகவும் வியாதியாக, அறுவை சிகிச்சை செய்ததன் பிறகும், போகிற நிலையில் படுத்திருந்தார்கள். அவர்கள் மரித்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். இன்னொரு பெண்மணி அங்கு படுத்திருந்தார், நான் அவர்களுக்காக ஜெபிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். “நான் உங்களுக்காக ஒரு கணம் ஜெபிப்பதில் உங்களுக்கு ஆட்சேபனை உண்டா?” என்று அவர்களைக் கேட்டேன். “அந்தத் தொங்கு திரையை இழுத்துவிடுங்கள்!” என்று அந்த அம்மாள் கூறினார்கள். நான் கூறினேன், “நான் வருந்துகிறேன், நான் ஜெபிப்பதற்குத் தான் உங்கள் சம்மதம் கேட்டேன்.” அவர்களோ “அந்தத் தொங்கு திரையை இழுத்து விடுங்கள்!” என்று கூறினார்கள். நான் “சரி, அம்மா” என்றேன். அங்கு உட்கார்ந்திருந்த அவர்களுடைய மகனும் அவர்களும் மட்டும் இருந்தனர். அவருடைய மகனுடைய முகத்தில் அவிசுவாசிகளுக்குரிய “ரிக்கி” தோற்றமிருந்தது. நீங்கள் கிறிஸ்தவர்கள் அல்லவா? என்று கேட்டேன். “நாங்கள் மெதோடிஸ்ட் சபையைச் சேர்ந்தவர்கள்!” என்று அந்த அம்மாள் கூறினார்கள். “நான் உங்களிடம் அதைக் கேட்கவேயில்லை. நீங்கள் ஒரு கிறிஸ்தவரா என்று தான் உங்களை நான் கேட்டேன்” என்றேன். பாருங்கள்? ஆகவே அந்த அம்மாள், “அந்தத் தொங்கு திரையை இழுத்துவிடுங்கள்!” என்று கூறினார்கள். பாருங்கள், ஏனென்றால் மெதோடிஸ்ட் சபையைச் சேராத ஒருவர் மரிக்கும் ஒரு ஸ்திரீக்காக ஜெபம் ஏறெடுக்கப் போனதால். அவர்கள் மரிக்கும் தருவாயில் தான் இருந்தார்கள். அது அவர்கள் சார்ந்திருந்த சங்கத்தோடு சம்பந்தப்படாததாயிருந்ததால் அந்த அம்மாள் அதைக் கேட்கக் கூட விரும்பவில்லை. அதோடு ஒன்றும் வைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. அவர் ஒரு பரிசேயர். இல்லையென்றால், நான் ஒரு பரிசேயனைப் பார்த்ததேயில்லை. 32சர்ப்பத்தின் அடிச்சுவடு (The Trail of the Serpent) என்னும் செய்தியை நீங்கள் கேட்கும் வரை பொறுத்திருங்கள். அது சரி. இப்போது, அவர்களுடைய ஸ்தாபனம் ஒன்று மட்டுமே தேவனிடம் பதிவு செய்யப்பட்டது என்பது போல எண்ணிக் கொள்கிறார்கள்; நீங்கள் ஒரு மெதோடிஸ்டாக, அல்லது ஒரு பாப்டிஸ்டாக அல்லது ஒரு திருத்துவக் கொள்கைக்காரராக அல்லது ஒரு ஒருத்துவக் கொள்கையையுடையவராக இல்லாவிட்டால் தேவன் உங்களைக் கேட்கவும் மாட்டார் அல்லது அதைப்போல ஏதாவதொன்று. அது தவறு! அதுதான் என்னுடைய நோக்கமாகும். சரியாக இருக்க வேண்டுமென்ற விருப்பம் மக்களுடைய சிந்தையிலும் இருதயத்திலும் இருக்குமானால். அந்த ஸ்திரீ அதைச் செய்ததாகவோ அல்லது வேறு யாராவது அதைச் செய்ததாகவோ நான் நம்பவில்லை. தான் செய்வது தவறு என்று அறிந்து, ஒரு மெதோடிஸ்டு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர் அந்த சபைக்காக வைராக்கியம் பாராட்டமாட்டார். தான் செய்வது சரி என்று அந்த மனிதர் எண்ணுகிறார். தான் வித்தியாசமானவராக இருக்க வேண்டுமென்பதற்காக ஒரு திருத்துவக் கொள்கைக்காரர் ஒரு ஒருத்துவக் கொள்கைக்காரரையும் ஒரு ஒருத்துவச் கொள்கைக்காரர் ஒரு திருத்துவக் கொள்கைக்காக பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தைச் சேர்ந்தவரையும் கண்டனம் செய்வதில்லை. தான் செய்வது சரியென்று அவர் எண்ணுவதினாலேயே அவர் அப்படி செய்கிறார். நாம் அவருடைய அபிப்ராயத்தை மதிக்க வேண்டும். சால்வையானது இருபுறமும் நீள, கூடியதாயிருக்கிறது என்பதை அறிவீர்கள். ஆனால் அவை எல்லாவற்றிலும், தாங்கள் செய்வது சரியே என்று நம்பத் தக்கதாக ஒரு மனிதனுடைய இருதயத்திலோ அல்லது ஒரு ஸ்திரீயினுடைய இருதயத்திலோ ஏதாவது இருக்குமானால், எங்கேயோ சரியானது இருந்தே தீர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் அடிக்கடி சொல்லியிருப்பது போல, “ஆழமானது ஆழத்தை நோக்கி கூப்பிடும்போது, அந்தக் கூப்பிடுதலுக்குப் பதிலளிக்கத் தக்கதாக அங்கே ஒரு ஆழம் இருந்தே ஆகவேண்டும்.” 33ஒரு காலத்தில் சீல் (நீர் நாய்) ஆனது கடற்கரை ஓரங்களில் கால்களைக் கொண்டு நடந்தது என்று நாம் சொல்லக் கேட்டிருக்கிறோம். இப்போது அதற்கு கால்களில்லை. அவைகள் மடக்க கூடிய நீந்துவதற்குத் தேவையான இறகுகளாக மாறிவிட்டன. ஏனென்றால் மிருதுவான உரோமம் கொண்ட மிருகமாயிருந்த அதை நிலத்திலிருந்து கடலுக்கு எடுத்துச் சென்றபோது அதற்கு நீந்தும் இறகுகள் தேவைப்பட்டது. இயற்கையானது அதற்கு கால்களுக்குப் பதிலாக நீந்தும் இறகுகளை அமைத்துத் தந்தது. ஏனென்றால் அது நடப்பதைக் காட்டிலும் அதிகம் நீந்துவதாயிற்று. தென் துருவத்திற்கு சென்ற அந்த மகத்தான மனிதனை என்னால் நினைவில் கொண்டுவர முடியவில்லை. அவருடைய பெயர் என்ன? பைர்ட் (Byrd). அவர் அந்த ஆராய்ச்சிப் பயணத்தில் தேவைப்படும் பாலைப் பெற்றுக் கொள்வதற்கென்று கொண்டு சென்ற ஆடு மாடுகளுக்கு மேல் சட்டைகளைப் பண்ணுவித்தார் என்று கூறினார்கள். அந்தக் கால் நடைகள் பனியில் உறைந்து இறந்துவிடாதபடி அவைகளுக்கு உரோமத்தாலான மேல் சட்டைகளைப் பண்ணுவித்தார். ஆனால் அவர் அங்கே சேர்ந்த பிறகு அவைகளுக்கு அந்த உரோமத்தாலான மேல் சட்டைகள் தேவைப்படவில்லை. இயற்கையே அவைகளுக்கு ஒரு மேல் சட்டையை அவைகள் மேல் வளர வைத்திருந்தது. பாருங்கள் ஏன்? மீனுடைய முதுகில் ஒரு சிறகு இருக்கும் முன்பாக அது நீந்துவதற்கென்று தண்ணீர் இருக்க வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் அதற்கு ஒரு சிறகு இருந்திருக்காது. பூமியில் ஒரு மரம் வளருவதற்கு முன்பாக, அது வளரத் தக்கதாக முதலில் அங்கே ஒரு பூமியிருக்க வேண்டியிருந்தது. இல்லாவிடில் அங்கே மரமே இருந்திருக்காது. ஆகவே, பாருங்கள். மனித இருதயத்தில் ஏதோ ஒன்று ஏதோ ஒன்றுக்காக கூப்பிட்டுக் கொண்டிருக்கும் வரை அதற்குப் பதிலளிக்கத் தக்கதாக ஏதோ ஒன்று அங்கே இருக்க வேண்டும். அந்தக் கூப்பிடுதலை, திருப்திபடுத்த. 34ஒரு ஸ்திரீ... இங்கு சிறிது காலத்திற்கு முன்பு இறந்துபோன ஒரு ஸ்திரீயின் மீது ஒரு சவப்பரிசோதனை நடைபெற்றது. அவர் விடாமல் எப்பொழுதும் வெங்காயம் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தாராம், அவர் அவ்விதம் வெங்காயம், சாப்பிடவில்லையென்றால், அவர் தலை அரிக்குமாம். இன்னும் எல்லாக் காரியங்களும் நடக்குமாம். அவர்களால் அதை அறிந்து கொள்ள முடியவில்லை. அப்படி சவப்பரிசோதனை செய்ததன் மூலம், அந்த ஸ்திரீயின் சரீரத்தில் கட்டி போன்ற வளர்ச்சியை கண்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு பெயரும் அளித்தார்கள். அந்தக் கட்டி போன்ற வளர்ச்சியை எடுத்து ஒரு கிண்ணம் நிறைய வெங்காயத்தில் போட்டிருக்கிறார்கள். ஒரே இரவில் அது வெங்காயங்களை திரவமாக்கியிருக்கிறது. பாருங்கள்? அது என்ன? அந்த ஸ்திரீயில் இருந்த ஏதோ ஒன்று வெங்காயத்தைக் கூப்பிட்டது. அங்கே வெங்காயமே இருந்திராவிட்டால் அங்கே அந்த வளர்ச்சியே இருந்திருக்காது. வேறு விதமாக கூற வேண்டுமானால், ஒரு சிருஷ்டிப்பு இருப்பதற்கு முன்பு ஒரு சிருஷ்டிகர் முதலில் இருக்க வேண்டும். பாருங்கள்? 35இப்போது, மனித இருதயத்தில் மெதோடிஸ்டுகள் என்றும், பாப்டிஸ்ட் என்றும் பிரஸ்பிடேரியன் என்றும், கத்தோலிக்கர் என்றும் இந்த மற்ற எல்லா காரியங்களும், ஒன்றான மெய்யான அந்த வழியைக் கண்டுகொள்ள ஒரு ஏக்கம் இருக்குமானால், அவர்கள் தங்கள் குருக்களாலும், மேய்ப்பர்களாலும் மற்றவர்களாலும், “இதுதான் மெய்யான வழி” என்று அறிவிக்கப்படுகிறார்கள். “கத்தோலிக்க சபைக்கு புறம்பே இரட்சிப்பு கிடையாது” என்று குருவானவர் கூறுகிறார். நல்லது, ஒவ்வொரு சபையும் தங்கள் சொந்தக் கருத்தை எடுத்துக் கொள்கின்றது. அவர்களில் சிலர் அதை ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் அதை தங்கள் கிரியைகளின் மூலம் செய்கிறார்கள். உங்கள் வார்த்தையை விட உங்கள் கிரியை அதிக சப்தமாக பேசுகிறது. வேறு விதமாக சொன்னால், அவர்கள் கத்தோலிக்கர்களைக் காட்டிலும் மாய்மாலக்காரர்களாக இருக்கின்றனர். கத்தோலிக்கர் அதை வெளிப்படையாக அறிக்கையிடுகின்றனர், “இதுதான் ஒரே காரியம் என நம்புகிறேன்” என்கின்றனர். ஆனால் அவர்களோ அப்படிச் செய்யமாட்டார்கள் அதை மறைக்கிறார்கள், ஆனால் அவர்கள் கிரியைகளோ அவர்கள் எதை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கின்றன. பாருங்கள்? 36மனித இருதயத்தில் அதைக் கண்டுபிடிக்க விருப்பம் இருப்பதால் அந்த ஒரு இடம் இருந்தே ஆகவேண்டும். நமக்குத் தேவையான ஒவ்வொன்றிற்கும் தேவனுடைய வார்த்தை விடையளிக்கிறது என்று நான் கருதுகிறேன். ஆகவே தேவனிடத்தில் பதிலுண்டு, ஆகவே நாம் வேத வாக்கியங்களில் அதற்காக இப்போது தேடுவோம். அப்படி தேவன் வேத வாக்கியங்கள் மூலம் அந்த, ஒரே ஸ்தாபனத்தை, ஒரே ஸ்தலத்தை (அவ்விதம் இருக்குமானால், அந்த ஒரே ஸ்தாபனத்தை), தேவன் மனிதனை சந்திக்கும் ஒரே வழியைக் காட்டுவாரானால், வேதாகமம் என்ன கூறுகிறதென்று சத்தியத்தைக் கண்டு கொண்டபடியால் நாம் அதைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 37இப்பொழுது, உபாகமம் என்ற வார்த்தைக்கே “இரண்டு பிரமாணங்கள்” என்று அர்த்தமாகும். தேவனிடம் இரண்டு பிரமாணங்களுண்டு. இரண்டு பிரமாணங்கள். அவைகளில் ஒன்று வார்த்தைக்கு கீழ்ப்படியாமலிருந்து மரிப்பது, மற்றொன்று வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஜீவிப்பது. உபாகமம் என்றாலே அந்த இரண்டு பிரமாணங்கள் என்று அர்த்தம். அவையிரண்டும் வேத வாக்கியங்களில் நமக்கு முற்றிலுமாய் விளக்கிக் காட்டப்பட்டுள்ளன. ஒன்று மரணம், மற்றொன்று ஜீவன். ஜீவனும் மரணமும் தேவன் ஜீவனில் மட்டும் கிரியை செய்கிறார். சாத்தான் மரணத்தில் மட்டும் கிரியை செய்கிறான். இவைகள் உலகத்திற்கு பகிரங்கமாக ஒவ்வொரு கண்ணுக்கும் முன்பாக வெளிப்படையாக விளக்கிக் காட்டப்பட்டது. ஆகவே அதற்கு மன்னிப்பே கிடையாது. அவைகளில் ஒன்று சீனாய் மலையின் மீது நியாயப் பிரமாணம் கொடுக்கப்பட்ட போது காட்டப்பட்டது. அது முழு மனுக்குலத்தையும் மரணத்தின் கீழ் அடைத்துப் போட்டது; மற்றொன்று கல்வாரி மலையின் மீது கொடுக்கப்பட்டது, அது முழு மனுக்குலத்தையும் ஜீவனுக்குக் கொண்டு வந்தது, இயேசு கிறிஸ்துவில் தண்டனைக்குரிய அபராதம் செலுத்தப்பட்டபோது. இந்த இரண்டு மகத்துவமான காரியங்களில் உபாகமத்தின் இரண்டு பிரமாணங்களும் நிறைவேற்றப்பட்டன. 38நீங்கள் மறுபடியும் கவனிக்க விரும்புகிறேன். இரண்டு உடன்படிக்கைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு உடன்படிக்கை ஆதாமுக்குக் கொடுக்கப்பட்டது. நியாயப் பிரமாணத்தைப் போன்ற நிபந்தனைகளின் மீது; “இதை நீ தொடாதிருப்பாயானால், அப்போது நீ வாழுவாய்; ஆனால் இதை நீ தொடுவாயானால், நீ மரிப்பாய்”. அது ஒரு பிரமாணமாயிருந்தது. பிறகு, கிருபையினால் உண்டாகிய, நிபந்தனையற்ற மற்றொரு பிரமாணம் ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டது. “நான் உன்னையும் உன் சந்ததியையும் இரட்சித்திருக்கிறேன்,” அவனுக்குப் பின்வரும் அவனுடைய சந்ததி ஆமென். அது கல்வாரிக்கு ஒரு மாதிரி ஆகும். ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட உடன்படிக்கைக்கு மாதிரியல்ல, அது ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட உடன்படிக்கை ஆகும். ஆனால் இப்போது மனிதன் அவரை ஆராதிப்பதற்கு அவர் மனிதனை சந்திக்கும் ஒரே ஒரு இடம் தான் இருக்கிறது என்று அவர் சொல்லக் கேட்கிறோம். என்னுடைய மூல வேத வாக்கியத்தில் நீங்கள் இங்கேயே வாசிக்கக் கேட்டீர்கள். இன்னும் சில நிமிடங்களில் நாம் திரும்பவும் அதை நம்முடைய கவனத்திற்குக் கொண்டு வருவோம். 39தேவன் மனிதனை சந்திக்கும் ஒரே ஒரு இடம் தான் இருக்கிறதென்றால் நாம் அதிக ஜாக்கிரதையாயிருப்பது நல்லது. இப்போது இன்று காலையிலே நாம் நம்முடைய பாரம்பரியங்களையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, இந்த ஓய்வுநாள் பள்ளிப் பாடத்திலே, அந்த ஒரு ஸ்தானத்தைக் கண்டு கொள்ளத் தக்கதாக அதிக ஜாக்கிரதையாயிருப்போமாக, ஏனென்றால், வேறு எந்த ஸ்தானத்திலும் அவர் உன்னை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்பதாக தேவன் இங்கே கூறியிருக்கிறார். வேறு எந்த சபையிலும் அவர் உங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார். அவருடைய சபையில் தான், உங்களை அவர் ஏற்றுக் கொள்ளும் ஒரே ஸ்தானத்தில்தான். இப்போது, சகோதரர் பிரான்ஹாமே, என்ன சொல்லுகிறீர்கள். “நான் உண்மையானவனாக இருந்தால்?” இல்லை. அவருடைய நாட்களிலிருந்த சில உண்மையான மக்களிடம், ஆராதனை செய்பவர்களிடம், இயேசுவானவர் பேசினதை நினைவில் கொள்ளுங்கள். “வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறீர்கள்,” என்று கூறினார். அவர்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து உண்மையான நிஜமான ஆராதனை. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, “வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறீர்கள்,” அல்லது அவர்களுடைய ஸ்தாபன கொள்கைகள். உண்மையோடு, பயபக்தியோடு, அவர்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு தெய்வ நம்பிக்கையோடு ஆராதித்தனர். பரிசேயர் மட்டும் புதிதாக அப்படிச் செய்துவிடவில்லை. இயற்கையான பிறப்பின்படி பூமியில் இங்கு வந்து முதலில் ஆராதனை செய்த இருவராகிய காயீனும் ஆபேலும் முற்றிலும் அதே மனோபாவத்தோடே வந்தார்கள். 40ஆபேல் எவ்வளவு தெய்வ நம்பிக்கையுள்ளவனாக இருந்தானோ... அவ்வளவு தெய்வ பக்தியுள்ளவனாக காயீனும் இருந்தான். அவர்கள் இருவரும் பலிபீடங்களைக் கட்டினார்கள். அவர்கள் இருவரும் தேவனை நேசித்தார்கள். அவர்கள் இருவரும் பலிகளை செலுத்தினார்கள். அவர்கள் இருவரும் தேவனை ஆராதித்தார்கள். அவர்கள் இருவரும் தசமபாகம் செலுத்தினர். ஒருவர் செய்தது போலவே ஒவ்வொன்றையும் இருவரும் செய்தனர். ஆனால் ஆபேல் விசுவாசத்தால் செய்தார். விசுவாசமென்பது வெளிப்படுத்தலாகும். (தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்பட்டு, தெளிவாக்கப்பட்டு, எடுத்துக்காட்டப்பட்டு உறுதிப்படுத்தப்படுவது) மகிமை! காயீன் ஒரு பலியை செலுத்தினான், ஆனால் தேவன் அதை உறுதிப்படுத்தவில்லை. தேவன் ஆராதனையை கோரினார். காயீன் பலியை செலுத்தினான். ஆனால் தேவன் அதை உறுதிப்படுத்தவில்லை. உண்மையான வழியின்படி அல்லாமல்... “நல்லது, என்னுடைய சபை தான் அது என்னுடைய...” என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஒரு நிமிடம் மட்டும் பொறுங்கள் தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை அவர் பேச உபயோகித்த வேத வார்த்தைகளின் படியே வியாக்கியானம் செய்கிறார். பாருங்கள், “நான் தெய்வ பக்தியுள்ளவன். நான் என்னை சிருஷ்டித்தவரில் அன்பு கூறுகிறவன். நான் தேவரீருக்கு இந்த அருமையான பலிபீடத்தைப் படைக்கிறேன். நான் உமக்கு இந்த பலியை ஏறெடுக்கிறேன். கர்த்தாவே, நான் உம்மை நேசிப்பதால் இவைகளையெல்லாம் நான் கட்டினேன்” என்று காயீன் கூறினான். ஆபேலும் அதே காரியத்தைக் கூறினான். இப்போது, உறுதிப்படுத்தப்பட்டது அதுதான், நிரூபிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்டதான தேவனுடைய மெய்யான வழியை ஆபேல் வெளிப்படுத்தல் மூலமாய் கண்டு கொண்டிருந்தபடியால் தேவன் இறங்கி வந்து அவனுடைய பலியை ஏற்றுக் கொண்டார். 41இப்போது அந்தக் காயீனுடைய ஆவியானது இந்தக் கடைசி நாள் பரியந்தமும் வேதாகமத்தில் தொடர்ந்து வருவதை கவனியுங்கள். அடிப்படைத் தத்துவமா? ஒருவர் எவ்வளவு அடிப்படைத் தத்துவத்தின்படி செய்தாரோ. அவ்வளவு மற்றவரும். தீர்க்கதரிசியாகிய பிலேயாமையும் தீர்க்கதரிசியாகிய மோசேயையும் பாருங்கள். இரத்தத்துடனாகிய, யேகோவாவின் பலிபீடங்களாகிய ஏழு பலிபீடங்களுடன் இருவரும்; அது மட்டுமல்ல. ஒவ்வொன்றின் மீதும் ஆட்டுக்குட்டிகள். எண்ணிக்கையின்படி, பரிபூரணத்தைக் குறிக்கும், சரியான இலக்கமான ஏழு, ஏழு ஆட்டுக் கடாக்கள். ஒன்றைப் போலவே மற்றதும் சரியாக அமைக்கப்பட்டிருந்த, இரண்டு பலிபீடங்கள். ஒருவர் எவ்விதம் அடிப்படைத் தத்துவத்தின்படி காரியங்களைச் செய்தாரோ, அதேபோல மற்றவரும் கூட செய்பவராக இருந்தார். ஆனால் தேவன் யாரை உறுதிப்படுத்தினார்? பாருங்கள்? பாருங்கள்? அவருடைய வார்த்தையிருந்தவரையே. அடிப்படைத் தத்துவம் மிக அதிகமான காரியமல்ல; தேவனுடைய வெளிப்பாடுதான் காரியம். 42இப்போது சிந்தியுங்கள்! இந்த மனிதர்கள் (இந்தப் பரிசேயர்கள்) இவர்கள் ஏன் அழைக்கப்பட்டு இயேசுவானவரால் இந்த நிலையில் வைக்கப்பட்டார்கள்? நீங்கள் வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறீர்கள் என்றார். அவரை ஆராதிக்கிறார்கள். நிஜமான ஆராதனை, அவர்கள் உள்ளங்களிலிருந்து மெய்யான ஆராதனை. நீங்கள், “நீங்கள் எனக்கு வீணாய் ஆராதனை செய்கிறீர்கள்.” ஏன்? “உங்கள் மனுஷருடைய பாரம்பரியங்களை உபதேசங்களாகப் போதித்து ஆனால் தேவனுடைய கற்பனைகளை மக்களுக்கு அவமாக்குகிறார்கள்.” நான் உங்களுக்கு ஒரு மெதோடிஸ்ட் ஸ்தாபனத்தாரின் செய்தியைக் கொண்டு வந்தால் அது உங்களில் ஒரு பயனும் தராது. இதுவோ மணவாட்டியின் காலம், மோசே நோவாவுடைய செய்தியைப் போதித்தால் அது எவ்வித பலனும் தராது. இயேசுவானவர் மோசேயினுடைய செய்தியைப் போதிப்பாரானால் அது எவ்வித பலனையும் தராது ஏனென்றால் முன் குறிக்கப்பட்டுள்ள வித்துக்கள் அங்கே கிடக்கின்றன. அந்த வித்துக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய தண்ணீரால் தான் அவைகள் நீர்ப்பாய்ச்சப்படும். பாருங்கள். வேறு எந்த சூழ்நிலையிலும் அது வளராது. அதை வளர்க்கத் தகுந்த நிலையாக இருக்க வேண்டும். 43இப்போது, நீங்கள் ஒரு கோழி முட்டையை எடுத்து, ஒரு பெட்டைக் கோழியின் கீழ் இருக்க வேண்டிய அதை ஒரு செயற்கை முறையில் குஞ்சு பொரிக்கும் பெட்டியில் வைப்பீர்களானாலும் எப்படியும் குஞ்சு பொரிக்கும். அதை ஒரு நாய்க்குட்டியின் கீழ் வைப்பீர்களானாலும் குஞ்சு பொரிக்கும். அதைக் குஞ்சு பொரிக்க வைக்கத் தேவையான தகுந்த நிலையாகிய மித வெப்பமே காரியமாயிருக்கிறது. ஆகவே அது தக்க நிலையின் கீழ் இருக்க வேண்டும். ஒரு நல்ல உயிருள்ள முட்டையை எடுத்து இறந்துபோன ஒரு பெட்டைக் கோழியின் கீழ் வைப்பீர்களானால், அது குஞ்சு பொரிக்காது. பாருங்கள் பாருங்கள், தக்க நிலையே காரியமாயிருக்கிறது. நல்லது, நாம் வசிக்கும் இந்தக் காலத்திலும் அது அவ்விதமாகவே இருக்கிறது. அதை செய்யத் தக்கதான இந்த காலத்திற்குரிய தேவனுடைய வழி என்னதென்று கண்டு கொள்ள வேண்டும். மார்ட்டின் லூத்தரும் அதைக் கண்டு பிடித்தார். ஜான் வெஸ்லியும் அதைக் கண்டு பிடித்தார். பெந்தெகொஸ்தேயினரும் தங்கள் காலத்தில் அதைக் கண்டு பிடித்தனர். தேவனுடைய காலமும் அதை செய்யத் தக்கதான நேரமும். 44இப்போது, பெந்தெகொஸ்தேயினர். அந்த சகோதரர் தன்னுடைய கண்களில் ஒன்றை இழந்திருந்தார் என்று நம்புகிறேன், கலிபோர்னியாவில் பழைய அசூசா தெருவில் பெந்தெகொஸ்தே செய்தியை உண்மையிலேயே ஆரம்பித்தவரான கறுப்பு நிற சகோதரன். அவரைப் பார்த்து சிரித்தார்கள். அவர் நீக்ரோ வகுப்பைச் சேர்ந்தவரானதால் பரிகசிக்கப்பட்டார், ஆனால் அவர் அந்த காலத்திற்குரிய ஒரு செய்தியைக் கொண்டு வந்தார். தன் பெயரால் கையொப்பம் கூட போடத் தெரியாத சிறிய உருவம் கொண்ட ஒரு மனிதர், ஆனால் வரங்கள் திரும்ப அளிக்கப்படுவதற்கான காலம் இது தான் என்று கர்த்தர் அவருக்கு வெளிப்படுத்தியிருந்தார். அப்படியே அவைகள் வந்தன. என்ன சொன்ன போதிலும், அது வந்தது. ஆனால் ஒவ்வொருவரும் அதன் வசீகர சக்திக்குள் ஈர்க்கப்பட்டனர், அதுதான் அந்த காலமென்றும், அந்த மக்கள் அந்நிய பாஷைகளில் பேசக் கூடும் என்றெல்லாம் தேவன் உறுதிப்படுத்துவதையும் கண்டனர். அது நிகழ்ந்தது. ஆனால் அவர் சென்று, “இதுதான் ஒரே அடையாளம்” என்று வற்புறுத்தியபோது அது அங்கேயே கொல்லப்பட்டது. பாருங்கள்? தொடர்ந்து செல்கிறது. பாருங்கள். அதுதான் அதைச் செய்தது. பிறகு, அவர்கள் இதையும் அதையும் பிரிக்கத் தொடங்கி ஸ்தாபனங்களை உண்டாக்கினர்; ஒருவர் மேகத்தின் மேல் வருகிறார், மற்றொருவர் முட்புதரில் வருகிறார். ஓ, என்னே, இவ்வாறே போய்விடுகிறது. 45ஸ்தாபனங்கள் இதைத்தான் செய்கின்றன. பாருங்கள்? தேவன் ஸ்தாபனங்களுக்குக் காரணர் அல்லர். ஏனென்றால் ஸ்தாபனங்கள் பாபிலோன் ஆகும். அவர் குழப்பத்திற்குக் காரணர் அல்லர். அதைக் காண்பதற்கு நீங்கள் அறிவாளியாக இருக்க வேண்டியது கூட இல்லை. அது பாபிலோன்! பாருங்கள்? பாரம்பரியம் (அதைக் குறித்து சிந்தியுங்கள்), உண்மையான மக்கள். இப்பொழுது. இன்னும், அவர்கள் அதை விசுவாசிப்பதால், தேவன் மனிதனைச் சந்திக்கும் ஒரு உண்மையான ஸ்தானம் இருப்பது அவசியமாகிறது. இப்போது, 2வது வசனத்தைக் கவனியுங்கள்; “நான் தெரிந்தெடுத்திருக்கும் ஸ்தானத்தில் ஆராதனை செய்.” பலி, உண்மையிலேயே, அவர்கள் ஆராதிக்கும் இடத்தில் போய் பலியிட வேண்டும். “நான் தெரிந்தெடுத்த ஸ்தானம்; நீ தெரிந்தெடுத்தது அல்ல, மனிதன் தெரிந்தெடுத்தது அல்ல. நான் தெரிந்தெடுத்தது, நீ இந்த இடத்தில் ஆராதனை செய்.” அப்படியானால் அங்கே ஒரே ஒரு ஸ்தானம் தான் உண்டு என்றும் மற்றவையெல்லாம் வீண் என்றும் காட்டுகிறது. அது உங்களுடைய தெரிந்து கொள்ளுதலாக இருக்கக் கூடாது. ஆனால், அவருடைய தெரிந்து கொள்ளுதலாயிருக்க வேண்டும். “நல்லது, நான் கோவிலுக்கு போக வேண்டியதில்லை.” அல்லது “பெண்கள் பிரசங்கிப்பதைப் பற்றியும், பெண்கள் தங்கள் தலை முடியை வெட்டிக் கொள்வதைப் பற்றியும், ஆண்கள் இந்த மற்ற காரியங்கள் செய்வதைக் குறித்தும் கூட நீங்கள் மிகைப்படுத்திக் கூறுவீர்கள். ஏன், நீங்கள் அவ்வளவு குறுகலான புத்தியுடையவர்”, எல்லாம். சரி, நீ அதைக் குறித்து தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவ்விதமாக செய்பவர்களிடத்திற்குச் செல். பாருங்கள்? “அவர்கள் எனக்கு வீணாய் ஆராதனை செய்கிறார்கள்” என்று வேதத்தில் எழுதியிருப்பதை கண்டு கொள்வாய். பாருங்கள்? இதே காரியத்தைக் குறித்து இயேசுவானவர் பேசினார். பாருங்கள்? 46ஒவ்வொரு இம்மியளவு காரியத்திலும், ஒவ்வொன்றிலும் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். எப்பொழுதும் திராட்சைக் கொடியைக் கெடுத்த சிறு நரியைப் போல நீங்கள் செய்கிற பெரிய காரியங்களல்ல, நீங்கள் செய்யாமல் விடுகிற சிறு காரியங்களே முக்கியமாகும். ஒரு சங்கிலியில் உள்ள உறுதி அதிலுள்ள கரணைகளில் (அல்லது வளையங்கள்) மிக பலவீனமான கரணையின் உறுதியே ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். “தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கும் உரிமையைப் பெறத் தக்கதாக தேவனுடைய எல்லா கட்டளைகளையும் கடைபிடிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” இது தேவன் சொன்ன எல்லாவற்றையும் செய்யுங்கள். பெண்கள் நீண்ட முடியுள்ளவர்களாயிருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. நீங்கள் சொல்கிறீர்கள்... சில நாட்களுக்கு முன்பு ஒரு மனிதர் என்னிடம், “ஆடை அளவுகளைக் குறித்த மதத்தை நான் போதிப்பதில்லை” என்றார். அப்படியானால், “நீங்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறதில்லை” என்று நான் கூறினேன். தேவன் உரைத்து வைத்திருக்கிறார், என்ன செய்ய வேண்டுமென்று அவர் கூறினார். நீங்கள் அதை செய்தால் செய்யுங்கள்... அது உங்களுடைய இயற்கையான நியாயமான காரியமாயிருக்கிறது. எந்த சிறிய காரியம்... சிறிய அற்பமான காரியம்... “எல்லாச் சிறிய காரியங்களையும் ஏற்றுக் கொண்டு தான் சிறிய காரியங்களை செய்பவர்கள் பாக்கியவான்கள்” என்று இயேசு கூறினார். ஒரு பெண் தன் தலைமயிரை வளரவிடுவது அவள் செய்யக் கூடிய காரியமே, அவள் அதைக் கூட செய்யமாட்டாள். அவள் அதைக்கூட செய்யமாட்டாள். “ஓ, எங்களுக்கு மகத்தான காரியங்களைப் போதியுங்கள்.” நீங்கள் எளிய, சாதாரணமான காரியங்களைச் செய்யாதிருக்கும் போது, நீங்கள் மகத்தான காரியங்களை எப்படிப் போதிக்க முடியும்? ஏனென்றால், நீங்கள் பாருங்கள். உங்கள் உள் நோக்கமும் உங்கள் குறிக்கோளும் தவறாயிருக்கிறது. 47அது தேவனிடம் உங்களுக்குள்ள அன்பைப் பொறுத்தது, “கர்த்தாவே, நான் எதைச் செய்ய வேண்டுமென்று தேவரீர் விரும்பினாலும் எனக்குக் கவலையில்லை. நான் அதைச் செய்ய தயாராக உள்ளேன்.” அப்பொழுது நீங்கள் முன்னேறுகிறீர்கள். ஆனால் நீங்கள் அதை அவ்விதம், அவர் செய்ய சொன்னவிதமாக, செய்யாவிட்டால் சொன்னவிதமாக, செய்யாவிட்டால்... அது அவருடைய தெரிந்தெடுப்பு, “நான் தெரிந்தெடுத்த ஸ்தானம். அங்கே தான் நீங்கள் உங்கள் பலியுடன் ஆராதனை செய்ய வேண்டும்.” காயீன் தன் பலியைக் கொண்டு வந்தான். ஆபேல் தன்னுடைய பலியைக் கொண்டு வந்தான். நீங்கள் அதை எந்த இடத்திற்குள் எடுத்துச் செல்லுகிறீர்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. அவர் தெரிந்தெடுக்கும் ஸ்தானத்திற்குள் நீங்கள் அதை எடுத்துச் செல்வீர்களானால், அது முற்றிலும் சரியானதாயிருக்கும். அவர் அதை ஏற்றுக் கொள்வார்; அவ்விதம் இல்லையென்றால், அவர் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார். அதே பலியாயிருந்தாலும், எதுவாயிருந்தாலும், அது அந்த ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்திற்குள் கொண்டு வரப்படாவிட்டால் தள்ளப்பட்டுவிடும். இப்போது நாம் இந்த பலியை எங்கே கொண்டு வர விரும்புகிறோம் என்பதைக் கண்டு பிடிக்க விரும்புகிறோம். அதை நாம் கண்டு பிடிக்கக் கூடுமானால்... நாமனைவரும் பரலோகத்திற்குச் செல்ல. விரும்புகிறோம். இல்லையா? நாமெல்லாரும் குற்றம் புரிந்தவர்கள் என்பதை நாமெல்லாரும் அறிவோம். இயேசுவே பலியாயிருக்கிறார் என்பதை நாமெல்லாரும் நம்புகிறோம். இப்போது அவரை எங்கே எடுத்துச் செல்வது எங்கே அது அங்கீகரிக்கப்படும் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம். பாருங்கள்? அது சரிதான். அவரை எங்கே எடுத்துச் செல்வது என்று வேதாகமம் நமக்கு அறிவிக்கிறது. அப்படியானால் அது அங்கீகரிக்கப்படும்; அந்த இடத்திற்கு வெளியே, அது அங்கீகரிக்கப்படமாட்டாது. 48பலியை வைப்பதற்கு அவர் தெரிந்தெடுத்த ஸ்தானத்தை நாம் இங்கேயும் கவனிப்போமாக. பலியை வைப்பதற்கு அவர் தெரிந்தெடுத்த ஸ்தானம். இந்த வாசல்களில் ஏதாவது ஒன்றில் நீங்கள் அதை வைத்துவிட முடியாது; அதை வைப்பபதற்கு அவர் தெரிந்தெடுத்த ஸ்தானத்தில் தான். அந்த ஸ்தானத்தில் அவர் தமது பெரையும் வைத்துள்ளார். பாருங்கள், அவர் அதைத்தான் இங்கே கூறினார். அவர் அதிலே தமது நாமத்தை வைக்கத் தெரிந்து கொண்டார். இப்போது இந்த இடத்திற்காக வேதத்தை நாம் ஆராய்ந்து பார்ப்போம், ஏனென்றால் அவர் தமது நாமத்தை வைத்த இடமும் அதுதான். இப்போழுது வேத பாடத்திலிருந்து வாசிப்போம். இன்று காலையிலே ஒரு சிறு குறிப்பு என்னிடம் வந்தது. அதை இங்கே வைத்திருந்தேன். இந்த அதிகாரத்தின் இரண்டாவது வசனத்தை எடுத்துக் கொள்வோம். இப்போது, உங்களை அதிக நேரம் வைத்திருக்க எனக்கு விருப்பமில்லை, தொலைபேசி மூலம் நம்முடன் இணைக்கப்பட்டிருக்கிறவர்களை முன்னிட்டு இப்போது இந்த 16ம் அதிகாரத்தின் இரண்டாவது, வசனம். கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடு மாடுகளைப் பலியிடுவாயாக. 49இப்போது, உங்கள் உத்தமத்தையும் நீங்கள் அறிக்கை செய்ய விரும்பும் எல்லாவற்றையும் நீங்கள் ஒரு மெதோடிஸ்ட் பலிபீடத்திற்கோ, அல்லது ஒரு பாப்டிஸ்ட் பலிபீடத்திற்கோ அல்லது ஒரு பெந்தெகொஸ்தே பலிபீடத்திற்கோ உங்களால் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் அவர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொண்ட ஒரு பலிபீடம் எங்கேயோ இருக்கிறது. அந்த ஸ்தானத்தில் அவர் உங்களை சந்திப்பார். நீங்கள் எல்லாவற்றையும் சரியாக ஓடத் தக்கதாக அமைப்பீர்களானால் அது ஓடப் போகிறது. ஒவ்வொன்றும் ஒழுங்கின்படி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த மின் கம்பியில் மின் ஓட்டம் இடை மறிக்கப்படுமானால் அந்த விளக்கு எரியாது. ஏனென்றால் அது பூமியில் தட்டுப்பட்டுவிட்டது. தேவனுடைய வார்த்தையில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொண்டு அல்லது அவருடைய ஸ்தானங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு உங்கள் சொந்த இருதயத்தில் சுய நலமான குறிக்கோள்களை உடையவர்களாக இருப்பீர்களானால், அது தேவனுடைய வவ்லமையை அங்கேயே தரை தட்ட வைத்துவிடும். நீங்கள் புத்திசாலியாக இருப்பதற்கென்று அதைச் செய்வீர்களானால், வேறு யாரோ ஒருவரை விட நீங்கள் வித்தியாசப்பட்டவராக இருப்பதற்கென்று அதைச் செய்வீர்களானால், வேறு யாரோ ஒருவரை விட நீங்கள் வித்தயாசப்பட்டவராக இருப்பதற்கென்றோ அல்லது வேறு எதற்காகவாவது அதைச் செய்வீர்களானால் அது அங்கேயே தரை தட்டிவிட்டது, உருக்குக் கம்பியை (Fuse) அது எரித்துவிடும். நீங்கள் தவறாக செய்கிறீர்கள். நீங்கள் உண்மையோடும் முழு இருதயத்தோடும் வர வேண்டும். உங்களுடைய உள் நோக்கங்களையும் உங்கள் குறிக்கோளையும் தேவன் மீது வையுங்கள். பிறகு அவருடைய ஸ்தானத்திற்காக தேடுங்கள். எங்கே சொல்லியிருக்கிறார் என்று காணுங்கள், அதை அங்கு கொண்டு வாருங்கள். பாருங்கள்? 50மார்த்தாளையும் மரியாளையும் பாருங்கள். அவர்களுக்கு அவர் இந்த சுவிசேஷத்தைப் போதித்திருந்த பின்பு (அவருடைய நாளுக்குரிய வெளிச்சம், அவர் மேசியா என்பது) அவர் திரும்ப வந்திருந்தபோது, அவர் வெறுக்கப்பட்டார், புறக்கணிக்கப்பட்டார். ஓ, அந்தப் பரிசேயர்களும் சபைகளும் அவரை வெறுத்தார்கள். ஆனால் லாசருவோ மரித்திருந்தான். அவருக்கு ஆத்ம நண்பனாயிருந்த சகோதரன் அவன் அங்கேயே கிடக்கவிட்டார்; அவர்கள் அவருக்காக ஆள் அனுப்பியிருந்தார்கள், அவர் வரக் கூட இல்லை. ஆனால் மார்த்தாளை, அவளுடைய மனோ நிலையைக் கவனியுங்கள். “ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருப்பீரானால் என்று அவள் கூறினாள். (...அவருக்கு அவருடைய சரியான அந்தஸ்தைக் குறிக்கும் பட்டப் பெயரைக் கொடுங்கள்: ஆண்டவரே, யேகோவா) மகிமை! நீர் இங்கே இருந்திருப்பீரானால், என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்.” ஜீவனும் மரணமும் ஒரே வழியில் சம்பந்தப்பட முடியாது. அல்லது ஒரே வீட்டில் சம்பந்தப்பட முடியாது. “நீர் இருந்திருப்பீரானால்... அவன் மரித்திருக்கமாட்டான்.” இயேசு அவளிடம் கூறினார், “நானே உயிர்த்தெழுதெலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று தேவன் கூறுகிறார். “உன் சகோதரன் மறுபடியும் ஜீவிப்பான்” என்று அவர் முதலில் கூறினபோது. அவள் கூறினாள். “ஆம், ஆண்டவரே, நான் மெய்யாகவே அதை விசுவாசிக்கிறேன். ஒரு யூத ஸ்திரீயாக, மரித்தோரின் பொதுவான உயிர்த்தெழுதல் ஒன்று இருக்கும் என்று விசுவாசிக்கிறேன், என் சகோதரனும் ஆராதனையில் உண்மையும் உத்தமமுமாக இருந்தானென்று விசுவாசிக்கிறேன். வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள அந்த மேசியா நீரே என்று விசுவாசிக்கிறேன். ஏனென்றால் தேவன் தம்முடைய வார்த்தையை உம்மில் உறுதிப்படுத்துவது இந்த மணி நேரத்திற்குரிய தூதன் நீர் தான் என்பதைக் காட்டுகிறது. நீரே அந்த மேசியா. வர இருந்த அந்த கிறிஸ்து நீரே என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனென்றால் உம்முடைய கிரியைகள் தேவன் உம்மை அந்த மேசியாவாகயிருப்பதற்கு இங்கு அனுப்பியிருக்கிறார் என்று சாட்சியிடுகின்றன.” என்ன ஆச்சரியம்! பல் சக்கரத்தின் பற்கள் ஒன்றோடொன்று பொருந்த ஆரம்பிப்பதை இப்போது கவனியுங்கள். பாருங்கள்? 51“நீர் ஏன் வந்து என்னுடைய சகோதரனை எழுப்பவில்லை? நீர் ஏன் அவனை சுகப்படுத்தவில்லை? நீர் மற்றவர்களை சுகமாக்கினீர். உம்முடைய மிகச் சிறந்த நண்பன், இப்போது என்ன நடந்தது பாரும்” என்று சொல்ல அவளுக்கு உரிமையிருந்தது. இல்லை, இல்லை, அத்தகைய குறிக்கோள் எங்கேயும் கொண்டு செல்லாது. “நீர் வேதத்தில் எவ்விதமாயிருப்பீர் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளதோ, நீர் சரியாக அவ்விதமாகவேயிருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன், மேசியா வரவேண்டிய நாள் இதுவே என்று நான் விசுவாசிக்கிறேன்; நாங்கள் அதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் குறித்து எனக்குக் கவலையில்லை. நான் பார்த்திருக்கிறதும், வார்த்தை மூலம் கேட்டிருக்கிறதும், நீரே அந்த மேசியா என்று வார்த்தையானது உம்மில் உறுதிப்படுத்தப்படுகிறது என்று என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்.” பாருங்கள், அவளுக்குள்ளாக கேட்பதற்காக ஏதோ ஒன்றைப் பெற்றிருந்தாள், ஆனால் அவள் சரியான வழிக்குவர வேண்டியதாயிருந்தது. 52அவள் அங்கே ஓடி வந்து இவ்விதம் சொல்லியிருந்தால் என்ன, “நீர் தான் அந்த மேசியா என்று நீர் என்னிடம் கூறுகிறீர்! எங்கள் வேண்டுகோளுக்கு பதிலளிக்கக் கூட போதிய விநயமும் பெரிய மனிதத்தனமும் இல்லையே; நாங்கள் உமக்கு உணவளித்து, தங்க இடம் கொடுத்து, எல்லாம் செய்து, உமது வார்த்தையை ஏற்றுக் கொண்டு, நீர் எங்களை அந்த ஸ்தாபனங்களிலிருந்து வெளியேறும்படி கட்டளையிட்டபடியே எங்கள் சபைகளையெல்லாம் விட்டு வெளியேறியிருக்கும் போது. (பாருங்கள்?) நாங்கள் அதை விட்டுவிட்டோம், இப்போதும் நாங்கள் தள்ளப்பட்டவர்களாகவும், மதத்தை விட்டு ஓடியவர்களாகவும் எண்ணப்படுகிறோம். நாங்கள் உமக்காக எல்லாம் செய்திருக்க, என்னுடைய கூப்பிடுதலுக்கு பதிலளிக்கும்படியான சாதாரண உபசாரம் கூட இல்லையா?” உண்மையில், அவளுக்கு அந்த உரிமையிருந்தது. “நான் ஒரு அமெரிக்க நாட்டுப் பிரஜை, நான் அரைக்கால் சட்டைகளை அணியலாம், நான் விரும்பும் எதையும் செய்யலாம். அது சட்ட விரோதமானதல்ல” என்று உங்கள் குட்டையான முடியைப் பற்றி நீங்கள் சொல்வது போல. அது உங்களுடைய உரிமை. ஆனால் ஒரு செம்மறியாடு, அதனுடைய உரிமைகளை எப்போதும் விட்டுக் கொடுக்கிறது. நீங்கள் ஒரு ஆட்டுக்குட்டியாய் இருப்பீர்களானால், உங்களிடம் உரோமத்தைத் தவிர வேறொன்றும் கிடையாது. அது அதையும் விட்டுக் கொடுக்கிறது. அது அதற்கு தேவனால் அருளப்பட்ட உரிமையாகும். ஆனாலும் அதையும் அது விட்டுக் கொடுக்கிறது. 53“எந்த ஸ்தாபனத்தையும் சேர எனக்கு உரிமை உண்டு.” அது முற்றிலும் சரியே, ஆனால் நீங்கள் அதை விட்டுக் கொடுக்கிறீர்கள். பார்த்தீர்களா? அங்கே தானே, அவளுக்கு முன்பாக வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையை அடையாளம் கண்டு கொள்ளத் தக்கதாக, அவளுக்கு உரிமையாயிருந்த அனைத்தையும் அவள் விட்டுக் கொடுத்தாள். அவர் சொன்னார், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும், என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா?” பாருங்கள், அவள் இன்னுமாய் நேர் கோட்டிற்கு வந்திராத ஒப்பந்தத்தின் இன்னுமொரு சிறிய நிபந்தனை அங்கிருந்தது. பாருங்கள்? “ஆம், ஆண்டவரே! நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்!” ஓ சகோதரனே, அப்பொழுது தானே எல்லாம் பற்றி எரிய தயாராயிருந்தது. பாருங்கள்? “அவனை எங்கே வைத்தீர்கள்?” பாருங்கள்? என்ன நடந்ததென்பது உங்களுக்குத் தெரியும். 54பாருங்கள், அவர் உங்கள் பலியை ஏற்றுக் கொள்ளு முன்பாக நீங்கள் அந்த சரியான விதானத்திற்கு வர வேண்டும், பாருங்கள். அதற்குள்ளாக வர வேண்டியிருக்கிறது. கவனியுங்கள்: ...கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில். பஸ்காப் பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல்... பலியில் அது எதற்கு மாதிரியாயிருக்கிறது? அதை எந்தக் கொள்கையோடும் கலக்க வேண்டாம், அது வார்த்தையாயிருக்க வேண்டும். புளித்த மாவானது... எதிலும் புளித்த மாவானது என்ன என்பது உங்களுக்குத் தெரியும். “கொஞ்சம் புளித்த மா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாகும்”, பிசைந்த மா முழுவதும் சரீரமாயிருக்கிறது... ஒரு புள்ளி அளவு ஸ்தாபனத்தையோ அல்லது மதக் கொள்கைகளையோ கிறிஸ்துவுக்குள் வைக்க உங்களால் கூடாது. இல்லை ஐயா, அது வேலை செய்யாது. சென்ற வியாழக்கிழமையன்று கொடுக்கப்பட்ட செய்தி உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களுடைய பழைய கணவன் மரிக்க வேண்டும். உண்மை. வார்த்தையே உங்களுடைய புதிய கணவர். ...புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள் வரைக்கும் புசிக்கக் கடவாய்... “ஏழு நாட்கள்”, எதற்கு மாதிரியாயுள்ளன? முழு ஏழு சபையின் காலங்களுக்கும், ஏழு நாட்கள். ஏன் அவர்கள் அதை ஏழுநாள் சாப்பிட வேண்டும்? எதற்கு முன்பு? வெளியே போவதற்கு முன்பு. துவக்கத்திலிருந்து முடிவு வரை, முழு சபையின் காலத்திலும், அந்த காலத்திற்குரிய தேவனுடைய வார்த்தையிலே தான் ஜீவிக்க வேண்டும். ஆகவே உங்களுடைய ரோமன் கொள்கை, மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே மதக் கொள்கைகளெல்லாம் மரித்துப் போயின. 55இப்போது கவனியுங்கள்: ...நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப் பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய (அதற்காக துன்பப்படுத்தப்பட்டார்கள்; லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர்; எல்லோரும் துன்பப்படுத்தப்பட்டார்கள், அது போலவே நீங்களும் துன்பப்படுத்தப்படுவீர்கள்) புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள் வரைக்கும் புசிக்கக் கடவாய்; நீ தீவிரமாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்ய வேண்டும். ஏழு நாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது. கிறிஸ்துவின் அழகிய மணவாட்டியும், ரோம சாம்ராஜ்யத்தால் இருண்ட காலங்களின் வழியாக மரிக்க வேண்டியதாயிருந்தது, “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால்”, தேவனுடைய பூரணமாக்கப்பட்ட மிகச் சிறந்த சாதனையான (Master piece) மணவாளன் வர வேண்டியிருந்தது. அதைக் குறித்த என்னுடைய செய்தியை நீங்கள் அனைவரும் கேட்டீர்கள். 56லாஸ் ஏஞ்ஜலிஸ் பட்டணத்தில் காட்டுப்புல் தரை என அழைக்கப்படும் இடத்தில் ஒரு நாள் நான் நின்று கொண்டிருந்தேன். என் இருதயம் துள்ளிற்று. எத்தனை பேர் காட்டுப்புல் தரை என அழைக்கப்படும் அவ்விடத்திற்கு சென்றிருக்கிறீர்கள்? மோசேயுடைய சிலை ஒன்று அங்கிருக்கிறது. அதைச் செய்தது மைக்கேல் ஏஞ்ஜலோ என்று நம்புகிறேன். வலது கால் முட்டியைத் தவிர மற்றதெல்லாம் பூரணமாகச் செய்யப்பட்ட ஒரு சிலை; அங்கே ஒரு அங்குல ஆழவெட்டு உள்ளது. நான் பார்த்துக் கொண்டிருந்தேன். வழிக்காட்டி எனக்கு அதைச் சுட்டிக் காட்டினார். மைக்கேல் ஏஞ்ஜலோ ஒரு சிற்பியாக இருந்தார். அவர் மோசேயின் உருவத்தைச் செய்ய முயன்று ஒரு ஆயுள் காலத்தையே அதற்காக செலவழித்தார். மோசே எவ்விதம் தோற்றமளிக்க வேண்டும் என்பதை மனதில் அவர் கொண்டிருந்தார். மோசே எவ்விதம் காட்சியளிக்க வேண்டும் என்பதை தன் இருதயத்தில் கொண்டிருந்தார். அதன் பிறகு தன் ஆயுள் காலத்தை செலவழித்தார். உளியால் இங்கு சிறிது வெட்டுவது, பிறகு கொஞ்சம், பின்னிட்டுச் சென்று அதைப் பார்ப்பது. வருடத்திற்குப் பிறகு வருடமாக அதன் மீது வேலை செய்தார். முடிவில் அது பூரணப்படுத்தப்பட்ட பிறகு, அவர் பின்னோக்கிச் சென்று தன்னுடைய கந்தையையும் சுத்தியையும் வைத்துவிட்டு அந்த சிலையை நோக்கிப் பார்த்தார். அவர் மனதில் கொண்டி இருந்த மோசேயின் ரூபத்திற்கு அவ்வளவு குறையின்றி, பூரணமாய் அது காட்சியளிக்கவே அவர் தன்னையே மறந்தவராய் தன் சுத்தியை எடுத்து அச்சிலையை அடித்து, 'பேசு' என்று கூச்சலிட்டார். மைக்கேல் ஏஞ்ஜலோவின் மிகச் சிறந்த சாதனை என்று அது அழைக்கப்படுகிறது. அந்த சிற்பியிலிருந்த அந்த மகத்தான ஏதோ ஒன்று, மோசே எவ்விதம் இருக்க வேண்டும் என்று அவர் கொண்டிருந்த கற்பனைத் தோற்றமானது, மகத்துவமுள்ள பிதாவாகிய தேவனை முன்னடையாளமாக வருணிப்பதாகத்தான் இருந்தது. 57அவர் ஒரு பிதாவாயிருப்பதால், உலக தோற்றத்திற்கு முன்பே, ஒரு குமாரனை தமது இருதயத்தில் வைத்திருந்தார். ஆனால் அது இன்னும் அவருடைய வார்த்தையின் அணுவாக (genes) இருந்தது. அவர் ஒரு மனிதனை சிருஷ்டித்தார். அவனை சுயாதீனமுள்ளவனாக வைக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த மனிதனோ விழுந்தான். ஆனால் அந்த மகத்தான சிற்பியாகிய தேவனோ, பூமியின் புழுதியிலிருந்து மனிதனை உண்டாக்கினவர், அதோடு திருப்தி அடைந்துவிடவில்லை. அவர் மறுபடியும் மனிதனை உண்டாக்க ஆரம்பித்தார். அவர் ஒரு நோவாவை உண்டாக்கினார். அவன் குடிகாரனாய் இறந்தான். அவருடைய வார்த்தையை நிறைவேற்றத் தவறிய ஒரு மோசேயை உண்டாக்கினார். அவர் தீர்க்கதரிசிகளை உண்டாக்கினார். அவர்கள் ஆபத்துக் காலத்தில் ஓடுகிறவர்களாயிருந்தனர். ஆனால் அவரோ கட்டிக் கொண்டும், வனைந்து கொண்டும் இருந்தார். சிறிது காலம் கழித்து, ஒரு குமாரன் எவ்விதம் இருக்க வேண்டுமென்று அவர் இருதயத்தில் எண்ணியிருந்தாரோ, அவ்விதம் அவருடைய இயற்கைக் குணங்களையும் அவரையும் பிரதிபலிக்கும் ஒரு மிகச் சிறந்த படைப்பை செய்ய விரும்பினார். 58அவருடைய அந்த மிகச் சிறந்த படைப்பு உருவாக்கப்பட்டு செய்யப்பட்ட பிறகு, ஒரு நாள், யோர்தான் நதிக்கரையில், ஒரு புறாவின் செட்டைகளின் மீது அவர் வந்து, “இவர் தான் அவர்!” என்றார். அவருடைய அந்த மிகச் சிறந்த படைப்பின் மீது அவருக்கிருந்த ஆர்வம் மிகுதியானதால் குறைவுள்ள மற்றவர்களாகிய நமக்காக, அவருடைய இரத்தம் சிந்தப்பட்டதன் மூலம் அவர் அனேக மிகச் சிறந்த படைப்புகளை (மணவாட்டியை) அவருடைய குமாரனுக்கு அளிக்கும்படி (கொண்டு வரும்படி) அவர் மரிக்கத் தக்கதாக அவரைக் கல்வாரியில் அடித்தார். அவருடைய மிகச் சிறந்த படைப்பை பார்த்ததினால் உண்டான ஆர்வமிகுதியால் நம்மெல்லோருக்காகவும் அவர் அவரை அடித்ததால் அவருடைய அந்த மிகச் சிறந்த படைப்பில் தழும்புகள் உள்ளன. பாருங்கள்! குறைவுள்ளவர்களாகிய நம்மை பூரண சர்குணர்களாக்க அங்கே அவர் மரித்தார் தேவனுடைய மிகச் சிறந்த படைப்பு! 59இங்கே கவனியுங்கள், அவர் சொன்னார். ...புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள் வரைக்கும் புசிக்கக் கடவாய்… இப்பொழுது, அப்பமானது முன்னடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறது. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று எழுதியிருக்கிறதே என்று இயேசு சொன்னார் ஸ்தாபனங்கள் உங்களை நம்ப வைக்க முயற்சிப்பது போல் இங்கே ஒரு வார்த்தை அங்கே ஒரு வார்த்தையல்ல. ஆனால் தேவனுடைய வார்த்தையோ பரிபூரணமாயிருக்கிறது. அது தேவனே “வித்து” என்று அழைக்கப்படும் எழுத்து வடிவத்தில் இருப்பதாகும். அந்த வார்த்தையின் மீதான சரியான கலப்படமில்லாத விசுவாசம் அந்த வித்தை உயிர்ப்பிக்கும். இரவு நேரத்தில், நீங்கள் காணும், மனதைப் பகுத்தறிந்து கூறுவதும், இன்னும் மற்ற இந்த எல்லாக் காரியங்களும் சரியாக அதுவே தான். ஏனென்றால் அது தேவன் செய்த ஒரு வாக்குத்தத்தமாகும், அவர் என் பக்கத்தில் நின்று, “போலியாக செய்பவர்கள் எழும்புவார்கள்”, உறுதியாய்ப் பிடித்திரு என்று என்னிடம் கூறினார். நான் அதை விசுவாசிக்கிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் எனும் சுய நலமான உள் நோக்கம் ஏதும் இல்லை. தேவனிடம் பயபக்தியாயிருந்து நான் செய்வதற்கென்று அவர் என்னை அழைத்த வேலையைச் செய்வதற்கென்றே இந்தக் காரியங்களை கூறுகிறேன். அதை சத்தியம் என்று உறுதிபடுத்துவதன் மூலம் தேவன் அதை நிரூபித்து, காணிக்கையையும் பலியையும் ஏற்றுக் கொள்கிறார். அதைக் குறித்து கேள்வியே கிடையாது. இப்போது அந்த வார்த்தையை கவனியுங்கள். 60இப்பொழுது, “ஏழு நாட்கள்” என்பது ஒவ்வொரு சபையின் காலத்தையும் குறிக்கும் என்று இங்கே நாம் கவனிக்கிறோம். இப்பொழுது, அந்த மிகச் சிறந்த படைப்பானது நம்மையெல்லாம் மீட்டுக் கொள்ளத் தக்கதாக, தாம் உயிர்த்தெழுந்திருக்க மரிக்க வேண்டியிருந்தது. பிறகு பெந்தெகொஸ்தே நாளன்று அவர் ஒரு சபையை ஒழுங்கில் அடைக்கப் பெற்றார். ஆனால் அந்த சபையோ பலியினூடாக செல்ல வேண்டியிருந்தது. ரோமர்களின் உலகம் அதைக் கொன்று, அவர்களை மண்ணிலே எறிந்தது. இந்தப் புத்தகத்தின் ஆக்கியோனைப்போல, என்னால் இப்போது அதை நினைவு கூற முடியவில்லை. என்னைக் குறித்து அவ்வளவாய் கேலி செய்து, “எல்லாப் பிசாசுகளிலும், அது வில்லியம் பிரான்ஹாமாயுள்ளது” என்றார். பாருங்கள். அதைத்தான் பிசாசு சிந்திக்க முயற்சிக்கிறான். “தரிசனங்களும், காரியங்களும் அவை பிசாசினால் உண்டானவை” என்றான். “ஓ, அவர் ஒருவிதமான, வசீகர சக்தியால் மக்களைத் தன் வயப்படுத்திக் கொள்பவர், அல்லது அவர் ஒரு மேம்பட்ட உணர்ச்சி சம்பந்தமான அறியும் சக்தியில் வேலை செய்கிறார்” என்றும் கூறினான். அறிவு சம்பந்தமான உலகம் எப்போதும் அதைக் கற்பனை செய்து பார்க்க முயற்சிக்கிறது. 61அவ்வாறு தான் அவர்கள் இயேசுவையும் கற்பனை செய்து பார்க்க முயன்றனர். “நீ இந்தக் காரியங்களையெல்லாம் எவ்வாறு செய்கிறாய். எது இதை செய்தது?” அவரோ, “நான் உங்களை ஒரு கேள்வி கேட்பேன். யோவான் ஸ்நானனுடைய ஊழியம். அது தேவனால் உண்டானதோ, மனிதனால் உண்டானதோ?”, என்று கேட்டார். பாருங்கள்? எங்களால் “சொல்ல முடியாது”, என்றனர். “நானும் உங்களுக்குச் சொல்லேன்”, என்றார். அது சரிதான், அவர் தொடர்ந்து பேசினார். அதுமுதல் ஒருவரும் அவரை ஒன்றும் கேட்கவில்லை. பாருங்கள் அவர்களை அம்மட்டில் நிறுத்தினார். அதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒன்றுமே கூறவில்லை. அது அவர்களுக்குத் தேவையில்லாத விஷயம். அவர் செய்ய வேண்டிய வேலை ஒன்றிருந்தது. அதை அவர் நிறைவேற்றினார். நாமும் அதையே செய்ய தேவன் உதவி செய்வாராக சாத்தானின் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கத் தேவையில்லை. அது சரிதான். “நீர் அவராயிருந்தால், இதை இதைச் செய்யும்”, நீர் அந்த சுவிசேஷத்திற்குத் தான் உத்தரவாதம். ஒரு பிரசங்கியும் அவ்வாறே, அதோடு அது முடிவடைகிறது; எப்படி அது எழுதப்பட்டுள்ளது போன்ற காரியங்களுக்கு அல்ல, சுவிசேஷத்தைக் கூற மட்டுமே உத்தரவாதம் பெற்றுள்ளோம். ஒரு ஊழியக்காரனாக, நீங்கள் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பீர்களானால், நீங்கள் தேவனுக்கு உத்தரவு சொல்ல வேண்டியவராயிருக்கிறீர்கள் வருகிற தரிசனங்கள் இந்த வேத வாக்கியத்தை தெளிவாக்கி, அது என்னது என்று காட்டுமானால் வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்கள் பொறுப்புள்ளவராயிக்கிறீர்கள். ஏனென்றால் அதெல்லாம் உங்களைப் போன்ற அதேவிதமான மக்களால் எழுதப்பட்டது. “பூர்வ காலங்களில் தேவன் அசைவாடி தீர்க்கதரிசிகள் மூலமாக பரிசுத்த வேதாகமத்தை எழுதினார்”. பாருங்கள்? தேவனுடைய எந்த உண்மையான தீர்க்கதரிசியும் அதன் ஒரு வார்த்தையை மறுக்க முடியாது. ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து அதையே உபதேசிப்பார். அப்பொழுது அந்த வழியிலிருந்து அந்த வார்த்தையை, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற விதமாகவே நிறைவேற வைக்க தேவன் கடமைப்பட்டிருக்கிறார். வித்தானது வளரும். 62இப்பொழுது மறுபடியும் கவனியுங்கள். விரைவாக ஏழு நாட்களும் இந்த அப்பமானது புசிக்கப்பட வேண்டியதாயிருந்தது எனக் காண்கிறோம், ஏழு சபையின் காலங்களாக. இப்பொழுது, நிலத்திற்குள் சென்று மரிக்க வேண்டியிருந்தது... என்னைப் பற்றி பேசிய இந்த குறை கூறுபவர் இவ்விதமாகக் கூறினார். “தாய்மார்கள், கர்ப்பமாயிருப்பவர்கள், அவர்களில் சிலர் குழந்தைகளை கரங்களில் ஏந்தினவர்களாய், உண்மையான மக்கள், விளையாட்டு அரங்கத்தில் தூக்கி எறியப்படுவதையும், சிங்கங்கள் அவர்களை துண்டுகளாக கிழிப்பதையும், அவர்கள் அலறுவதையும், அவர்களை சிலுவைகளில் தொங்க விடுவதையும், அவர்களை எரித்துப் போடுவதையும், ஸ்திரீகளை, வாலிபமான கன்னிகைகளை நிர்வாணமாக உரிந்து கொண்டு, அவர்களை இவ்விதமாக தூக்கியெறிந்து சிங்கங்களை அவர்கள் மீது வர விடுவதையும் இருண்ட காலங்களில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய, நீங்கள் ஆராதிக்கிற ஒரு கடவுளைப் பற்றி”, “வானத்தில் உட்கார்ந்து கொண்டு, தம்முடைய சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவராக கருதப்படும், கீழே பார்த்து தாம் இதை அனுபவிக்கிறதாக கூறும் ஒரு தேவன்” என்று கூறினார். ஆகவே, பாருங்கள், அது சாத்தானால் உண்டான அறிவு சம்பந்தமான எண்ணம். அந்த மனிதர் ஆவிக்குரியவராயிருந்திருப்பாரானால், கோதுமை மணியானது மரிக்க வேண்டியுள்ளது என்பதை தாம் அறிந்திருப்பார். அது ஒரு ரோமப் பிரதான கோயிலில் அடக்கம் பண்ணப்பட வேண்டியிருந்தது. 63ஆனால் பிறகு, ஒரு பாதிரியார் ஆசீர்வதித்த, ஆசீர்வதிக்கப்பட்ட அப்பத்தால் அல்ல, தேவனுடைய வார்த்தையினால் நீதிமான் பிழைப்பான். “விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்” என்ற மார்ட்டின் லூத்தரின் சீர்திருத்தலில், ஜீவனின் முதல் சிறிய முளை தோன்ற ஆரம்பித்தது. அது இரு சிறு கிளைகளை கொண்டு வந்தது. கோதுமை மணியானது வளர ஆரம்பிக்கிறது. பிறகு ஜான் வெஸ்லி தோன்றி அத்துடன் கூட்டினார். (அநேகர் தோன்றி... ஸ்விங்லியும் மற்றவர்களும் தோன்றின. காலத்தில் அநேகர் வந்து கன்னியின் வயிற்றில் பிறந்ததை மறுத்தனர், அது மரித்துப் போயிற்று) ஆனால் அவ்வழியாக மெதோடிஸ்டுகள் வந்தனர், செடியின் நுனியில் காணப்படும் குஞ்சம் போன்ற வளர்ச்சி, மகரந்தத்தூள், சுவிசேஷகர்களின் காலம். அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதலைப் பற்றிப் போதித்தார்கள்; குஞ்சத்தைச் சேர்த்தார்கள். பிறகு தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக உமியில் பெந்தெகொஸ்தேயினர் வந்தனர். ஒரு உண்மையான கோதுமை மணியைப் போல அது காணப்பட்டது. அதைத் திறந்து பார்க்கும் போது, அங்கே கோதுமையே இல்லை. ஆனால் ஜீவனானது உமியின் வழியாக கடந்து செல்கிறது. 64இப்பொழுது, ஒவ்வொரு மகத்தான கூட்டத்தின் பிறகும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஒரு ஸ்தாபனம் இது துவங்கி இருபது ஆண்டுகளாகிறது. ஆனால் ஸ்தாபனம் இல்லை. அருமையான மரிக்கும் ஆட்டுக்குட்டியானவரே. இது ஒருபோதும் அதைச் செய்யாதிருப்பதாக நான் இந்தத் தலைமுறையில் செல்வேனானால், இந்தச் செய்தியை விசுவாசிக்கும் மக்கள், இது ஒரு ஸ்தாபனமாவதைக் கண்டால் சும்மா இராதிருப்பார்களாக. தேவன்... நீங்கள் செல்லும் பாதையிலேயே சாவீர்கள்! அதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். உங்களுக்குள் ஸ்தாபனங்களுக்கொத்த பேச்சு அடிபடும் அந்த மணிவேளையிலே நீங்கள் எவ்வளவு உண்மையுள்ளவராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, இந்த வார்த்தையை ஊர்ஜிதம் செய்ய, நீங்கள் பரிசுத்த ஆவியை அல்லாமல் ஒரு மனிதளை உங்கள் தலைவனாக கொள்ளும்போது அந்த மணிவேளையிலே தானே நீங்கள் சாவீர்கள். உண்மையான வித்து அவ்விதம் செய்ய முடியாது. ஏனென்றால் வித்துக்குப் பிறகு வேறெதுவும் அங்கில்லை. ஆரம்பத்தில் இருந்த அதுவே தான் இது. கோதுமை மணியை திரும்பவும் கொண்டு வர நிலத்திற்குள் விழுந்த மணவாட்டி தான் இது. 65கவனியுங்கள்! ...புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள் வரைக்கும் புசிக்கக் கடவாய்... அங்கே மணவாட்டியோடு இருக்கப் போகிறது... இப்பொழுது, பழையக் கூச்சலிடும் மெதோடிஸ்டு தாயாரையும், மற்றக் காரியங்களையும் பெற்றிருந்தவர்களே, அவர்கள் பாஷைகளைப் பேசாவிட்டால், அவர்கள் அங்கிருக்கப் போவதில்லை என்று கருதியிருந்தவர்களே, அது ஒரு பொய்யாகும். நீங்கள் இன்று பெற்றிருக்கும் பரிசுத்த ஆவிதான் அவர்கள் பெற்றிருந்ததும்... வரங்கள் திரும்ப அளிக்கப்படுவதல்ல. ஆனால் ஏழு நாட்களிலும், புளிப்பில்லா அப்பம், வார்த்தையைப் புசிப்பாயாக அங்கே தங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டவர்கள், அவர்கள் மரித்துப் போனார்கள். அவர்கள் தண்டாக இருக்கிறார்கள். அவர்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டு எரிக்கப்படுவார்கள், ஆனால், ஜீவனானது கடந்து சென்று கொண்டிருக்கிறது. என்ன நடந்தது தண்டு, குஞ்சம், பதர் இவைகளிலிருந்த ஜீவனெல்லாம் கோதுமைக்குள் வந்து சேருகிறது, லூத்தரையும், வெஸ்லியையும் பெந்தெகொஸ்தேயினரையும் கொண்டு வந்த அந்த பரிசுத்த ஆவியானவர் உயிர்த்தெழுதலில் மணவாட்டியில் வந்து முடிவடைகிறார். 66“ஏழு நாள், புளிப்புல்லா அப்பம் புசிப்பாயாக மணவாட்டியிடம் புளித்த மா காணப்படக் கூடாது”. எந்த வார்த்தையும் கூட்டப்படக் கூடாது, எதுவும் ஒரே ஒரு வார்த்தையானது பூமியிலுள்ள ஒவ்வொரு சாவையும் உண்டாக்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்; முறை தவறிப் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் ஏவாளால், முதல் சபையால், முதல் ஆதாமின் மணவாட்டி தேவனுடைய வார்த்தையை சந்தேகித்து ஸ்தாபன, அறிவு சமபந்தமான, அல்லது பள்ளிகள் அதற்கு அளிக்கும் மறுப்பை ஏற்றுக் கொண்டதால் பிறந்தன; ஏனென்றால் “நிச்சயமாக, தேவன் ஒரு நல்ல தேவனாக இருக்கிறார்,” என்று தேவனுடைய வார்த்தை நிதானிக்கப்பட்டது. தேவன் நல்ல தேவனாயிருக்கிறார். ஆனால் அவர் ஒரு நீதியுள்ள தேவனும் கூட. நாம் அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ள வேண்டும்! ஏவாளோ, அதை ஏற்றுக் கொண்டாள். வேதாகமக் கல்லூரிகளில் உள்ள சில பிள்ளைகளும் அதையே தான் செய்கிறீர்கள். உங்கள் வாழ்வில் ஒரு அழைப்பு வந்ததில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் உடனே ஏதாவது ஒரு வேதாகமப் பள்ளிக்கு விரைந்தோடி இந்தப் போதனையை உங்களுக்குள் புகுத்திக் கொள்கிறீர்கள். அங்கே தான் நீங்கள் மரிக்கிறீர்கள். தேவனோடும் அவருடைய வார்த்தையோடும் தரித்திருங்கள். அவர்கள் உங்களை அவ்விதம் இருக்கவிட மாட்டார்கள், அல்லது நீங்கள் அவர்களுடைய சபையை சேர்ந்தவர்களாக கூட இருக்க முடியாது. உங்களைத் தங்கள் மேடைகளிலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆகவே அவர்களே அதை வைத்துக் கொள்ளட்டும். மரித்தோர் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நாமோ வார்த்தையாகிய கிறிஸ்துவைப் பின்பற்றுவோம். 67இப்பொழுது, ஏழு நாட்களுக்கு, மணவாட்டியோடு, சபையோடு புளித்த மா எதுவும் கலக்கக் கூடாது, ஏழு நாட்களுக்கு, இப்பொழுது கவனியுங்கள்: ஏழுநாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது... (இங்குள்ள பலியானது ஒரு மாதிரியாக உள்ளது. பலியாகிய கிறிஸ்துவிலிருந்து மணவாட்டி புறப்பட்டு வருவது...) நீ முதல் நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் வைக்க வேண்டாம். நாம் சபையின் காலங்களை எவ்விதம் ஆராய்ந்தோம் என்பதை நினைவு கூருங்கள்? ஒரு சபையின் தூதன் எப்பொழுதும் மற்ற சபையின் காலம் மரிக்கும்போதே வருகிறார், எப்பொழுதும்; பெந்தெகொஸ்தே இயக்கம் மரிப்பது மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படுவதைக் கொண்டு வருகிறது. பாருங்கள்? லூத்தர் மரித்தது வெஸ்லியைக் கொண்டு வந்தது. பாருங்கள்? வெஸ்லி மரித்தது பெந்தெகொஸ்தேயைக் கொண்டு வந்தது. பெந்தெகொஸ்தே மரித்தது. இப்போதைய செய்தியைக் கொண்டு வருகிறது. இங்கே, இங்கேயே, வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் அது மாதிரியாக வைக்கப்பட்டுள்ளது. வேதாகமத்தில் ஒன்றோடொன்று சரியாக இணையாத வேதவாக்கியமே கிடையாது. பாருங்கள்? இந்த எல்லா மாதிரிகளும். என்னிடம் படிப்பு இல்லை, ஆனால் மற்றொரு வழியின் மூலம் எனக்குக் காட்டி, இயற்கையிலிருந்து எனக்கு அதை போதிக்கும் பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறேன்; அதுவும் வார்த்தையாலேயே - வார்த்தையாகவே இருக்க வேண்டியுள்ளது. அவருடைய வாக்குத்தத்தத்தை கொண்டு வருகிறது. ...நீ முதல் நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மார்கத்தில் ஏதாகிலும் இராமுழுவதும் விடியற்காலம் வரைக்கும் வைக்க வேண்டாம். 68இப்போது, லூத்தரும் கூட அவர் சத்தியத்தைப் பெற்றிருந்து, “விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்”, என்று சபைக்குப் போதித்தார். அதுதான் பூரணமான போதகம் என்று நீங்கள் மெத்தோடிஸ்ட் காலத்தில் அதைப்பிடித்து கொண்டிருக்க விரும்பவில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்? அதை அக்கினியினால் சுட்டெரிக்க வேண்டும். அதற்கு மாதிரி என்ன? அந்த வார்த்தையிலிருந்து தோன்றும் ஸ்தாபனமானது மேல் உறை, தண்டு, உமி என்பவைகளாகும். இவைகள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட வேண்டும். அது கடந்து வந்த ஸ்தாபன சம்பந்தமான காரியம் மீந்திருக்கக் கூடாது, மரிக்க வேண்டும். மற்றொரு யுகம் தோன்றும் வரை அதை விட்டு வைக்காதே, அதை எரித்து விடு! அவர் இப்போது இங்குள்ள மணவாட்டியிடம் பேசிக் கொண்டிருக்கிறார், மணவாட்டியிடம் மட்டுமே, ஒவ்வொரு காலமாக கடந்து வருபவள். எவ்வளவு அழகாயிருக்கிறதென்று கவனியுங்கள். “ஆட்டுக்குட்டியின் இரத்தம்”. இவைகள் கிறிஸ்துவின் சரீரமாகிய பலி கதவின் மேல் பூசப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தம். இப்போது, கிறிஸ்துவுக்கு மாதிரியாயிருந்த ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்டது என்பதை நினைவு கூருங்கள். அல்லது நாம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடும், ஆனால் எனக்கு அதிக நேரம் கிடையாது... இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே இங்கிருக்க முடியும். நான் ஒரு வேளை நிறுத்திவிட்டு இன்றிரவு மீண்டும் தொடங்கலாம். பாருங்கள், ஏனென்றால் நாம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த ஒரு பொருளின் மீது நான் கூறவேண்டியது இன்னும் இருபது பக்கங்கள் உள்ளன, பாருங்கள். 69இப்போது இதில் கவனியுங்கள், ஆட்டுக்குட்டியானது கிறிஸ்துவை மறை பொருளாக குறிக்கும் அடையாளமாகும். அல்லது நான் அதை சரியாக கூறினேனா? கிறிஸ்து, கிறிஸ்துதான் ஆட்டுக்குட்டியானவர். அவர் ஒரு ஆணாக, தாய்ப் பெண் ஆட்டின் தலையீற்றாக இருக்க வேண்டியிருந்தது. அதன் முதலாவதாயிருக்க வேண்டும். அதில் களங்கம் ஏதும் உண்டோ என்று அது முதலாவதாக சோதித்துப் பார்க்கப்பட வேண்டும். இப்போது, கிறிஸ்து சோதிக்கப்பட்டார். தாய்ப் பெண் ஆடாகிய கன்னி மரியினிடம் தோன்றிய முதல் ஆட்டுக்குட்டி, அவர் எதனால் சோதிக்கப்பட்டார். வார்த்தைக்கு விரோதமாக வந்த சாத்தானால். அவன் ஏவாளைத் தாக்கிய போது அவள் விழுந்தாள். மோசேயைத் தாக்கினான், அவனும் விழுந்தான்; ஆனால் அவன் கிறிஸ்துவுக்கு எதிராக பறந்து வந்து, வேத வாக்கியங்களை அவரிடம் தவறாக மேற்கோள் காட்ட முயன்றபோது, அது மோசேயல்ல என்பதைக் கண்டு கொண்டான். பாருங்கள்? அவர் சோதிக்கப்பட்டார். அவன் திரும்பி, “நீர் தேவனுடைய குமாரனானால், நீர் அற்புதங்களைச் செய்வதாக என்னிடம் கூறுகிறார்கள். மேசியா தான் அவைகளைச் செய்வார் என்றும் என்னிடம் கூறுகிறார்கள். இப்போது, அது உண்மையாக இருக்குமானால், நீர் இப்போது பசியாயிருக்கிறீர், நீர் சாப்பிடவும் இல்லை. இந்த கல்லுகளை அப்பங்களாக செய்து சாப்பிடும்,” என்றான். “அவரோ மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் பிழைப்பதில்லை என்று எழுதியிருக்கிறதே என்று கூறினார்”. உங்கள் மதக்கோட்பாடுகள் முதலிய மற்றவைகளாலுமல்ல. ஆனால் எதனால் பிழைப்பான்? ஒவ்வொரு வார்த்தை! வார்த்தையின் ஒரு பகுதியினாலா? “தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும். அதனால் தான் மனிதன் பிழைக்கிறான்.” பாருங்கள்? ஆட்டுக்குட்டியானவர் சோதிக்கப்பட்டார், அவர் எங்கேயாவது விழுந்திருந்தாரா என்று பாருங்கள். 70பரிசேயர், “ஓ, ரபீ, வாலிபரான தீர்க்கதரிசியே, நீர் அருமையானவர் என்று நாங்கள் எண்ணுகிறோம். நீர் நல்லவர்”, என்றனர். “என்னை ஏன் நல்லவரென்று அழைக்கிறீர்கள்? ஒரே ஒரு நல்லவர்தான் உண்டு, அது தேவன். நீ அதை விசுவாசிக்கிறாயா?” “ஓ, ஆம், தேவன்”. “நல்லது, நானே அவர்”, ''அப்படியானால் நல்லவர் ஒருவர் தான் உண்டு. நான் தேவன் என்று நீங்கள் விசுவாசியாதிருக்கும் போது அவரை ஏன் நீங்கள் நல்லவரென்று அழைக்கிறீர்கள்? ஆகவே என்னை நல்லவரென்று ஏன் அழைக்கிறீர்கள்? உங்களை அப்படிச் செய்ய வைப்பது எது? நல்லவர் ஒருவர் தான் உண்டு என்றும், அவர் தேவன் என்றும் நீங்கள் அறிந்திருக்கும்போது உங்களை அவ்விதம் சொல்ல ஏவியது எது?“ “நீர் மனிதனுடைய கௌரவத்தையும் மருத்துவருடைய வார்த்தையையும் மதிப்பதில்லை என நாங்கள் அறிவோம், நாங்கள் அறிவோம்.” அவர் அந்த மாய்மாலக்காரனை அறிவார். பாருங்கள்? 71அவர் எங்கே நின்று கொண்டிருக்கிறார் என்பதைக் காண அவர் சோதிக்கப்பட்டார் பாருங்கள், ஒவ்வொரு விதத்திலும் சோதிக்கப்பட்டார். நாம் சோதிக்கப்படுவது போல அவரும் சோதிக்கப்பட்டார். ஆனால், அவரிடம், “விட்டுக் கொடுப்பது” என்பதே கிடையாது. இல்லை, ஐயா! அது தான் தேவனுடைய குமாரன். ஆட்டுக்குட்டியானது சோதிக்கப்பட்டது, பதினான்கு நாட்கள் வரை வைக்கப்பட்டிருந்தது. அது இரண்டு ஓய்வு நாட்கள் அல்லது இரண்டு காலங்களைக் குறிக்கும். ஒன்று யூதர்களுக்காக அவர்கள் ஆட்டுக்குட்டியை முன்னடையாளமாக செலுத்தினார்கள்; ஒன்று புறஜாதியாருக்காக, இதுவே உண்மையான ஆட்டுக்குட்டியாகும். இந்த ஆட்டுக்குட்டி வரும் என்று விசுவாசித்ததன் மூலம் அவர்கள் அனைவரும் பூரணராக்கப்பட்டனர். ஆனால் அவரோ பதினான்கு நாட்களாக சோதிக்கப்பட்டார். அல்லது பரீட்சிக்கப்பட்டார், அவர்தான் வார்த்தை. நீங்கள் பழைய ஏற்பாட்டை சோதித்துப் பார்த்து, அது புதிய ஏற்பாட்டை உபயோகமற்றதென ஒதுக்கிவிடுகிறது என்கிறீர்கள். நீங்கள் செய்வது தவறு! பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டைக் குறித்து சாட்சி கொடுக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு மனிதர் என்னை சவாலுக்கிழுப்பதற்கிருந்தார். அவருக்கு என்ன ஆயிற்று, “அவர் பழைய ஏற்பாட்டிலுமிருந்து கூட போதிக்கிறாரே என்றார்”, ஒரு கிறிஸ்தவப் போதகர். அதைக் குறித்து யோசியுங்கள், “பழைய ஏற்பாடு மரித்துப் போயிற்று” என்றார். ஓ, இல்லை! ஓ, இல்லை! பழைய ஏற்பாடு ஒரு பள்ளிக்கூட உபாத்தியாயர், சுவரில் என்ன எழுதியிருக்கிறதென்பதை அது காட்டுகிறது. பாருங்கள்? சரி. 72இப்போது, பாருங்கள். அது பதினான்கு நாட்களாகப் பரிசோதிக்கப்பட்டது. அது கிறிஸ்து. இப்போது கவனியுங்கள், அவர் சாயங்கால வேளையிலே அடிக்கப்பட்டார், அடிக்கப்பட வேண்டும், கிறிஸ்துவானவர். கிறிஸ்து பிற்பகல் வேளையாகிய சாயங்கால வேளையிலே மரித்தார். பிறகு கவனியுங்கள். பிறகு அவரும் கூட... இரத்தமானது வீட்டு வாசல் நிலைக்கால்களின் மீது பூசப்பட வேண்டியிருந்தது, பாருங்கள். இரத்தம் தான் மிருகத்தின் ஜீவனாயிருக்கிறது. “நீ அதன் மாமிசத்தைப் புசிப்பாயாக; ஆனால் அதன் உயிராகிய இரத்தத்தை தரையிலே ஊற்றிவிட வேண்டும்”. பாருங்கள்? பலியானது, அங்கீகரிக்கப்பட்ட வீட்டின் வாசல் நிலைக்கால்களின் மேலுத்தரத்தின் மீது பூசப்பட வேண்டும். மகிமை ஜீவன் என்பது என்ன? நாமமாகும். அந்த... அந்த நபருடைய பெயரை அவர் வைத்தார்... வாசல் வரை செல்லுங்கள், சென்று பாருங்கள், மணியை அடிக்கு முன்பு கதவின் மீது என்ன பெயர் உள்ளது என்பதைப் பாருங்கள். பாருங்கள்? உள்ளே உள்ள பலி என்ன என்பதன் மாதிரியாக இரத்தமானது வாசலின் மேலுத்தரத்தின் மீது பூசப்பட்டது. இப்போது, அங்கிருந்து, அந்த இரத்தத்தின் வழியாக வந்து, ஆராதனை, ஸ்தலத்தை கண்டுபிடிக்கப் போகிறோம். கவனியுங்கள், வாசலில் பூசப்பட்டிருந்த இரத்தமானது. உள்ளே என்ன இருந்தது என்பதன் நாமத்தைப் பேசிற்று, அவர்கள் அங்கே உள்ளே இருந்தனர் நம்முடைய ஆராதனை ஸ்தலமாகிய ஆட்டுக்குட்டியானவர், வார்த்தையாய் இருக்கிறார். நாம் அதை அறிவோம். 73இப்போது, 4வது வசனம், கவனியுங்கள், “அப்பத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியாற்காலம் வரைக்கும் வைக்க வேண்டாம்”. பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற்காலம் வரைக்கும் வைக்க வேண்டாம். அல்லது ஒரு காலத்திற்குரியதை அடுத்த காலத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம். நீங்கள் திரும்பிப் போய், “நல்லது, இப்போது, நாங்கள் லூத்தரன் ஸ்தாபனத்தாராயிருக்கிறோம், நாங்கள் இங்கே வர விரும்புகிறோம்” எனக் கூற முயற்சிக்கிறீர்கள். நீங்கள் வெஸ்லியின் யுகத்தில் பிறப்பதற்கு லூத்தரன் யுகத்திற்கு மரிக்க வேண்டும். நீங்கள் பெந்தெகொஸ்தே யுகத்தில் பிறப்பதற்கு வெஸ்லியின் யுகத்திற்கு மரிக்க வேண்டும். நீங்கள் பெந்தெகொஸ்தே யுகத்தில் மரித்து, அதில் எதையும் மீதம் வைக்காமல், அதை அக்கினியால் சுட்டெரிக்க வேண்டும். ஏனென்றால் கோதுமையானது மேலேறி வெளிவர உதவின தண்டைப்போல அது, எரிக்கப்படப் போகிறது. தண்டாகிய ஸ்தாபனமானது, எரிக்கப்பட்டாக வேண்டும். ஆகவே புதிய செய்தியில் உங்கள் ஸ்தாபனத்தைக் கொண்டு வராதீர்கள். இப்போது இது வார்த்தையாக இருக்கிறது. தண்டாகிய அதுதான் ஸ்தாபனமாயிற்று. அது அதைச் சுமந்து சென்றது. அது சரிதான்; ஆனால் அது இங்கே வந்துள்ளது. பிறகு தண்டானது மரித்தது. ஸ்தாபனமானது அதைச் சுமந்து செல்வதாயிருந்தது. ஆனால் வார்த்தையானது தொடர்ந்து செல்கின்றது. ஆம், வார்த்தையானது தொடர்ந்து செல்கின்றது. 74இப்போது 5வது 6வது வசனங்களை எடுங்கள். கவனியுங்கள்... இப்போது 5வது 6வது வசனங்களை எடுத்து கொள்வோம்: உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்க வேண்டாம்: “இந்த வாசல்கள் எதிலும் அல்ல” என்பதை இப்போது நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இந்த ஸ்தாபனங்களை வைத்துக் கொள்ள கர்த்தர் அனுமதிக்கிறார், பாருங்கள், “இந்த வாசல்கள்”. உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொள்ளும் ஸ்தானத்திலே... அது தான் வாசல். ஒரே ஸ்தலம். அநேகம், இந்த வாசல்கள் அல்ல, ஆனால் தேவன் ஒரு வாசலை வைத்திருக்கிறார். 75“ஒவ்வொரு காலையிலும் நான் மெதோடிஸ்ட் வாசலில் நுழைகிறேன்” என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதுதான் சபை, “ஒவ்வொரு நாள் காலையிலும் நான் கத்தோலிக்க வாசலுக்குள் போகிறேன்.” நல்லது, தம் ஜனங்கள் அந்த வாசல்களின் வழியே உள்ளேயும் புறம்பேயும் போக கர்த்தர் அனுமதிக்கிறார். கத்தோலிக்க சபையிலும், மெதோடிஸ்ட் சபையிலும், பிரஸ்பிடேரியன் சபையிலும், இவையெல்லாவற்றிலும், பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்களிலும் தேவன் ஜனங்களை உடையவராயிருக்கிறார். நிச்சயமாக, ஆனால்... அந்த வாசலில் நீங்கள் கர்த்தரை ஆராதிப்பதில்லை. பாருங்கள்? ஆனால் கர்த்தரிடம் ஒரு குறிப்பிட்ட வாசல் உண்டு. மகிமை! அவரிடம் ஒரு வாசல் உண்டு. உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொள்ளும் ஸ்தானத்திலே... சாயங்காலத்திலே... பஸ்காவை அடித்து... 76ரெபேக்காள் ஈசாக்கை எப்போது கண்டாள்? எலியேசர் எப்போது அவளை மணவாட்டியாயிருப்பதற்கு அழைத்தான்? சாயங்காலத்திலே! சாயங்கால நேரத்திலே வெளிச்சம் உண்டாகும்; மகிமைக்கு வழியை நீ நிச்சயம் கண்டு கொள்வாய், அந்த ஜலத்தின் வழியில் இன்று வெளிச்சம் இருக்கிறது. இயேசுவின் விலையுயர்ந்த நாமத்தில் புதைக்கப்பட்டு; வாலிபரே முதியோரே, உங்கள் எல்லாப் பாவங்களை விட்டு மனந்திரும்புங்கள், பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உள்ளே பிரவேசிப்பார்; சாயங்கால வெளிச்சங்கள் வந்திருக்கின்றன, தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்பது ஒரு உண்மையாகும். அதுதான் அதன் துவக்கமாயிருந்தது, இப்போது அவள் மணவாட்டியின் வெளிச்சத்திற்குள்ளாகவே தரித்திருந்தாள். நான் என்ன கூறுகிறேன் என்பதைக் காண்கிறீர்களா? 77நான் இங்கே நிறுத்திவிட்டு, இன்றிரவு மறுபடியும் தொடர்ந்து போவது நல்லது. ஏனென்றால் நீங்கள் இதை விட்டுவிடுவதை நான் விரும்பவில்லை. பாருங்கள். இல்லை, இல்லை, இது இரவு உணவு வேளை. நல்லது, நல்லது, நான் இங்கு அநேக குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன். ஓ, என்னே! இன்றிரவு உங்களுக்கு வசதிப்படுமா, நன்றாயிருக்குமா? நல்லது, நிச்சயமாக கூறுகிறீர்களா? இன்னும் சிறிது தூரம் போக விரும்புகிறார்களா? நல்லது. அப்படியானால், நாம் இன்னும் சிறிது தூரம் போகலாம், நான் சீக்கிரமாய் துரிதமாய் செல்வோம். அது எப்படி? 78இப்போது, எதற்குள் பிரவேசிப்பது? “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்திருக்கும் வாசல்களில் எதிலும் நீ பிரவேசியாமல், கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொள்ளும் வாசலிலே பிரவேசிப்பாயாக.” வாசலாகிய கதவென்னும் வீட்டிற்குள் பிரவேசிப்பதல்ல. அது சரியா? தேவன் தம்முடைய நாமத்தை வாசலில் வைக்கப் போகிறார். பரிசுத்த ஸ்தலமாகிய ஆராதனை ஸ்தலத்திற்குள் நுழைவதற்கான வாசல் அதுதான். தேவனாகிய கர்த்தர் தமது நாமத்தை வைக்க தெரிந்து கொள்ளும் வாசலில் தவிர இந்த மற்ற எந்த வாசல்களுக்குள்ளும் நீ உன் பலியுடன் செல்ல வேண்டாம். பாருங்கள்? இப்போது அவர் அதை செய்தாரா? அந்த வாசல் எங்கே இருக்கிறது? யோவான் எழுதின சுவிசேஷம் பத்தாம் அதிகாரத்தில் இயேசு, “நானே கதவு, வாசல். தேவனுடைய வீட்டிற்கு நானே வாசல், ஆட்டுத் தொழுவத்திற்கு நானே வாசல்” என்றார். வெள்ளாட்டுத் தொழுவத்திற்கல்ல, செம்மறியாட்டுத் தொழுவம், பாருங்கள்? “செம்மறியாட்டுத் தொழுவத்திற்கு நானே வாசல் ஒரு மனிதன் இந்த வாசல் வழியாய் பிரவேசிக்கலாம், பத்திரமாக”. 79இப்போது நாம் அதன் பேரில் நீண்ட நேரமாக தாமதித்துத் தியானிக்கக் கூடும். ஆனால் நாம் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டியிருப்பதால், செம்மறியாட்டுத் தொழுவத்திற்கு அவரே வாசலாயிருக்கிறார். இப்போது, நாம் இங்கே கவனிக்க விரும்புகிறோம். நிழல்களும் சாயல்களும் இங்கே தான் உண்மையில் காட்சிக்கு வருகின்றன. ஆனால் நான்... நான் அந்தப் பக்கத்தை எடுப்பேனானால் நான்... அது உங்களை நேரம் பிடித்து வைத்துக் கொள்ளப் போகின்றது. சரி, கவனியுங்கள். இது இயேசு கிறிஸ்துவை பூரணமான காட்சியில் கொண்டு வருகிறது. ஏனென்றால் பழைய ஏற்பாடு எல்லாம் அவருக்கு சாயலாயிருக்கிறது, எல்லாப் பண்டிகைகளும், எல்லா ஆராதனைகளும், ஒவ்வொன்றும். இப்போது, இந்த வேதவாக்கியங்களின் கீழே, “இதை விவரித்துக் கூறவும்” என்று இங்கே எழுதி வைத்திருக்கிறேன். அங்கே தான் அப்படிச் செய்வது அதிக நேரம் எடுக்கும். எல்லாப் பண்டிகைகளையும் விவரிப்பது... போஜன பலியும் கூட கிறிஸ்துவுக்கு ஒரு சாயலாயிருந்தது. அது ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வோம். 80ஒரு சமயம் பக்கங்கள் தீர்க்கதரிசிகளின் பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்ட, கல்வி கற்றறிந்த தீர்க்கதரிசியை பயிற்றுவிக்கும் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அங்கே ஒரு உண்மையான, தேவனால் அழைக்கப்பட்ட தீர்க்கதரிசியும் இருந்தார். அவர் ஒரு சமயம் அவர்களைப் போய் பார்க்கச் சென்றார். அவர்கள் அந்த வயோதிப தீர்க்கதரிசிக்கு உபசாரம் செய்ய விரும்பினர். ஆகவே அவர்களில் ஒருவன் வெளியே சென்று கொடி நிறைய காய்களை, அவை பட்டாணி என நினைத்துக் கொண்டு அறுத்து வந்தான். ஆனால் அவைகளோ விஷக் காய்களாயிருந்தன, அவன் எல்லோருக்கும் அதை சாப்பிடக் கொடுக்க இருந்தான். ஓ! வேதாகமக் கல்லூரிகளிலிருந்து எத்தனை பேர் மடி நிறையக் கொண்டு வந்து கொடுத்ததை நாம் புசித்திருக்கிறோம்! பாருங்கள்? சரி. அவர்கள் எதையோ சமைக்கிறார்கள். (உண்டு பண்ணுகிறார்கள்). பாருங்கள். மெதோடிஸ்ட் மடி நிறைய, பாப்டிஸ்ட் மடி நிறைய, பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்கள் மடி நிறைய அவர்கள் வைத்திருக்கின்றனர். ஆனால், பாருங்கள், அவைகள் மரத்திலிருந்து கிளை நறுக்கப்படக் கூடிய இரண்டாவது வளர்த்தியாகும். பாருங்கள், அவை மூல திராட்சச் செடியிலில்லை. அது எலுமிச்சைப் பழங்களையும், சிறந்த புளிச்சுவைப் பழங்கள் போன்றவற்றை கொண்டு வருகிறதேயன்றி ஆரஞ்சு பழங்களை அல்ல, ஆனால் கிச்சிலி பழமாய் இருக்க வேண்டுமென்று உரிமை கொண்டாடுகிறது. 81மறுபடியும் கவனியுங்கள். இப்போது இதில், எலியா அங்கு வந்து அவைகளைப் பார்த்து, அவர்கள் ஒவ்வொருவரையும் கொன்றுவிடக் கூடிய விஷக்காய்கள் அவை என்று கண்டபோது, “ஐயோ, பானையில் சாவு இருக்கிறது!” என்று சத்தமிட்டார்கள். அப்போது அவர், “ஒரு கை நிறைய மாவு என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார். அவர் அதைப் பானைக்குள் போட்டு, “இப்போது இது சரியாயிருக்கிறது. தேவையானதை சாப்பிடுங்கள்” எனக் கூறினார். அது மரணத்தை ஜீவனாக மாற்றினது. கொடுக்கப்பட்ட, போஜன பலி... கிறிஸ்துவே அந்த போஜனபலி, போஜன பலியானது மாவிலுள்ள ஒவ்வொரு சிறு கட்டியும் ஒரே அளவாக இருக்கத் தக்கதாக அரைக்கப்பட வேண்டும். இது அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அவர், உங்கள் ஸ்தாபனம் வாழத் தக்கதாக, நீங்கள் அதில் போட வேண்டிய வார்த்தையாக இருக்கிறார். கிறிஸ்துவே வார்த்தையாக ஒவ்வொன்றிற்கும் எல்லா சாயலாகவும் இருக்கிறார்: ஆசரிப்புக் கூடாரம், சமூகத்தப்பம், ஒவ்வொன்றிற்கும். பிட்கப்பட்ட தட்டின் கீழ் உள்ள அப்பம் அவருடைய பிட்கப்பட்ட சரீரமாகும். அது என்னவென்று யூதர்களால் இன்னமும் விவரிக்க முடியவில்லை. பாருங்கள்? இந்த மற்ற எல்லாக் காரியங்களும் அவருக்கே சாயலாக உள்ளன. 82அப்படியானால், இப்போது, அவர் காட்சியில் வரும்போது, எல்லா ஸ்தாபனங்களும், மதக்கோட்பாடுகளும் பின்னுக்கு விடப்படுவதை இப்போது நாம் காண்கிறோம்; அவரே யோவான் எழுதின சுவிசேஷம் 1ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, புளிப்பில்லா அப்பமாகிய சுத்தமும் மாறாததுமான தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார். அது சரிதான், அவர் தான் புளிப்பில்லாத அப்பமாயிருக்கிறார். ஆகவே நீங்கள் இதைக் கூட்டுவது அல்லது அதைக் கூட்டுவது என்பது ஏற்கனவே ஆதியில் உங்களுக்குக் கொடுக்கப்பட்டதுடன் புளித்ததைக் கூட்டுவதாகும். இங்கே பாருங்கள். மானிட இனத்தை இன்று கொல்வது என்ன? மாறுபட்ட இனங்களைச் சேர்த்து கலப்பு இனங்களை உருவாக்குகிறார்கள். நீங்கள் அதைக் கலப்பினமாக்கும் போது அதைக் கொன்று போடுகிறீர்கள். “ஓ, அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது”, நிச்சயமாக! கலப்பு தானியம் உணவு தானியத்திலிருந்து தயாரிக்கப்படும் மற்ற எல்லாம் தானிய சம்பந்தப்பட்ட உணவுப் பொருள்கள். கலப்பு தானியம், மிகப் பெரிய, நல்ல, நீளமான தண்டுகள், மிகப்பெரிய கதிர்களுடனும் மற்றதைக் காட்டிலும் இரண்டு மடங்கு நேர்த்தியானதாக காணப்படுகிறது. ஆனால் அது மரணமாயிருக்கிறது. விஞ்ஞானம் கூட அதைக் கண்டு பிடித்துள்ளது. பாருங்கள்? கலப்படம் செய்யாதீர்கள். அது உங்களைக் கொன்று போடும். 83இப்போது இங்கே, நான் உங்களுக்குக் காட்டட்டும்... அன்றொரு நாள் வீட்டிற்கு வெளியிலே நான் பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தேன். வீட்டிற்குப் பக்கத்திலுள்ள செடி வளர்ப்பவர் சில கலப்புப் பூச்செடிகளை சிறுதொட்டியில் இங்கு வைத்திருந்தார். வாரத்திற்கு 3 முறை அல்லது 4 முறையாவது குறைந்த பட்சம் அவைகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அல்லது அவைகள் மரித்துவிடும். அதே வெளிப்பக்கத்திலே ஒரு கலப்படமற்ற அசல் செடியும் இருந்தது. ஆறு மாதங்களாக மழையே பெய்யாததினால் எல்லாம் காய்ந்திருந்தது. மழை பெய்ததானால், பத்து நிமிடங்களில் நீங்கள் தூசியைத் தட்ட முடியும். ஆனால் கலப்பிடமில்லாத அந்த மூலச் செடியோ, அங்கே, தன்ணீரை தராளமாய்க் குடித்த அந்த கலப்புச் செடியைக் காட்டிலும் அழகாகவும் பிரகாசமாகவும் விளங்கினது. அதனிடமிருந்து தண்ணீரை விலக்குவீர்களானால் அது மரித்துவிடும். ஆனால் அது தனக்கு தேவையான நீரை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறது? மற்றுமொரு காரியம், பேன் போன்ற கிருமிகளை அதனிடமிருந்து விலக்க நாள்தோறும் அல்லது இரண்டு நாட்களுக்கொருமுறை மருந்து அடித்துக் கொண்டேயிருக்க வேண்டியதாயிருக்கும். அப்படி அடிக்காவிட்டால், அது அவ்வளவு இளசாகவும் மிருதுவாகவும் இருப்பதால் பேன்கள் அதைத் தின்றுவிடும். ஆனால் அசல் செடியை அவ்வகைப் பூச்சிகள் நெருங்காது. இல்லை, இல்லை, அப்பூச்சியானது அந்தச் செடி வரை ஊர்ந்து வரும். பிறகு அது ஊர்ந்தே சென்றுவிடும். அது அசல் செடியாகும். கலப்படம் செய்வது எதை விளைவித்திருக்கிறது என்று பாருங்கள்? 84சபையிலும் அதே காரியம் தான் நிகழ்ந்தேறுகிறது. அவர்கள் வார்த்தையையும் ஸ்தாபனத்தையும் கலக்க முயல்கிறார்கள். ஸ்தாபனம் சொல்வதையே வார்த்தையைக் கூற வைக்கப் பார்க்கிறார்கள். அவ்விதம் நீங்கள் செய்யும்போது, நீங்கள் மருந்தடிக்க வேண்டும், குழந்தைகளைப் போல நடத்தவேண்டும், ஓய்வு நாள் பள்ளிக்கு வருவதற்கு தங்க நட்சத்திரம் அவர்களுக்கு கொடுக்க வேண்டி இருப்பது போன்ற ஒவ்வொரு காரியங்களையும் செய்ய வேண்டியிருக்கும். அது சரியே. ஆனால் ஒரு உண்மையான மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன், தேவனுடைய வார்த்தையினால் பிறந்தவன், பாறையைப் போல உறுதியானவன், அவனைக் கொல்ல இயலாது. பேன்களும், உலகத்தின் காரியங்களும் அவனைத் தொந்தரவு செய்வதில்லை. அவன் ஒரு கழுகாயிருப்பதால், அதையெல்லாம் தாண்டி பறந்து செல்கிறான். பாருங்கள், உன்னதங்களுக்கு பறந்து எழும்புகிறான். பாருங்கள்? அது உண்மை தான். ஒன்றும்... 85கவனியுங்கள். இப்போது, நாம் அதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும். புளித்த அப்பத்துடன் சேர்க்கப்பட்ட ஸ்தாபனம். மதக்கோட்பாடுகள் அல்லது மற்ற ஏதும் புளிப்பில்லா அப்பத்துடன் சேர முடியாது. ஆராதனைக்குள் பிரவேசிப்பதை வேதாகமமானது சாக்கிரமந்தில் (Sacrament) நிழலாக முன்னமே காட்டுகிறது. எந்த புளிப்புள்ளதும் உங்களோடு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது அப்படியிருந்தால் மட்டுமே தேவன் அதை ஏற்றுக் கொள்வார். “நான் மெதோடிஸ்ட்” என்று நீங்கள் கூறுகிறீர்கள். அங்கேயே நீங்கள் மரிக்கிறீர்கள்! “நான் பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன்.” நீங்கள் மரிக்கிறீர்கள். நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன். அது தான் சரி. நீங்கள் ஏதோ ஒன்றின் மீது நிற்க வேண்டும். அது சரிதான். நீங்கள் எதன் மீதோ நின்று கொண்டிருக்கிறீர்கள். சர்ச்சில் ஒருமுறை இரண்டு விரல்களை உயர்த்தி காட்டி, “நாம் வெற்றி அடைந்துவிட்டோம் என்றார்.” இங்கிலாந்து தேசம் அந்த வார்த்தையை நம்பி நின்றது. அவர்கள் சர்ச்சிலை நம்பினார்கள். நம்பினால் நம்புங்கள் அல்லது நம்பாதீர்கள், இன்று காலையிலே, நீங்கள் ஏதோ ஒன்றைச் சார்ந்து அதன் பக்கத்தில் நிற்கிறீர்கள். நீங்கள் ஜீவிக்கிறவர்களாய் அதன் பக்கத்தில், நிற்கத் தக்கதான ஒரே ஒரு காரியம் தான் உண்டு, அது கிறிஸ்துவாகும், வார்த்தை, உண்மையாக! 86கவனியுங்கள், வேதத்தில், ஸ்தாபனங்களுக்கு பாபிலோனைத் தவிர வேறு முன்னடையாளம் இல்லை. பாபிலோன் நிம்ரோதினால் ஸ்தாபிக்கப்பட்டது. நிம்ரோது ஒரு விசுவாசத் துரோகியாயிருந்தான். அவன் அங்கே ஒரு கூட்டம் ஸ்திரீகளை வைத்திருந்தான். அவர்கள் அவனுக்கு ராணிகளாக கருதப்பட்டனர், தீர்க்கதரிசினிகளாயிருந்தனர். அந்த வகுப்பினர் வேர் பற்றி சென்றதாகவும் இன்னும் அநேகக் காரியங்களையும் கூறி அந்த வகுப்பிலிருந்து தான் பழைய பிலேயாம் தோன்றினதாகவும் கூட கருதுகிறார்கள். ஹிஸ்லாப்புடைய இரண்டு பாபிலோன்கள் முதலிய புத்தகங்களையும் சபையின் சரித்திரத்தையும் படித்திருக்கும் கல்விமான்கள், அவர்கள் எவ்விதம் ஆராதித்தனர் என்பதை அறிவீர்கள். இதைச் செய்த பெண்களை அவர்கள் பெற்றிருந்தனர். பெண்கள்... ஒரு தேவதை என்றெல்லாம், அது ஒரு பலாத்காரமாக திணிக்கப்பட்ட மதமாயிருந்தது. ஒவ்வொருவரும், பாபிலோனைச் சுற்றியிருந்த ஒவ்வொரு நகரத்தாரும் நிம்ரோதிற்கு கீழாக, (பாபேல்) கோபுரத்தண்டை ஆராதிக்கும்படியாக பாபிலோனுக்கு வர கட்டாயப்படுத்தப்பட்டனர். பாருங்கள்? அது சரியே. அவர்கள் அப்படிச் செய்ய, அதைக் குறித்து விவாதிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். அங்கே தான் குழப்பம் வந்தது. இன்று சபையும் சரியாக அதே நிலையில் தான் உள்ளது. “நீ ஓய்வு நாள் பள்ளிக்குச் செல்லாவிட்டால், நீ இதைச் செய்யாவிட்டால், இதைச் செய்வதற்கு நாங்கள் உன்னை கூலி பொருத்த வேண்டும். இதைச் செய்ய அதைச் செய்ய, நீ காட்சியிலேயே கிடையாது”. 87அங்கே டூசானில், இன்று காலையில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், நான் ஒருமுறை வியந்தேன்... நான் எப்பொழுதும் கட்டாயப்படுத்தியிருக்கிறேன், “கோயிலுக்குப் போங்கள், நீங்கள் எங்கே போனாலும் பரவாயில்லை.” ஜனங்கள் பின்வாங்குகிறவர்களாய் இந்தப் பக்கம் போவதைப் பார்த்திருக்கிறேன். “என்ன விஷயம்?” என்று நான் வியந்தேன். நான் அவர்களில் சிலரிடம் சென்றேன். “நீங்கள் அங்கே செல்லும் முதல் நாளிலே, அவர்கள் உங்களை அணுகி, எங்கள் சபையைச் சேருங்கள். அவ்விதம் நீங்கள் சேராவிடில், உங்களுக்கு அங்கே வரவேற்பிருக்காது.” பாருங்கள்? பாருங்கள்? இது ஒரு பலாத்காரமாய் செய்யப்படுகிற காரியமாயிருக்கிறது, அது உங்கள் மீது திணிக்கப்படுகிறது. பாருங்கள், அதுதான் பாபிலோன். ஆனால் கிறிஸ்துவில், தெரிந்து கொள்ளுதலின்படி நீங்கள் உள்ளே பிரவேசிக்கிறீர்கள்; கட்டாயத்தினால் அல்ல உங்கள் இருதயம் உங்களை உள்ளே இழுக்கிறது. அவருடைய நாமத்தை அப்பொழுது நான் பாபிலோனில் வைக்கமாட்டேன் என்று தேவன் கூறினார். இப்போது கூர்ந்து கவனியுங்கள். ஸ்தாபன சபைகளாகிய பாபிலோனில் அவர் தம்முடைய பெயரை வைக்க முடியாது. அவர்கள், அவர்கள் அவர் பெயரை அங்கே வைக்கிறார்கள். ஆனால் அவர் ஒருபோதும் வைக்கவில்லை. 88நீங்கள் இப்போது, “சரி, இப்போது, சகோதரன் பிரான்ஹாமே!” என்கிறீர்கள், பொறுங்கள், பொறுங்கள், பொறுங்கள், பொறுங்கள். நீங்கள் என்னை இன்னும் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளச் சொன்னீர்கள். இன்னும் சிறிது நேரம் எடுத்துக் கொள்ள என்னிடம் கூறினார்கள்... இப்போது கவனியுங்கள், அவர்கள் அவர் பெயரை அங்கே வைத்தார்கள், ஆனால் அவர் செய்யவில்லை. இப்போது, “நான் உன்னை சந்தித்து உன் பலியை ஏற்றுக் கொள்ளும் ஸ்தலம் நான் என் நாமத்தை விளங்கச் செய்யும் ஸ்தலமாகும். நான் என் நாமத்தை வைக்க தெரிந்து கொள்ளும் இந்தக் கதவு, இந்த வாசல் வழியாக நீ உட்பிரவேசி, அங்கே தான் நீ வர வேண்டும் என்று அவர் கூறினார்”. நல்லது, “இது கிறிஸ்துவின் சபை என்று அவர்கள் பெயரிட்டனர்”. அவர்கள் “அந்தி” என்னும் ஒரு வார்த்தையை விட்டுவிட்டது தான் அந்தப் பிரகடனத்தில் உள்ள ஒரே தவறாகும். அவர் கற்பித்த எல்லாவற்றையும் அவர்கள் மறுக்கிறார்கள். நவீன பரிசேயர்கள். 89ஆனால் அவர் தம்முடைய நாமத்தை எங்கே வைத்தார் என்பதை நாம் கண்டு பிடிக்கவே வேண்டும். ஏனெனில் அதில் தான் அவர் அருளிய ஒரே வாசலிருக்கிறது. ஆமென்! மகிமை கவனியுங்கள். அவர் தம்முடைய நாமத்தை எங்கே வைத்தார்? தம்முடைய குமாரனில். “ஓ,” சகோதரர் பிரான்ஹாமே, ஒரு நிமிடம், ''இப்பொழுது பொறுங்கள். அது குமாரனாகும், பிதாவல்ல“ என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஒவ்வொரு காரியத்திலும், தன்னுடைய தகப்பனுடைய பெயரை குமாரன் எப்பொழுதும் எடுத்துக் கொள்கிறான். என் தகப்பனுடைய பெயர் பிரான்ஹாம் ஆக இருந்ததால் நான் இந்த பூமிக்கு பிரான்ஹாம் எனும் ஒரு நாமத்தில், வருகிறேன். “நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை” என்று இயேசு கூறினார். அதைக் குறித்த வேத வாக்கியம் உங்களுக்குத் தேவையா? யோவான் எழுதின சுவிசேஷம் 5:43 ஆகும். பார்த்தீர்களா? “நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை”. அப்படியானால் பிதாவானவர், “இயேசு” என்னும் தம்முடைய சொந்த நாமத்தை குமாரனுக்களித்தார். மேலும் அவரே தான் வழி, அவர் தான் வாசல், அவரே வீடு, தேவன் தம்முடைய நாமத்தை வைக்கத் தெரிந்து கொண்டவரும் அவரே. தேவன் தம்முடைய நாமத்தை ஒருபோதும் என்னில் வைக்கவில்லை. அவர் அதை ஒருபோதும், ஒரு சபையில் வைக்கவில்லை. அவர் அதை ஒருபோதும் மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், கத்தோலிக்க சபைகளில் வைக்கவே இல்லை. ஆனால் அபிஷேகம் பண்ணப்பட்ட இம்மானுவேலாகிய கிறிஸ்துவிலே அதை வைத்தார். 90மேலும் நாமமானது. வார்த்தையானவரில் இருக்கிறது. ஏனெனில் அவரே வார்த்தையாக இருக்கிறார். ஆமென். அப்படியானால் அவர் என்னவாக இருக்கிறார்? வியாக்கியானம் செய்யப்பட்ட வார்த்தையே தேவனுடைய நாமத்தின் வெளிப்படுத்தலாகும். ஆச்சரியமில்லை..., “மாமிசமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதாவே நான் யார் என்பதை வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் மேல் நான் என் ஆராதனை ஸ்தலத்தைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை அசைத்துக் கீழே தள்ளிவிடுவதில்லை”, ஆமென்! ஓ தேவனுடைய ஜீவனுள்ள சபையே, இயேசு கிறிஸ்துவில் மாத்திரம் திட அஸ்திபாரமிட்டு நில். நீங்கள் பாட்டைப் பாடக் கூடும். ஆனால் நீங்கள் வார்த்தையாகிய கிறிஸ்துவில் இராவிட்டால் நீங்கள் சரிந்து போகும் மணலின் மீது நிற்கிறீர்கள். “என்னுடைய வார்த்தையாகிய கிறிஸ்துவாகிய, இந்தக் கல்லின் மேல்.” 91அவர் லூத்தரன் செய்தியைக் கட்டினார். அவர்களோ அதை ஸ்தாபனமாக்கினார்கள். பாதபடியாகிய அது வளர்ந்து கொண்டு வந்தது. பிறகு அவர் கால் பகுதியாகிய மெதோடிஸ்டுக்குள் வளர்ந்தார், இப்படி படிப்படியாக, அங்கே தான். அவருடைய வார்த்தையின் மீது அவர் தமது சபையைக் கட்டினார்! இப்போது, அவர் எல்லாமே பாதமாக இருக்கவில்லை. அல்லது எல்லாமே தொடையாகவும் இருக்கவில்லை. அவர் ஒரு சரீரமாக இருக்கிறார்; இப்போது தலைக்கல்லைப் பொருத்தும் பகுதியாகும். கூர்நுனிக் கோபுரத்தில் கவனித்தீர்களா?... இப்போது, ஒரு கூர்நுனிக் கோபுர மதத்தை நான் பிரசங்கிப்பதில்லை. ஆனால் வேதாகமம் முதலில் எழுதப்பட்டதே ஆகாயத்தில் எழுதப்பட்டது, இராசி (ஒலி நாடாவில் பதிவு செய்யப்படாத வெறும் பகுதி பதிப்பாசிரியர்). நீங்கள் அதை கவனித்தீர்களா? இராசி மண்டலத்திலுள்ள முதல் உருவமாகிய கன்னி இராசியில் அது தொடங்குகிறது. கடைசி உருவம் சிம்ம இராசியாகிய சிங்கம். அவர் முதலில் கன்னியின் மூலம் வந்தார். அவர் அடுத்த முறை யூதா கோத்திரத்து சிங்கமாக வருகிறார். அதற்கு சற்று முன்பாக, ஒரு கடகம் காலம். ஒரு மீனம், மற்ற எல்லா காலங்களும். நமக்கு நேரம் இருந்தால், நாம் அதைக் குறித்து சிந்திக்கலாம்; கூடாரத்தில் அதைக் குறித்துப் பேசியிருக்கிறோம். 92கூர்நுனிக் கோபுரமானது அந்த அஸ்திபாரங்களால் எழுப்பப்பட்டதாக அமைந்து, இராஜாவின் அறைக்கு வந்திருக்கிறது. நீங்கள் ஏழாவது சுவற்றை அடைவதற்கு சற்று முன்பு ஒரு தூதன் வெளியே வந்து உங்களை இராஜாவினுடைய சமூகத்திற்கு அழைத்துச் செல்வதான அறிமுகம் செய்யும் ஒரு சிறு பலகை அங்கிருக்கிறது. (இராஜாவை அறிமுகம் செய்த தூதனாகிய யோவான் ஸ்நானகன்), ஆனால் தலைக்கல்லானது புறக்கணிக்கப்பட்டது. தலைக்கல் என்றோ அல்லது வேறு எவ்வாறோ அழைக்கப்படும் அந்தக் கல்லானது எங்கிருக்கிறது என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், ஏனென்றால் அது ஒரு புறக்கணிக்கப்பட்ட கல்லாயிருக்கிறது. ஆனால் முழு கூர்நுனிக் கோபுரத்தையும் பூர்த்தி செய்வது அந்தக் கல் தான். முழு ஏழு சபையின் காலங்களாக எழும்பிய கூர் நுனிக்கோபுரமாக அதை ஆக்குவது அந்தக் கல் தான். கிருபையைக் கூட்டு, இதைக் கூட்டு, இதைக் கூட்டு, ஏழு காரியங்கள் கூட்டப்பட வேண்டியுள்ளது, கடைசியாக கூட்டப்பட வேண்டியது கிறிஸ்துவாகும். உங்கள் அன்போடு இதைக் கூட்டுங்கள். உங்கள் கிருபையோடு கிருபையைக் கூட்டுங்கள், வேறு ஏதாகிலும் கூட்டுங்கள், மேலும், வேறு ஏதாவது. இவ்விதமாக தலைக்கல்லாகிய கிறிஸ்துவண்டை வரும் வரை, “நானே வாசல்.” 93இப்போது, ஒரு குமாரன் எப்போதும் தன் பிதாவினுடைய நாமத்தில் வருகிறான். எந்த குமாரனும் தன் தகப்பனுடைய நாமத்தில் வருகிறான். “நான் என் பிதாவினுடைய நாமத்தில் வந்தேன்” என்று இயேசு கூறினார். அப்படியானால் பிதாவினுடைய நாமம் என்ன? குமாரனுடைய நாமம் என்ன? “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள்” என்று அவர் சொன்னார். ஆம், அவர் பரிசுத்த ஆவியின் உருவத்தில் வந்தார், அந்த அதே இயேசு. “ஓ இயேசுவே!” என்று அவர்கள் ஆராதித்ததற்கு அதுதான் காரணம். பாருங்கள்? பாருங்கள்? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவ்வளவு தான். “நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை.” 94“வேறொருவன் வருவான்,” ஒரு ஸ்தாபனம், ஒரு மதக்கோட்பாடு, என்று அவர் இங்கு சேர்த்துச் சொல்லி நம்மை எச்சரிக்கிறார் என்பதை இப்போது ஞாபகத்தில் கொள்ளுங்கள். “அவர்கள் தங்கள் நாமத்தில் வருவார்கள், அவர்களை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். உங்கள் முன்பாக உறுதிப்படுத்தப்பட்டும் நிரூபிக்கப்பட்டதுமாகிய வார்த்தையாகிய என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள்.” அவர் அன்றைக்கு சரியாக இருந்ததுபோல அவர் இன்றைக்கும் சரியாயிருக்கிறார். தேசம் முழுவதும் இதைக் கேட்கிற மக்களே, அதை நீங்கள் இழந்துவிடாதீர்கள். “வேறொருவன் வருவான். ஒரு சபை, நீங்களும் அதை நம்புவீர்கள். ஏனென்றால் நீங்கள் எப்படியும் செய்யலாம். நான் அதை உறுதிப்படுத்தமாட்டேன்”. அவரால் அளிக்கப்பட்ட செய்திக்கு புறம்பாக (எந்த சபையிலும்) அவர் எதையும் ஒருபோதும் (எந்த நேரத்திலும், எப்போதும்) உறுதிப்படுத்தினதில்லை; லூத்தருடைய நீதிமானாக்கப்படுதல்; வெஸ்லியினுடைய பரிசுத்தமாக்கப்படுதல்; பெந்தெகொஸ்தே வரங்கள் புதுப்பிக்கப்படுதல், பிறகு அதிலிருந்து ஒரு ஸ்தாபனத்தை அவர்கள் உண்டாக்கியபோது, அங்கேயே அது மரித்தது. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். 95“எனது நாமம் விளங்கும் படியான ஸ்தலத்தை நான் தெரிந்து கொள்வேன் என்று அவர் கூறினார். அந்த நாமம் இயேசு. இயேசு வார்த்தையாக இருக்கிறார், யோவான் 1 அது சரியா? அதுதான் ஆராதனை ஸ்தலம், வார்த்தையாகிய கிறிஸ்து. நான் என் பிதாவின் நாமத்தில் வருகிறேன்.” “அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்”, என்று தீர்க்கதரிசி கூறினார். அது மத்தேயு 1:23, நீங்கள் அதை எழுதிக் கொள்ள விரும்பினால். இயேசு, யேகோவா இரட்சகர். இப்போது, 5வது வசனம். அவரே வாசல் என்பதைக் காட்டுகிறது. இதற்குள்ளாக காணப்படாத மற்ற அநேக சாட்சியங்களால், இந்த வாசலும் நாமமும் ஸ்தலமும் தேவன் மனிதன் தம்மை ஆராதிப்பதற்கென அவனை சந்திக்கும் ஒரே ஒரு ஸ்தலம் என்பதை நிரூபிக்க முடியும், அது அவர் கிறிஸ்துவுக்குள் இருக்கும் போதே. இப்போது, “நாம் எவ்விதம் அவருக்குள் பிரவேசிக்கிறோம்?” என்பதே கேள்வியாகும் இப்போது, இது சற்று திருகக் கூடும்; ஆனால், மருந்து சாப்பிடும்போது மருந்து நம்மை வெறுப்படையச் செய்யாவிட்டால், அது நமக்கு எந்த நன்மையையும் செய்வதில்லை பாருங்கள். 96இப்போது, லூத்தரன் சபையைச் சேர்ந்தவர்கள், லூத்தரன் சபையைச் சேர்வதன் மூலம் ஒரு வழியில் வரப் பார்த்தார்கள். மெதோடிஸ்டுகள் கத்திக் கூச்சலிடுவதன் மூலம் உள்ளே வரப் பிரியப்பட்டார்கள். பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தினர் அந்நிய பாஷைகளில் பேசுவதன் மூலம் பிரவேசிக்கப் பார்த்தனர். அது இன்னமும் அவ்வாறே உள்ளதல்லவா! பாருங்கள். இல்லை, அது வரங்களாய் உள்ளது. “ஆனால் ஒரே ஆவியினாலே”, என்று கொரிந்தியர் 12ம் அதிகாரம் (13ம் வசனம்) கூறுகிறது. வார்த்தைக்கு (வித்து) உயிரளிப்பவராகிய தேவனுடைய ஆவியானவர், அந்த வேளைக்குரிய வித்தை உறுதிப்படுத்த பாருங்கள்? மெதோடிஸ்ட் காலத்து வித்து இங்கே கிடக்கிறது, சபையைச் சுத்தப்படுத்தி பரிசுத்தமாக்கப்படச் செய்ய அந்த வித்தை உயிர் பெறச் செய்ய பரிசுத்த ஆவி அவசியமாயிருந்தது. லூத்தர் அதைப் போதிக்கவில்லை. ஏனென்றால் அவர் அதை அறிந்திருக்கவில்லை. பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தினர் வரங்கள் புதுப்பிக்கப்படுவதற்கு அந்நிய பாஷைகளில் பேச விரும்பினர். ஒவ்வொருவரும் “அதுதான்! அதுதான்!” என்று பிரகடனப்படுத்துகின்றனர்! பாருங்கள்? 97“ஆனால் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்.” அந்த சரீரமானது தேவனுடைய குடும்பமாகிய ஒரு குடும்பமாயிருக்கிறது. அதுதான் தேவனுடைய வீடு, இயேசு கிறிஸ்துவின் நாமமே தேவனுடைய வீடாகும். “கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.” (நீதி 18:10). இப்போது, பதவி, உத்தியோகம், அந்தஸ்து இவைகளைக் குறிக்கும் பட்டப் பெயரில் நீங்கள் எப்படி வரப்போகிறீர்கள்? “ரெவரன்ட், டாக்டர், ஊழியக்காரர்” என்ற பெயரில் அனுப்பப்படும் உங்கள் காசோலை (Check) எவ்விதம் ஏற்றுக் கொள்ளப்படும்? இல்லை. பாருங்கள்? பாருங்கள்? நீங்கள் ஒரு ரெவரண்ட் (மத குரு), டாக்டர், ஊழியக்காராக இருக்கலாம். ஆனால் கர்த்தருடைய நாமம் “இயேசு கிறிஸ்து” என்பதே. பாருங்கள்? “என்னுடைய குடும்பம் இரத்தத்தின் கீழ் ஒன்று கூடி என்னை ஆராதிக்கும் வீட்டின் வாசவில் என் நாமத்தை வைக்கத் தெரிந்து கொண்டேன்; எகிப்தில் இருந்ததுபோல, அதற்கு வெளியேயிருந்த எதுவும் மரித்தது. அதற்கு உள்ளே அங்கே புளிப்புள்ள அப்பம் காணப்படவில்லை. அதற்குள்ளே எங்கும் ஸ்தாபனங்களின் கலப்புக் கிடையாது. என் வீடு, என்னுடைய பிள்ளைகள், என்னுடைய உயிரணுக்களால் பிறந்தவர்கள்!” ஆமென் தேவனுக்கு மகிமை! “என்னுடைய உயிரணுக்கள் அவர்களிலிருக்கின்றன! என்னுடைய... என் வார்த்தையை நான் அவர்களில் வைக்கிறேன், அவைகளை நான் அவர்கள் இருதயமாகிய கற்பலகைகளில் எழுதுவேன். அது என்னுடைய குடும்பம், இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய குடும்பம்; அந்தக் குடும்பம். இந்த வாசல் வழியாய் நீங்கள் உள்ளே வருவீர்கள். மெதோடிஸ்ட், பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்கள் வாயிலாக அல்ல, ஆனால் நான் என் நாமத்தை விளங்கச் செய்யும் வாசலில்.” அது மெதோடிஸ்ட் அல்ல. மெதோடிஸ்ட் என்பது தேவனுடைய நாமம் அல்ல. தேவனுடைய நாமம் பெந்தெகொஸ்தே என்பதல்ல. தேவனுடைய நாமம் பாப்டிஸ்ட் என்பதல்ல... தேவனுடைய நாமம் கத்தோலிக்கர் என்பதல்ல. அப்படியானால் அந்த வாசல்களிலிருந்து வெளியே இருங்கள். பாருங்கள்? 98“ஆனால் நான் என்னுடைய நாமம் விளங்கும்படி தெரிந்து கொள்ளும் ஒரு ஸ்தலத்தில்.” இப்போது, இயேசு கிறிஸ்துவில் தவிர, தேவன் தம்முடைய நாமத்தை வைத்த வேறு எந்த ஸ்தலமும் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் தேவனுடைய குமாரன், தேவனுடைய நாமத்தை, தேவனுடைய மானிட நாமத்தை எடுத்துக் கொண்டவர். “நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” (அப் 4:12). மெதோடிஸ்டு, பாப்டிஸ்ட், பிரெஸ்பிடேரியன், கத்தோலிக்க போதனை முறைகள், அல்லது நீங்கள் எதைச் செய்ய விரும்பினாலும் எனக்குக் கவலையில்லை. முழங்கால் யாவும் முடங்கி நாவுகள் யாவும் அவர் கர்த்தரென்று அறிக்கை பண்ணும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக மட்டுமே. இவ்விதமாகவே நீங்கள் உள்ளே வருகிறீர்கள் நீங்கள் சரியான தண்ணீர் ஞானஸ்நானம் எடுத்திருந்து, பிறகு வார்த்தையை மறுப்பீர்களானால், நீங்கள் முறை தவறிப் பிறந்தவர்களாவீர்கள். உங்கள் பிறப்பு சரியானதாக இருக்கவில்லை. நீங்கள் அவரை விசுவாசிப்பதாக உரிமை கொண்டாடிக் கொண்டே அவரை மறுதலிக்கிறீர்கள். நான் எவ்விதம் என் குடும்பத்தை மறுதலிக்க முடியும்? சார்லஸ் பிரான்ஹாம் என் தகப்பனார் அல்ல என்று நான் எவ்வாறு மறுக்க முடியும்? வாசலின் மீதுள்ள இரத்தப் பரிசோதனை அதைக் காட்டிவிடுகிறது. 99என்னுடைய கிரியையும், தேவனுடைய வார்த்தை என் வாழ்க்கையில் உறுதிப்படுத்தப்படுவதும், நான் தேவனுடைய பிள்ளையா இல்லையா என்பதைக் காட்டுகிறது. இப்போது, தேவனுடைய ஒரே ஸ்தலம் இருக்கிறது. அதைக் காண்கிறீர்களா? (நீங்கள் எவ்வளவு உண்மையுள்ளவராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை.) தேவன் உங்களுடைய பலியை ஏற்றுக் கொள்ளும் ஒரே ஸ்தலம் கிறிஸ்துவில் இருக்கிறது. ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்... “நல்லது, நானும் உள்ளே வருவதாக நான் நம்பினேன்” என்று நீங்கள் கூறுகிறீர்கள். நினைவில் கொள்ளுங்கள், வேதம் கூறுகிறது... “நல்லது, இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என விசுவாசிக்கும் எவனும் இரட்சிக்கப்படுகிறான், இரட்சிக்கப்படுவான்” என்று வேதாகமம் கூறுகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது அவ்விதம் கூறுகிறது. ஆனால் ஞாபகமிருக்கட்டும். “பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக் கூடாது” என்றும் எழுதப்பட்டிருக்கிறது. பாருங்கள். அவர் தேவகுமாரன் என்று நீங்கள் சொல்லக் கூடும். ஆனால் வார்த்தைக்கு உயிரளிக்கிற பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய குமாரனென்று நிரூபித்து உறுதிப்படுத்ததும் வரை அவர் தேவ குமாரனல்ல. அதுதான் வேதவாக்கியம். 100“நான் என் நாமத்தை விளங்கச் செய்ய தெரிந்து கொண்ட ஸ்தலம், வேறு எந்த வாசலிலும் நீ ஆராதிக்காதிருப்பாயாக ஆனால் நான் என் நாமத்தை வைக்கும் வாசலில் மாத்திரம் ஆராதிப்பாயாக அப்போது நான் உன்னை ஏற்றுக் கொள்வேன். நீ என் குடும்பத்திலிருக்கிறாய்.” இப்போது, தேவனுடைய குடும்பமானது. குடும்பத்தின் தகப்பனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிகிறது. “அவர் சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, அவருடைய இராஜ்ஜியத்திற்கும் ஆளுகைக்கும் முடிவில்லை, கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்.” அவர், ஆளுநர், இராஜா, இம்மானுவேல், முந்தினவர், பிந்தினவர், சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன் நித்தியப் பிதாவாக இருப்பதால், அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரில் ஒரு பாகமாயிருப்பதால், அவருடைய கட்டளைக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும், கீழ்ப்படிகிறார்கள். 101நாங்கள் எங்கள் வீட்டில், பிரான்ஹாம் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜீவிப்பது போல ஜீவிக்கிறோம். ஜோன்ஸ்கள் ஆகிய நீங்கள் ஜோன்ஸ் குடும்பத்தார் எப்படி ஜீவிப்பார்களோ அப்படி உங்கள் வீட்டில் வசிக்கிறீர்கள். தேவனுடைய வீட்டில் நாம் தேவனுடைய வார்த்தையினாலும் தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் ஜீவிக்கிறோம், வேறு யாருக்கும், மோசக்காரனுக்கு, நாங்கள் செவிகொடுக்க மாட்டோம். பாருங்கள்? “ஒவ்வொரு சபையின் காலத்திலும், நான் உங்களுக்குக் கொடுக்கும் வண்ணமாகவே, நீங்கள் புளிப்பில்லா அப்பத்தைப் புசிப்பீர்களாக.” ஆனால் திரும்பப் போய் அதை இதற்குள்ளாக புகுத்த முயற்சிக்க வேண்டாம், ஏனென்றால் அது தண்டுக்குள் வந்திருக்கிறது. “பலியில் மீந்திருக்கும் எலும்பு முதலியவைகளை நீ எடுத்து அவைகளை எரித்து விடுவாயாக” போய்விட்டது, அந்த சபையின் காலம் மரித்து மேற்க்கொண்டு சென்றது. நாம் இப்போது மற்றொரு சபையின் காலத்தில் இருக்கிறோம். ஆமென்! “என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்தெடுக்கும் ஆராதனை ஸ்தலம்.” ஓ, என்னே! 1 கொரிந்தியர் 12ம் அதிகாரம். 102எபேசியர் 4:30 இல் கவனியுங்கள்: நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று... (அடுத்த எழுப்புதல் வரையிலா?)... மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். ....நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். இப்போது கவனியுங்கள். அதை நம்முடைய வேத பாடத்திற்குப் பயன்படுத்துவோம். பிறகு நாம் போகலாம். மக்களை அதிகமாக சோர்வுறச் செய்கிறேன் என்று நினைக்கிறேன். நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? ஜனங்கள் எழுந்திருந்து வீட்டுக்குப் போகிறார்கள், பாருங்கள், ஏனென்றால் அவர்கள் இரவுக்காக சமைக்க வேண்டும். வேறு யாரோ கூட போக விரும்புகிறார்கள். இங்கு வந்து நாள் முழுவதும் கேட்க அவர்கள் எதிர்பார்த்து வரவில்லை. பாருங்கள்? ஆனால் பாருங்கள். உங்களுக்கு தெரியும்... 103பென் (Ben) நான் - நான் உன் மீது கிரியை செய்ய வேண்டும்! உன்னை ஆசீர்வதிக்கிறேன். நன்றி, சகோதரன் பென் அவர்களே, சகோதரன் பென் அவர்களே, நான் உங்களை நேசிக்கிறேன். நமக்காக அந்த சகோதரன் போரில் எவ்வளவு வேதனை அனுபவித்திருக்கிறார் என்பதை அறிவீர்களானால், அவர் துண்டுகளாகத் தக்கதாக சுடப்பட்டார், மற்றெல்லாமும் பட்டார். ஒவ்வொரு விதமான வாழ்க்கையையும் வாழ்ந்திருக்கிறார். ஆனால் தேவன் அவரை ஆசீர்வதித்திருக்கிறார். அவர் உண்மையாய் நிலைத்திருந்தார். அவருடைய மனைவி அவரை விட்டு ஓடிப்போய் மறுபடியும் மணம் புரிந்து கொண்டார். அவருடைய பிள்ளைகளையும் கொண்டு போய்விட்டார். ஓ, என்னால் அதை யோசிக்கக் கூட முடியவில்லை. ஆனாலும், எப்படியும், தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, சகோதரன் பென் அவர்களே. தற்போது அவர் குண்டுகள் ஏராளமாய் அவர் நரம்பு முதலியவைகளை அழுத்திக் கொண்டிருக்கும் நிலையில் கிடக்கிறார். நீங்கள் பென் அவர்களின் வாழ்க்கையின் பின்புறக் காட்சியை அறிந்திருக்க வேண்டும். தேவனே, அந்தப் பையனை ஆசீர்வதியும். ஆம் ...நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற... 104கவனியுங்கள்! இப்போது இது சற்று திருகக்கூடும். ஆனால் பாருங்கள் (என்னோடு சண்டை போடாதீர்கள்) அப்படியே நினைவில் கொள்ளுங்கள். இஸ்ரவேல் இரத்தம் பூசப்பட்டிருந்த வாசலை நோக்கிப் பார்த்தபோது, நாமம் (இரத்தம், ஜீவன்), அந்த இரத்தத்தின் கீழாக நுழைந்த பிறகு, அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறும் வரைக்கும் அவர்கள் வெளியே போகவில்லை. ...நீங்கள் மீட்கப்படும் நாள் வரை உள்ளே பிரவேசித்து இனி ஒருபோதும் வெளியே வராதபடி பெற்றுக் கொண்ட தேவனுடைய ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். நல்லது, வேதாகமம் எப்போதுமே சரியாக இருக்கிறது. மீட்பின் முழுக்காட்சியும் வெளிப்படத் தக்கதாக, அந்த வார்த்தையை ஒன்றோடொன்று நீங்கள் பொருத்தத் தக்கதாக, அவர் அந்த வார்த்தையை அங்கே வைத்திருக்கிறார் பாருங்கள். பாருங்கள்? ...உங்கள் மீட்பு வரை (நீங்கள் மீட்கப்படும் வரை) முத்திரையாகப் பெற்ற தேவனுடைய ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். 105நீங்கள் உள்ளே முத்தரிக்கப்படுகிறீர்கள். நீங்கள் இரத்தத்தின் கீழாயிருக்கிறீர்கள் நீங்கள் இனிமேல் வெளியே செல்வதில்லை. அப்போது நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள்? தேவனுடைய குடும்பத்தில் தேவனுடைய குமாரனாக, பரிசுத்த ஆவியால் முத்தரிக்கப்பட்டவராயிருக்கிறீர்கள். பிசாசு உங்களைத் தொட விரும்பினாலும் நெருங்க முடியாது. ஏனென்றால் நீங்கள் மரித்துவிட்டீர்கள், உங்கள் பழைய கணவன் மரித்தாயிற்று; நீங்கள் அடக்கம் பண்ணப்பட்டு, உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடன் தேவனுக்குள் மறைக்கப்பட்டு பரிசுத்த ஆவியால் முத்தரிக்கப்பட்டிருக்கிறது. அவன் எவ்வாறு உங்களைத் தொடப்போகிறான்? நீங்கள் எவ்விதம் வெளியேறப் போகிறீர்கள்? நீங்கள் அங்கே வந்துவிட்டீர்கள்! மகிமை! இப்போது நான் அதை நிறுத்திக் கொள்கிறேன்; நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் போதுமானது. 106அப்போது ஸ்தாபனத்திற்கல்ல, ஆனால் வார்த்தைக்கு ஒரு புது சிருஷ்டி நீங்கள் வார்த்தையின் ஒரு சிருஷ்டியாயிருக்கிறீர்கள். ஏனென்றால், தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாயிருப்பதற்கு முன் குறிக்கப்பட்டு, உலகத்தோற்றத்துக்கு முன்பே அஸ்திபாரக் கல்லானது உங்களுக்குள் நாட்டப்பட்டது. இதன் மீது, இயேசு தம்முடைய காலத்தில் செய்ததைப் போலவே, எல்லாவற்றிற்கும் தலைக்கல்லாக வந்து கொண்டிருக்கும் அந்த வார்த்தையை உறுதிப்படுத்த ஒவ்வொரு காலத்திலும் கல்லின் மீது கல் வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு காலமும் அவரில் மறைந்திருந்தது. இயேசுவில் மோசேயிருந்தார். இயேசுவில் தாவீது இருந்தார். இயேசுவில் தீர்க்கதரிசிகள் இருந்தனர். அது சரியா? யோசேப்பைப் பாருங்கள். ஏறக்குறைய முப்பது வெள்ளிக் காசுகளுக்கு விற்கப்பட்டு, குழியிலே போடப்பட்டு, மரித்தவனைப் போல எண்ணப்பட்டு, வெளியே எடுக்கப்பட்டு, போய் பார்வோனுடைய வலது பாரிசத்திற்கு வந்தார். பாருங்கள், அப்படியே சரியாக, இயேசுவும். யோசேப்பு இயேசுவுக்குள் இருந்தார். அவர் வந்தபோது, அவர் இராஜாக்களின், தீர்க்கதரிசிகளின் பரிபூரணமாயிருந்தார் (அல்லேலூயா), தேவத்துவம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது. அவர் அங்கிருந்து ஒரு மணவாட்டியை மீட்க வருகிறார். தேவனுடைய மிகச் சிறந்த சாதனை. அந்த மிகச் சிறந்த சாதனை சாத்தானைப் பார்த்து கூறுகிறார்... “அற்புதங்களின் நாட்கள் கடந்து போயின. நீங்கள் கூறுவது போன்ற காரியங்கள் கிடையாது” என்று அவன் கூறும் போது. “எனக்குப் பின்னாகப் போ, சாத்தானே.” பாருங்கள்? பாருங்கள், தேவனுடைய மிகச் சிறந்த சாதனை நின்று கொண்டு காவல் காக்கிறார். 107எல்லாவற்றிற்கும் தலையாகிய தலைக் கல்லானது எப்போதாவது திரும்ப வந்து மணவாட்டியைத் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்வார்; ஸ்திரீயானவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டு, மனிதனின் ஒரு பாகமாயிருக்கிறாள். ஒவ்வொரு... மனிதனிலுள்ள உயிரணுக்கள் ஸ்திரீயிலிருந்து, இவ்விதமாக ஸ்திரீ உண்டாக்கப்படுகிறாள். அதே விதமாக தேவனுடைய வார்த்தையானது சபையிலிருந்து மணவாட்டியாகிய சபையை உருவாக்குகிறது. ஒரு ஸ்தாபனமல்ல, அது பிசாசினாலுண்டானது. அவை ஒவ்வொன்றும். அவைகளிலுள்ள மக்களை நான் அவ்விதம் அழைக்கவில்லை; “குருடனுக்கு குருடன் வழி காட்டுதல்” என்று இயேசு சொன்னது போல அவர்கள் பரிதாபகரமான வஞ்சிக்கப்பட்ட மக்களாவர். அவர் அவர்களை வெளியே அழைத்து விட முடியவில்லை. “சரி, நீ வேசித்தனத்தினால் பிறந்தவன்! உன்னை இங்கு வரச் சொல்கிறது யார்? எந்தப் பள்ளிக்கூடம், வேதாகமக் கல்லூரி உன்னை அங்கீகரித்தது. எங்களுக்கு அங்கே மோசே உண்டு. நாங்கள்...” என்று அவர்கள் கூறினர். “நீங்கள் மோசேயை அறிந்திருந்தீர்களானால், என்னையும் அறிந்திருப்பீர்கள்” என்று அவர் கூறினார். மோசே தன்னுடைய நான்கு புத்தகங்களிலும் அவரைக் குறித்து எழுதினார். உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு வார்த்தையை அளிப்பவரை, ஒரு தீர்க்கதரிசியை, எழுப்பப் பண்ணுவார். அந்தத் தீர்க்கதரிசியின் வார்த்தைக்கு செவி சாய்க்காதவர்கள் ஜனத்திலிராதபடிக்கு அறுப்புண்டு போவார்கள். அதைக் குறித்து அவ்வளவுதான் உள்ளது. அவர் யார்? வார்த்தை. அது என்னவாயிருக்கிறது? நீ முதல் நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாமிசத்தில் ஏதாகிலும் இராமுழுவதும் விடியற்காலம் வரைக்கும் வைக்க வேண்டாம். அதில் புளித்த மாவைப் போடாதே. எந்த மதக்கோட்பாட்டையும் எந்த ஸ்தாபனத்தையும் கூட்டாதே, ஏனென்றால் அது அங்கே தான் தீட்டுப்படுகிறது. உன்னுடைய பலியானது முடிவுக்கு வந்து விடுகிறது. 108இப்போது நாம் துரிதமாகச் செல்வோம். சீக்கிரமாக, நீங்கள் போய் ஆகாரம் புசிக்கத் தக்கதாக. கவனியுங்கள்! அப்படியானால் இப்போது நீ தேவனுடைய வீட்டில் தேவனுடைய ஒரு புத்திரனாயிருக்கிறாய். நீ தேவனுடைய காணியாட்சியில் ஒரு பாகமாயிருக்கிறாய். ரோமர் 8:1, “ஆனபடியால் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருப்பவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை”. ஏனென்றால் அவர்கள் உலகத்திற்கு மரித்தவர்களாய், அவரில் ஜீவிக்கிறவர்களாய், தேவனால் முன் குறிக்கப்பட்டு, மணவாட்டியின் புத்தகத்தில் தங்கள் பெயர்கள் எழுதப்பட்டவர்களாக, எந்த வார்த்தையை உருவாக்க தேவன் அவர்களை உபயோகித்தாரோ அவ்வார்த்தையை உருவாக்குபவர்களாய் இந்த நாளில் ஜீவிக்கிறார்கள். என் இருதயத்தில் உள்ள அந்த வித்தின் மீது தண்ணீர்கள் வரும்போது, அதை கிறிஸ்துவின் மணவாட்டியாக எழுப்புகிறது. ஓ, என்னே! எவ்வளவு பூரணமாக இருக்க முடியுமோ அவ்வளவு பூரணமாயுள்ளது. ஒவ்வொரு காலத்திலும் அது அவ்விதமாகவே இருந்திருக்கிறது. 109லூத்தரன் ஸ்தாபனத்தினர், நீதிமானாக்கப்படுதலின் கீழ், பாதங்களாக, அதை அவ்விதம் எழும்பச் செய்தனர் வெஸ்லி, பரிசுத்தமாக்கப்படுதலின் கீழ், பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தினர் புயங்களின் கீழ், கிரியைகள், செயல்கள் முதலானவைகள், கால்வினிஸ்டுகளாக இருக்க வேண்டியிருந்தது. அல்லது அர்மீனியன்களாக இருக்க வேண்டியிருந்தது. அல்லது வேதப்பிரமாண தத்துவக்காராக இருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நாம் தலைக் கல்லாகிய தலையண்டை வருகிறோம். “கிருபை உண்டாவதாக! கிருபை உண்டாவதாக!” என்று தலைக்கல் ஆர்ப்பரித்தது. தலைக்கால் என்னவென்று ஆர்ப்பரித்தது? “கிருபை உண்டாவதாக! கிருபை உண்டாவதாக” மரணத்திலிருந்தும், மதக் கோட்பாடுகளிலிருந்தும் கடந்து ஜீவனுள்ள தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைக்குள் வந்திருக்கிறோம். அவருடைய யுகத்திற்காக தேவனால் அருளப்பட்ட ஒரே திட்டம். தீப்பொறியானது மற்ற ஏதாவது பொருளால் பற்றி எரிய வைக்கப்படுவது போல பாவ வார்த்தையின் யுகத்தில் அவருடைய குமாரர்கள் ஆவியினால் உயிர்ப்பிக்கப்படுவது; இப்போது உன்னத ஸ்தலங்களில் நிகழ்காலத்தில் வீற்றிருந்து. ஏற்கெனவே ஜீவனுள்ளவர்களாக வார்த்தையிலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்திற்கும் உட்பட்டவர்களாயிருப்பது. அப்போது அது என்ன செய்கிறது? நீங்கள் தேவனுடைய உயிரணுவின் ஒரு பாகமாயிருந்து, வார்த்தையின் ஒரு பாகமாக, மற்ற மனிதர்களும் தேவனுடைய வார்த்தையின் ஒரு பாகமாக கூடி அமர்ந்திருந்து கிறிஸ்துவின் முழு சரீரத்தையும் வெளிப்படுத்துகிறீர்கள், ஏனென்றால் உங்களுக்குள் புளித்த மா ஏதும் அங்கில்லை. (சகோதரன் ப்ரௌன் அவர்களே, அவர் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்பதைக் காண்கிறீர்களா?) உங்களுக்குள் புளித்த மா ஏதும் இல்லை. வெறும் வார்த்தை மட்டுமே, உன்னத ஸ்தலங்களில் வீற்றிருக்கிறீர்கள் அவர் தம்முடைய நாமத்தை வைத்து வாசலில் கிறிஸ்து இயேசு. 110உங்களுக்குள் புளித்த மா ஏதும் இல்லை. அது தேவத்துவத்தின் முழு பரிபூரணத்தையும் சரீரப் பிரகாரமாக உங்களுக்குள் கொண்டு வருகிறது. லூத்தர் காலத்தில் இதை செய்ய முடியவில்லை, வெஸ்லியின் காலத்தில் இதை செய்ய முடியவில்லை. பெந்தெகொஸ்தே காலத்தில் இதைச் செய்ய முடியவில்லை. ஆனால் மனுஷ குமாரன் வெளிக்குக் காட்டப்பட்டு, வெளிப்படுத்தப்பட்டு, ஆரம்பத்தில் அவர் தம்மை பூமியின் மேல் ஒரு தீர்க்கதரிசி, தேவன் உருவத்தில் வெளிப்படுத்தினது போல தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, கண்ணால் பார்க்கக் கூடிய அதே அடையாளங்களை செய்து கொண்டு, தேவன் பூரணமாக தம் மக்களுக்குள் வாசஞ் செய்பவராக சபையை திரும்பவும் கூட்டிச் சேர்க்கும் நாளில். ஓ! மகிமை! மல்கியா 4ன் மூலம் வாக்களிக்கப்பட்டது. மற்ற வேத வாக்கியங்கள் மூலம் வாக்களிக்கப்பட்டது. நீங்கள் எங்கே தொழுது கொள்கிறீர்கள்? தேவனுடைய வீடு, அமர்ந்திருந்து நிகழ் காலத்தில். 111இப்போது சீக்கிரமாக, உண்மையிலேயே துரிதமாக இதைப் பார்ப்போம். இன்னும் பத்து நிமிடங்களில் கர்த்தருக்கு சித்தமானால், நாம் போய்விடுவோம். இந்த தேவனுடைய வீட்டிற்குள் அவர்களுடைய காலத்தில் உயிர்ப்பிக்கப்பட்ட சிலரைக் குறித்து இப்போது பார்ப்போம். ஏனோக்கு! (இன்னும் பத்து நிமிடங்களில் நாம் போய்விடுவோம், உங்களால் அவ்வளவு நேரம் பொறுத்துக் கொள்ளக் கூடுமானால்). பாருங்கள், ஏனோக்கு தன்னுடைய காலத்தின் தேவனுடைய ஜீவிக்கிற வார்த்தையாக இருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். ஒரு தீர்க்கதரிசி தேவனை பிரதிபலிக்கிறவனாக இருக்கிறான். எத்தனை பேர் அதை அறிவீர்கள்? பிரதிபலிக்கும் பொருள் தன்னயே பிரதிபலிப்பதில்லை பிரதிபலிக்கும் பொருள் பிரதிபலிப்பல்ல. பிரதிபலிக்கும் பொருளானது பிரதிபலிக்கத் தக்கதாக அங்கு வேறு ஏதோ ஒன்று அதன் மீது வந்து விழ வேண்டியிருக்கிறது. ஆகவே தேவனுடைய பிரதிபலிப்பின் நேர் கோட்டில் இருந்து கொண்டு, வார்த்தையாகிய கிறிஸ்துவினுடைய தம் சொரூபத்தை பிரதிபலிப்பதைத் தவிர, வேறெதையும் பிரதிபலிக்காது தேவனுடைய தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரம் தான் ஒரு தீர்க்கதரிசி பாருங்கள், வேறு எதுவும் அதைச் செய்ய முடியாது. நீ ஒரு பிரதிபலிக்கும் பொருளாக இருக்கிறாய் தீர்க்கதரிசி புஸ்தகத்தை புசிக்க வேண்டியிருந்ததன் காரணம் அதுதான். அவர் புஸ்தக சுருளை புசிக்க வேண்டியிருந்ததன் காரணம் அதுதான். அவர் அந்த காலத்திற்குரிய அந்த வார்த்தையை பிரதிபலிக்க வேண்டியிருந்தது. நீங்கள் புரிந்து கொண்டீர்களா? 112ஏனோக்கைக் கவனியுங்கள். சாயலாகக் காட்டப்பட்ட தேவனுடைய பரிபூரணமான பிரதிபலிக்கும் பொருள். தேவன் அவரிடம் செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடித்த பிறகு, அவரை மறுரூபப்படுத்தி, உயர எடுத்துக் கொண்டார். அவர் பிரதிபலித்திருந்த இயந்திர (mechanics) சாஸ்திரமானது. ஆவியானவரால் இயங்கு சாஸ்திரமாக மாறி, (dynamics) அவரை உயர எடுத்துக் கொண்டது. எலியாவின் நாட்களிலும் அதுவே நடந்தது. எலியா, அந்த பிரதிபலிப்பானது அவருடைய எலும்புவரை சென்றிருந்தது... தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்தினதின் மூலம் தேவனை தம்முடைய சரீரத்தில் பிரதிபலித்தார். அவர்கள் ஒரு மரித்த மனிதனை அதன் மீது கிடத்தியபோது அவன் திரும்பவும் உயிரடைந்து எழுந்தான். நாம் கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கும் வரை, நாம் அவருடைய சதையும் எலும்புமாக, இருக்கிறோம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சரி, அவர், நமக்காக மரித்தார் நாம் நம்முடைய சுயத்திற்கு மரித்து. இனி உலகத்திற்குரியவர்களாயிராதபடி அவரில் இருக்கும்படியாக, அவருடைய நாமத்தில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கிறோம். இரு குடும்பங்களுக்கும் பரலோகத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமம் சூட்டப்பட்டிருக்கிறது. அது எபேசியர் 1:21ல் உள்ளது. பரலோகத்திலுள்ள குடும்பம்... பரலோகத்திலுள்ள குடும்பம் எவ்விதம் பெயர் சூட்டப்பட்டுள்ளது? இயேசு. பூமியின் மேலுள்ள குடும்பத்திற்கு எவ்விதம் பெயர் சூட்டப்பட்டுள்ளது? நல்லது, இரத்தம் இருக்கும் தேவனுடைய வீடு அதுதான் அது சரியா? அதுதான் வாசல், அதுதான் கதவு, அவர் தம்முடைய நாமத்தை வைத்த ஸ்தலம் அதுதான். “அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார்”. நீங்கள் வசிக்கும் காலத்தை பற்றி எரியச் செய்யும், பிரதிபலிக்கும் வார்த்தை அதுதான். அவர் அவ்விதம் தான் இருந்தார். மோசே அவ்விதம் தான் இருந்தார். யாக்கோபு அதுவாகத் தான் இருந்தார். மற்றெல்லாரும் கூட அதுவாகத்தான் இருந்தார்கள், தேவனுடைய வார்த்தையைப் பற்றி எரியச் செய்து, தேவன் தம்மையே பிரதிபலிக்கும் பொருளாக இருந்தனர். அவ்வாறு தொடர்ந்து சென்று இயேசு கிறிஸ்து என்னும் தேவனுடைய பரிபூரண தற்சொரூபம். எல்லாவற்றிலும் சிறந்த சாதனைக்கு வந்தது. அவர் தம்மைப் பிரதிபலித்து மற்றெல்லாரையும் ஒரு மணவாட்டியாக எடுத்துக் கொள்ளத் தக்கதாக அவர் அடிக்கப்பட்டார். 113மோசே அவரில் இருந்தார். யோசுவா அவரில் இருந்தார். நீங்கள் அவரில் இருப்பீர்களானால், நீங்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே தேவனுடைய குடும்பத்தில் இருந்தீர்கள், நீங்கள் அவரோடு பாடுபட்டீர்கள், நீங்கள் அவரோடு மரித்தீர்கள், நீங்கள் அவரோடு சிலுவைக்கு சென்றீர்கள், நீங்கள் அவரோடு எழுந்தீர்கள், நீங்கள் இன்னமும் அவரோடு உள்னத ஸ்தலங்களில் வீற்றிருந்து, உலகத்தின் ஒளியாகிய, இந்த காலத்திற்குரிய செய்தியை உலகத்திற்கு பிரதிபலித்துக் கொண்டிருக்கிறீர்கள். “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்”, ஆனால் அது ஒரு ஸ்தாபன மரக்கால் கூடையால் மறைக்கப்பட்டால், அவர்கள் எவ்வாறு அதைக் காணப் போகிறார்கள்? உங்களுடைய பாரம்பரியங்களுக்காக, நீங்கள் அவ்வொளியை அவமாக்குகிறீர்கள்! முயற்சிப்பதன் மூலம்... ஸ்தாபனக்காரர்களே, ஒளியை உங்கள் சபையினின்று தூரத்தில் விலக்கி வைக்க முயற்சிக்கிறவர்களே, நீங்களும் உள்ளே பிரவேசிப்பதில்லை, அவர்களையும் பிரவேசிக்க விடுகிறதில்லை. ஆமென். நாம் நிறுத்துவோம். என்னே, நான் இன்னும் அதிக குறிப்புகளை வைத்துள்ளேன். இல்லை நாம் இவ்வாறு பேசிக் கொண்டே போகலாம்... ஓ, என்னே! இன்னும் ஐந்து நிமிடங்களை உடையவர்களாய் இருக்கிறோம். 114அந்த வாசல் யார் என்பதைப் பார்க்க விரும்புகிறீர்களா? தேவன் தம்முடைய நாமத்தை எங்கே வைத்தார். இயேசுவில், நீங்கள் எவ்வாறு அவருடைய நாமத்தில் பிரவேசிக்கிறீர்கள்? நீங்கள் எவ்வாறு அங்கே உட்பிரவேசிக்கிறீர்கள்? அங்கே ஞானஸ்நானம் பண்ணப்படுவதன் மூலமே! எப்படி? ஜலத்தினாலா? ஆவியினால்! “ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம்.” அது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாகும். தண்ணீர் ஞானஸ்நானமானது, நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டீர்கள் என்பதற்கு நீங்கள் அடையாளம் காணத் தக்கதாக, உங்கள் மக்களோடு ஐக்கியப்படுத்தியது. அது சத்தியமே. ஆனால் ஆவியின் ஞானஸ்நானமே காரியம். நான் இயேசுவின் நாமத்தை உங்கள் மேல் கூறி உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கலாம். அது காரியத்தை அவ்விதம் உருவாக்குவதில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒருமுறை உண்மையாகவே... நிஜமான வார்த்தை (வார்த்தை, இயேசு) உங்களுக்குள் அப்போது, சகோதரனே... செய்தியானது அப்போது உங்களுக்கு இரகசியமாய் இருக்காது, நீங்கள் அதை அறிவீர்கள், சகோதரனே, அதெல்லாம் உங்களுக்கு முன்பாக வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. அல்லேலூயா! தேவனுக்கு மகிமை உண்டாவதாக! ஆமென்! நான் அவரை நேசிக்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன். முன்பு அவர் நேசித்ததால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை... (அருமை தேவனே, இம்மக்களை நீர் சுகப்படுத்த வேண்டுமென்று நான் வேண்டுகிறேன், கர்த்தாவே, அவர்கள் ஒவ்வொருவரையும் சௌக்கியமாகச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. ஆமென்). ஓ! அன்பு! ஓ உம் காலங்கள் சிந்திய அந்த அருவியை, (அம்மிகச் சிறந்த சாதனையிலிருந்து) விசுவாசத்தால் நான் பார்த்ததிலிருந்து... மீட்கும் அன்பு என்பதே என் பொருளாயிருந்து வந்திருக்கிறது. 115நீங்கள் எப்படி...? தேவன் அன்பாயிருக்கிறார். “அன்பு கூருகிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்”. தெய்வீக, பரிசுத்தமான, அன்பு, அசுத்தமான அன்பல்ல; சுத்தமான, தூய்மையான, பரிசுத்த அன்பு. “வார்த்தையாகிய தேவன் மேல் அன்பு, நான் உனக்கு விரோதமாய் பாவஞ் செய்யாதபடிக்கு உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்”. ஓ! அது தாவீது கதறுவது. அவர் அருமையானவராக இல்லையா? நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? இப்போது, ஒரு வழி இருக்கிறது. ஒரு சுத்தமான, பரிசுத்தமான வழி, தேவன் உங்களை சந்திக்கத் தக்கதான ஒரே ஒரு சந்திக்கும் ஸ்தலம். “தேவனே, இப்போது, நான் ஒரு நல்ல மெதோடிஸ்டு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு நல்ல பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்தவன். நான் ஒரு நல்ல பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன்” என்று நீங்கள் சொல்வதால் அல்ல. இல்லை! வார்த்தையாகிய இயேசுவில் நீங்கள் இருப்பதால், இன்றைக்கு வெளிப்படுத்தப்படும் வார்த்தையின் பாகமாக இருப்பதால், இன்றைய செய்தி; லூத்தர் அல்ல, வெஸ்லி அல்ல, பெந்தெகொஸ்தே ஸ்தாபனமும் அல்ல, ஆனால் இதற்குள்ளாக வந்திருக்கும் பிரதிபலிப்பாகிய உங்கள் இயேசு. நீங்கள் அதற்கு திரும்பிப் போக முடியாது. அது உங்கள் பரிசுத்த அப்பத்துடன் புளித்த மாவை கூட்டுவதாகும் அது, “மனிதன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான், அதன் பருவத்தில்”. 116ஓ, கர்த்தராகிய இயேசுவே, மகத்தான தலைக்கல்லே, வாரும். அங்கே இரத்த சாட்சிகளாக மரித்த லூத்தரன்களின் தூசி அங்கே தொலைவில் கிடப்பதைப் பாரும்: அந்த மெதோடிஸ்டுகளைப் பாரும். அந்த பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தாரும் மற்றவர்களும் இப்போது வந்து, என்ன உண்மையான விநோதமான வருகை. தேவ சபைகளின் கூட்டத்தாரே, நீங்கள் சென்று ஸ்தாபனமாகிக் கொண்டீர்கள், தேவன் எதிலிருந்து உங்களை வெளியே கொண்டு வந்தாரோ, பன்றி தன் சேற்றிற்குத் திரும்புவது போல, நீங்கள் அதற்கே திரும்பிச் சென்றீர்கள். ஐக்கிய ஒருத்துவக்காரர்களே, பழைய ஜே.சி (J.C.) இயேசு கிறிஸ்துவின் பெந்தெகொஸ்தே சபைகளே, கறுப்பு நிறத்தவர்க்கு ஒன்று, நிற வேற்றுமையினிமித்தம் உங்களைப் பிரித்துக் கொண்டீர்கள். அதைச் செய்தவர்களாகிய நீங்கள் பிறகு உங்களை ஒன்றாக சேர்த்துக் கொண்டு அதை “ஐக்கியம்” என்று அழைக்கிறீர்கள். பிறகு ஸ்தாபனமாகிக் கொண்டு, மற்ற அசெம்பிளிகளைக் குறித்து வீண் சந்தடி ஏற்படுத்தினீர்கள். “நாய் தான் கக்கினதிற்கே திரும்பியதுபோல”, வாந்தியானது நாயை முதலிலேயே வெறுப்படையச் செய்ததானால் அதை மறுபடியும் வெறுப்படையச் செய்யாதோ? உங்கள் ஆகாரத்தை ஸ்தாபனங்களிலிருந்து வார்த்தைக்கு மாற்றுங்கள், கிறிஸ்துவோடு ஜீவியுங்கள். உங்களுக்கு வெட்கம். எனக்கோர் தந்தை உண்டு அங்கே, எனக்கோர் தந்தை உண்டு அங்கே, எனக்கோர் தந்தை உண்டு அங்கே, அந்த மறு கரையினிலே. என்றோ ஓர் ஒளிமயமான நாளிலே நான் சென்று அவரைக் காண்பேன், என்றோ ஓர் ஒளிமயமான நாளிலே சென்று அவரைக் காண்பேன், என்றோ ஓர் ஒளிமயமான நாளிலே நான் சென்று அவரைக் காண்பேன், அந்த மறு கரையினிலே. ஓ, அது ஓர் இனிய சந்திப்பாய் இருக்காதோ, அந்த சந்திப்பு... (வார்த்தை வார்த்தையிடம் செல்கிறது) (மணவாட்டி மேலே செல்லும்போது, வார்த்தைக்கு - வார்த்தை) ...இனிய சந்திப்பு, அந்த மறு கரையினிலே. ஓ, அவ்வொளிமயமான நாள் நாளையாக இருக்கலாம், அவ்வொளிமயமான நாள் நாளையாக இருக்கலாம், அவ்வொளிமயமான நாள் நாளையாக இருக்கலாம், அந்த மறு கரையினிலே. “உண்மையாகவே அவ்விதம் கூறுகிறீர்களோ, சகோதரர் பிரான்ஹாமே?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். 117ஆம், ஐயா! தங்கள் காலத்தில் லூத்தரன்களாக இருந்தவர்கள். தங்கள் காலத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்களாக இருந்தவர்கள், தங்கள், காலத்தில் பெந்தெகொஸ்தே இயக்கத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தவர்கள் (உண்மையான மக்கள், ஸ்தாபனத்தார் அல்ல); தங்கள் ஸ்தாபனமாகிய புளித்தமாவைச் சேர்த்த பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தினர் மரித்தார்கள். ஆனால் இந்த மெய்யான வார்த்தையானது தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. பாருங்கள். “அந்நாளிலே நான் பிதாவிலும் பிதா என்னிலும் நான் உங்களிலும் நீங்கள் என்னிலும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்” என்று இயேசு சொன்னது போலவே, இது எல்லாமே வார்த்தையாக உள்ளது. ஓ, அது ஓர் இனிய சந்திப்பாய் இருக்காதோ, (அவருடைய குமாரர்கள் அவருடைய வாசலில் கூடிச் சேரும்போது) ..... இனிய சந்திப்பு, அது ஓர் இனிய சந்திப்பாய் இருக்காதோ, அந்த மறு கரையினிலே. 118இப்போது, சபையே, நாம் இப்போது போதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நினைவில் கொள்ளுங்கள்; நீங்கள் இங்கிருந்து சென்ற பிறகு, உமியை விட்டு கடந்துபோக இப்போது ஆரம்பிக்கிறீர்கள், நீங்கள் கோதுமை மணிக்குள் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் குமாரனுடைய சமூகத்தில் இருங்கள். நான் சொல்லியிருப்பவைகளோடு கூட்ட வேண்டாம். நான் சொல்லியிருப்பவைகளை எடுத்துப் போடவேண்டாம். ஏனென்றால் பிதா எனக்குக் கொடுத்திருக்கிறபடியே எனக்குத் தெரிந்திருக்கிறவரை நான் சத்தியத்தைப் பேசுகிறேன். பாருங்கள்? அதோடு கூட்டாதீர்கள், நான் எதைச் சொன்னேனோ அதை மட்டும் கூறுங்கள். அதன் காரியம் என்னவென்றால், மக்களை வந்து கர்த்தராகிய, இயேசுவைத் தேட மட்டும் சொல்லுங்கள். பிறகு நீங்களும் அவருடைய பிரசன்னத்தில் தரித்திருங்கள். “ஓ, கர்த்தராகிய இயேசுவே, தேவனுடைய குமாரனே, நான் உம்மை நேசிக்கிறேன். கர்த்தாவே, என் இருதயத்தை காவல் காரும். எல்லா அழுக்கையும், உலகத்தின் ஆசையையும் எடுத்துப்போடும், இந்த தற்கால உலகிலே நான் உமக்கு முன்பாக பரிசுத்தமாய் ஜீவிக்கட்டும்”, என்று அவருடன் உங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நாம் ஜெபத்திற்கு நம் தலைகளை வணங்குவோமா? இப்போது, பார்ப்போம். நம்மை ஜெபித்து வழியனுப்பி வைக்க யாரையாவது தெரிந்தெடுத்து வைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால், நான் செய்கிறேன். மெய்யாக பயபக்தியாயிருங்கள். 119பிரியமுள்ள தேவனே, எங்கள் ஆவிக்குரிய ஆகாரத்தை நாங்கள் பெற்றுக் கொண்டதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். வார்த்தையாகிய ஜீவ சத்து, தேவனுடைய குமாரர்களை வளரச் செய்வதற்காக கர்த்தாவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அது வேறெவ்வித கதாபாத்திரங்களிலும் கிரியை செய்யாமல், தேவனுடைய குமாரர்களிலும் குமாரத்திகளிலும் மட்டுமே அது கிரியை செய்கிறது. ஆகவே நாங்கள் அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தேவனே, நாங்கள் உமக்கு செலுத்துகிறவர்களாக மட்டும் இருந்துவிடாது அதன் முலம் பயனடையவும் உம்மை வேண்டுகிறோம். நாங்கள் அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம், ஆனால் நிலையற்றோரையும், பாவிகளையும், ஸ்திரீகளையும், மனிதர்களையும், பையன்களையும், பெண்களையும் இக்காலத்தில் எங்கள் தேவனில் விசுவாசம் வைக்க (அன்போடு வழிப்படுத்த) முயற்சிக்க நாங்கள் பெலத்தை உபயோகிக்கட்டும். மக்கள் வாழும் மனோநிலையையும், நரம்பு தளர்வுற்ற பதட்டமான காலத்தையும் பார்க்கும்போது, கர்த்தாவே, அது அவர்களை புத்தியை இழக்கச் செய்வதைக் காண்கிறோம். வேத வாக்கியங்கள் கூறுவது, வாக்குறுதி அளித்து, அவ்வாறே நிறைவேறி வருகிறது. பெரிய பயங்கரமான காரியங்கள் பூமியின் மேல்வரும்; வெட்டுக் கிளியைப் போன்றவைகள் தங்கள் முடியை வெட்டி விட்ட ஸ்திரீகளை விடாது தொடரும், அவைகளுக்கு ஸ்திரீகளைப்போல நீண்ட கூந்தலிருக்கும். அவர்களிருக்கும் பலம் குன்றிய மனோ நிலையில், கர்த்தாவே, அவர்கள் வித்தியாசமாக பயங்கரமான காட்சிகளைக் கண்டு கன்மலைகளையும், மலைகளையும் நோக்கிக் கதறுவார்கள். தேவனே, உம்மைக் கனம் பண்ணத் தக்கதாக பிள்ளைகளைப் பெற்று வளர்க்காமல் நாய்களுக்கும் பூனைகளுக்கும் தாய்களாக இருக்கும் பெண்கள், தேவரீர் நீர் குழந்தைகளை அருளிய பெண்களும், அவைகளைப் பெற்று தாங்கள் விரும்பியதைச் செய்யத் தக்கதாக பிள்ளைகளை தெரு மீது விட்டுவிட்டவர்கள். கர்த்தாவே, தேவரீர் சிலுவைக்குச் செல்லும் வழியில் அப்பொழுது மலைகளை நோக்கி: “எங்கள் மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக் கொள்ளுங்களென்றும் சொல்லத் தொடங்குவார்கள்” என்று தேவரீர் சொன்னதில் வியப்பில்லை. 120மற்ற ஒவ்வொரு காரியமும் இந்த நேரத்தை நோக்கி நகர்வதை நாங்கள் காண்கிறோம். வேத வாக்கியங்கள் உறுதிப்படுத்தப்பட்டு, நிரூபிக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம், கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தப்படுவதை நாங்கள் எங்கள் சொந்தக் கண்களால் அதைப் பார்ப்பதுபோல், ஒரு நாளிலே எடுத்துக் கொள்ளப்படுதல் நடக்கும். “மனுஷகுமாரன் மகிமையோடு மேகங்கள் மேல் தம்முடைய பரிசுத்த தூதர்களுடன் வருவார். நாமும் அவரை சந்திக்க ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம்” என்ற வார்த்தையின் வெளிப்படுதலையும் நாங்கள் பார்ப்போம். அப்போது அது.... இப்போது அதைக் குறித்து கேட்கிறோம், அப்போது அதை எங்களுடைய சொந்தக் கண்களால், காண்போம். கர்த்தாவே, உம்மால் அருளப்பட்ட ஒரே ஸ்தலமாகிய அவரில், நாங்கள் காணப்படட்டும். அவரே பலியாக இருக்கிறார். நாங்கள் கேள்விப்பட்டதை இயேசு கிறிஸ்துவை, தேவனுடைய வீட்டிற்குள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக நாங்கள் அவரைக் கொண்டு வருகிறோம். அங்கே எங்களுடைய பலி ஏற்றுக் கொள்ளப்பட்டு நாங்கள் குடும்பத்திற்குள் கொண்டு வரப்படுகிறோம், ஏனென்றால் உலகத்தில் சிதறியிருந்த போதிலும், நாங்கள் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாகிறதற்கு உலகத்தோற்றத்திற்கு முன்பே குறிக்கப்பட்டிருந்தோம். பிதாவே, அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தேவன் அவர்களை உலகத்திலிருந்து தெரிந்தெடுத்திருக்கிறார் என்கிற சத்தியத்தை கண்டு கொண்ட பிறகு, ஓ, எவ்வாறு யாரும் அத்தகைய காரியத்திலிருந்து திரும்ப முடியும்? நான் இரட்சிக்கப்பட்ட நாளிலே இதில் பல லட்சக்கணக்கானோர் இழக்கப்பட்டார்கள். 121ஓ, மரிக்கும் ஆட்டுக்குட்டியே, நான் எவ்வாறு உமக்கு நன்றி கூற முடியும்? உமக்கு முன்பாக எவ்வாறு என்னுடைய இருதயம் போதிய பயபக்தியுள்ளதாக இருக்க முடியும்? பிரியமுள்ள, தேவனே, நான் உண்மையுள்ளவனாய் ஜீவிக்க எனக்கு உதவி செய்யும். உண்மையுள்ளவர்களாய் ஜீவிக்க என்னுடைய மக்களுக்கு உதவி புரியும். கர்த்தாவே, அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன். நீர்… தேவனே, எப்படியாகிலும், எனக்கு எப்படி என்று எனக்குத் தெரியாது... எப்படி கேட்பது, என்று கூட எனக்குத் தெரியவில்லை, கர்த்தாவே, நான் அதை சரியான முறையில் கேட்காமலுமிருக்கக் கூடும். ஆனால் கர்த்தாவே, நீர் அறிவின்மையை மன்னித்து என் இருதயத்தை மட்டும் நோக்கும். அவர்களில் ஒருவராவது, ஒருவராவது இழந்து விடப்படக் கூடாதென்று நான் ஜெபிக்கிறேன். பிதாவே. அவர்களை, ஒவ்வொருவரையும், உமக்காக நான் எடுத்துக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான்.... நீங்கள் அவரை நேசிப்பீர்களானால், நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூறுங்கள். ஒருவர் மற்றவரோடு கைக்குலுக்குங்கள்.